தியேட்டர் க்கு வெளியிலே சூர்யா தேவா ன்னு டயலாக் பேசினதை கேட்டு ஏமாந்துட்டேன்

இப்போ சொல்ல போறதும் ஒரு மானங்கெட்ட சம்பவம் தான். ஒரு முறை நானும் டினோசரும் சினிமாவுக்கு போனோம். இப்போவும் டினோசர் தான் ஸ்பொன்சர். படம் ஆரம்பிக்க அரைமணி நேரம் முன்னாலேயே போய் கவுண்டேர்லே நின்னு பேசிட்டு இருந்தோம். (வெளிலே இருந்து மட்டும் என்ன கிழிக்க போறோம்). நல்லாத்தான் பேசிட்டு இருந்தோம். கரெக்டா பெல் அடிச்சு டிக்கெட் வாங்கும் போது டினோசர் மட்டும் ஒரு டிக்கெட் வாங்கிட்டு உள்ளே போய்ட்டான். நான் அப்டியே ஷாக் ஆயிட்டேன். எனக்கு இந்த மாத்ரி செருப்படி பழகினதலே டிக்கெட் குடுக்கிறவன் கிட்டே , நண்பன் சும்மா இப்டித்தான் எதாவது ஜாலிக்காக பண்ணுவான் பாருங்க இப்போ வந்துடுவான் சொல்லிட்டுஇருந்தேன். அவனும் அஞ்சி நிமிஷத்து அப்பரம் வந்தான். நான் டிக்கெட் குடுகிரவன் கிட்டே , நான் சொன்னேன் இல்லன்னு சொல்லிட்டு இருந்தேன். வந்தவன் அவன் கிட்டே இவனை யாருனே எனக்கு தெரியாது, உள்ளே விடாதிங்கனு சொல்லிட்டான். Aஅப்புறம் கடுப்பு ஆயி தியேட்டர் லேருந்து வெளியே வந்து ... அதான் இல்லை, சும்மா கெளரவம் படத்திலே வர சிவாஜி மாத்ரி மெய்ண்டைன் பண்ணி வெயிட் பண்ணேன். அப்பரம் பாத்து நிமிஷத்து அப்பரம் வந்து டிக்கெட் எடுத்தான். அப்போவே முடிவு பண்ணிட்டேன், இவனை பழிக்கு பழி வாங்கனும். அவன் என்கிட்டே மாட்டின கதையே அப்பரம் சொல்றேன். தியேட்டர் க்கு வெளியிலே சூர்யா தேவா ன்னு டயலாக் பேசினதை கேட்டு ஏமாந்துட்டேன்.

Comments

Popular posts from this blog

வ குவாட்டர் கட்டிங் - விமர்சனம்

ஓட்ஸ் கஞ்சி குடித்தவனின் ஓலம்..!