மெண்டல்…. பெயர் விளக்கம்

மெண்டல்….

இந்தப்பெயருக்கு இவ்வளவு பொருத்தமானவன் இவனைத்தவிர வேறு யாரும் இருக்கமுடியாது. இப்பெயரை இப்பொழுது வரை கட்டிக் காப்பாற்றிவருபவன். இவனைப்பற்றி இங்கு சொல்லவில்லை என்றால் எனக்கு இந்த ஜென்மப்புண்ணியம் கிடைக்காமல் போய்விடும்…

வாழ்க்கையில் ஒரு குறிக்கோள் இல்லாமல் வாழ இவனிடம் தான் கற்றுக்கொண்டேன்.

யாரிடமும் எளிதில் பழகிவிடுவான். இயற்கையிலேயே வெள்ளை மனம் கொண்டவன். ( என் வீட்டில் இவனைக்காட்டி நிறைய பணம் வாங்கி ஜாலியாக செலவு செய்துள்ளேன். இவன் ஆதரவற்றவன். இவன் படிப்புக்கு நாங்கள் எல்லோரும் தான் உதவுகிறோம் என்று... அதற்காக இப்பொழுது அவனிடம் மன்னிப்புக்கோருகிறேன். ஏனென்றால் நான் ஒரு ஜென்டில்மேன்).

அப்பொழுது ஜெண்டில்மேன், காதலன் போன்ற படங்கள் வந்த சமயம். ஒசியிலேயே படத்தை பலமுறைப்பார்த்து 2,3 ஸ்டெப் டான்ஸ் கற்றுக்கொண்டு, டேய் இதைப்பாரேன்..இதைப்பாரேன் என்று எல்லோரிடமும் ஆடி காண்பித்து உயிரை வாங்குவான். டைனோசர் இவனை உசுப்பேற்றிவிட்டு காலேஜ் புரோகிராமிலும் மேடையில் ஆடி எங்கள் வகுப்பில் உள்ள எல்லோரின் மானத்தையும் வாங்கினான். (அதே பாடலுக்கு ஒரு ஜூனியர் மேடையில் ஆடியதைப்பார்த்த பிறகு தான் இனி படம் வெளுக்காது என்று ஆடுவதை நிறுத்தினான் (நாங்கள் செய்த புண்ணியம்)

இவனின் லீலைகள் ஒன்றல்ல, ரெண்டல்ல… நிறைய தொடரும்..

இப்படிக்கு

லோக்கல் பாய்.

Comments

Popular posts from this blog

நண்பனுக்கு கடிதம் - 1

வ குவாட்டர் கட்டிங் - விமர்சனம்

நண்பன் பொட்டி சிவாவுக்கு ஒரு கண்ணீர் கடிதம்..!