ஸ்காட்ச் விஸ்கி மட்டுமே (கொஞ்சம் ஓவரோ?) மட்டுமே குடிக்கிற எங்களை லோக்கல் சரக்கு குடிக்க வச்ச லோக்கல் பாயை நாங்க கடுமையா கண்டிக்கிறோம்.!

பாதிக்க பட்ட முறையில் லோக்கல் பாய் சொல்வது எல்லாம் பரிதாமா தான் இருக்கு. ஆனா சம்பவம் நடந்த அன்னைக்கு தர்மபுரம்
ஆதினம் ஆர்ச் அருகில் ரோட்டிலேயே நாங்க ஃஃபிளாட். சைக்கிள் ஒரு பக்கம் இவர்கள் ஒரு பக்கம் கூஜா ஒரு பக்கம். அதெல்லாம் சரிதான். ஆனா சரக்கு பத்தமா அந்த கூஜாவா டினோசர் தான் உடைச்சான். வாங்கறவன் ரெண்டு கூஜாவா வாங்கி இருந்தா இந்த பிரச்சனை வருமா?

ஸ்காட்ச் விஸ்கி மட்டுமே (கொஞ்சம் ஓவரோ?) மட்டுமே குடிக்கிற எங்களை லோக்கல் சரக்கு குடிக்க வச்ச லோக்கல் பாயை நாங்க கடுமையா கண்டிக்கிறோம்.

சரக்கு ஏடாகூட ஆகி பார்வை போயிருந்தா என்ன ஆவரது? டிநோசர்க்கு ஏற்கனேவே பாதி பார்வை தான்.

சரி. இப்போ ஸ்பான்சர்
மேட்டருக்கு வருவோம். நான் முடிவு பண்ண ஸ்பான்சர் ஏற்கனவே பாதி நாள்தான் கிளாசுக்கு வருவான். அவன் ஊரு நெய்வேலி. அவன் நல்ல செஸ் விளையாடுவான். நான் அவன்கிட்டே டெய்லி போய் விளையாடி தோத்துட்டு வருவேன். (எப்போவாவது ஜெயிக்கிற மாத்ரி இருந்தா கூட பிளான் பண்ணி தோதுடுவேன்). அவன் ஒரு நாள் மாப்ளை இப்டி பத்து நாளா டெய்லி வந்து தோத்துட்டு போறியே.. உனக்கு வெக்கவே இல்லையானு ஒரு கேள்வி கேட்டான். நானும் மாம்ஸ் , நான் என்ன ரோட்லே போரவன்கிட்டே யா தோக்றேன். உங்கிட்டே தானா தோக்றேன் , அப்டின்னு அவனை செஸ் ஆனந்த் , விளாடிமிர் அளவுக்கு கொண்டு போயிட்டேன். அவன் அப்டியே மெல்ட் ஆகி , என்னை ஹோட்டலுக்கு கூப்டு போய்டான். இதான் எனக்கு ஸ்பான்சர் செட் ஆன கதை.

அப்புறம் சினிமா, ஒயின் ஷோப்னு வாழ்க்கை நல்லா போக ஆரம்பிச்சது. ஆனா டினோசர் நிலைமை மோசமாயிட்டு. அவனக்கு புரோட்டா வாங்கி குடுத்து கட்டுபடி ஆகததுனலே அவனை எல்லோரும் கை விட்டுட்டனுங்க.

இதுக்கு தான் ஓவரா ஆட கூடாதுங்கறது. அப்பரம் தான் செலவுக்கு பணம் இல்லாமே, டினோசர் ஒரு மாஸ்டர் பிளான் போட்டான். அதை அப்பரம் பாப்போம்.

Comments

  1. ” சரக்கு ஏடாகூட ஆகி பார்வை போயிருந்தா என்ன ஆவரது? டிநோசர்க்கு ஏற்கனேவே பாதி பார்வை தான் “
    உங்களை நம்பி நானும் கொடுத்தேனே. எதாவதாகியிருந்தால் நானல்லவா உள்ளே போயிருப்பேன்..
    சிகப்பு பனியன் போட்டு சிரிக்கிரியே கோணச்சி எதாவது எழுது..
    யோவ் யாராவது கமெண்ட் எழுதுங்கப்பா


    லோக்கல் பாய்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வ குவாட்டர் கட்டிங் - விமர்சனம்

ஓட்ஸ் கஞ்சி குடித்தவனின் ஓலம்..!