Posts

Showing posts with the label local boy

மயிலை டூ சென்னை...சென்னை டூ மயிலை

Image
ஓவர் டூ சென்னை... வாழ்வில் பல கனவுகளோடு எல்லோரையும் போலவே நானும் வேலை தேடி சென்னைக்குச் சென்றேன். வீட்டில் உள்ளவர்கள்,உறவினர்கள் மற்றும் லோக்கல் நண்பர்கள்,நண்பிகள் எல்லோரிடமும் சொல்லிவிட்டு பந்தாவாக எனது நண்பர்கள் சென்னையில் நல்ல வேலையில் இருக்கிறார்கள், எனக்கும் வேலை ரெடியாக இருக்கிறது என்று பீலா விட்டுவிட்டு டை கட்டிக்கொண்டு A/c யில் உட்கார்ந்து வேலை செய்வது போல் பல கனவுகளுடன் மெண்டல் கொடுத்த அட்ரஸை நோக்கி கிளம்பினேன். மாம்பலத்தில் அவர்கள் கொடுத்த அட்ரஸில் சரியாக போய் சேர்ந்தேன். அங்கு போய் சேர்ந்த பிறகு தான் தெரிந்தது. ஒரு ஜீவன்(மெண்டல்) உழைத்து ஒன்பது ஜீவன் சாப்பிட்டுக்கொண்டிருந்தது (வெட்டியாக வேலை தேடிக்கொண்டிருக்கிறோம் என்ற பெயரில் ). மெண்டல் தான் பாசக்கார பயலாச்சே அங்கும் டைனோசர் கட்டுப்பாட்டில் தான் இருந்தான். நான் போன அன்று எவனும் ஒன்றும் சொல்லவில்லை, நன்றாக 3 வேளையும் வாங்கி சாப்பிட்டோம்.( அங்கு நான் ஏழையாகும் வரை). 2 நாட்களுக்கு பிறகு தான் தெரிந்தது இவர்களின் உண்மை நிலை. மெண்டல் காலையிலேயே எழுந்து எல்லோருக்கும் சப்பாத்தி ரெடி பண்ணி, பக்கத்தில் இருந்த அய்யர் கடையில் ஒரு சர்வர...

பிக்னிக் வித் பார்ட்டி

ஒரு செமஸ்டர் ரிசல்டில் எங்களில் ஒருவன் (பல வருடமாக ஒரே கிளாஸை டீஃபார் ஆகி படித்தவன்) வகுப்பிலேயே முதல் மாணவனாக வந்தான். கொஞ்சம் பணக்காரன் கூட. வழக்கம்போல் அவனை போட்டு பூஸ்ட் பார்ட்டிக்கு ஏற்பாடு செய்தார்கள் மெண்டலும் டினோசரும். இது கொஞ்சம் வித்தியாசமாக எப்படியென்றால் பிக்னிக் வித் பார்ட்டி. அதாவது அருகில் உள்ள காரைக்கால் சென்று மருந்து சாப்பிட்டு விட்டு வருவது. ஏற்பாடுகள் எல்லாம் ரெடி. அவன் ஜீப் எடுத்து வந்திருந்தான். சுமார் 10 பேர் என்று நினைக்கிறேன். காரைக்கால் புறப்பட்டு சென்றோம். நாங்கள் படித்தவர்கள் அல்லவா? முன்னேற்பாடுகள் எல்லாம் பக்காவாக ஏற்பாடு செய்திருந்தோம். அதாவது ஜீப்பை ஒட்டுவதற்கு ஒரு எக்ஸ்ட்ரா டிரைவர். ( ஏனென்றால் நாங்கள் ஃபிளாட்டானால் வண்டியை ஒட்டி வருவதற்காக.) மேலும் எங்கள் குரூப்பில் ஒருவன் சொந்த மெடிக்கல் ஷாப் வைத்திருந்தான். அவன் நிறைய மாத்திரை எல்லாம் எடுத்து வந்திருந்தான். ஏனென்றால் யாரும் வாமிட் எடுத்துவிடக்கூடாது என்று. பூஸ்ட் பார்ட்டி ஆரம்பம் ஆனது. வழக்கம் போல் எங்கள் மருத்துவர் ஐயா அதான் மருந்து மாத்திரை எடுத்து வந்தவன் தான் முதல் போனி, வாமிட் கம் ஃபிளாட் ( ...

ஒரு மாலை இளவெயில் நேரம், அழகான இலையுதிர் காலம். சற்று தொலைவிலே

நாங்கள் எப்பொழுதும் காலேஜ் முடிந்ததும் மாயவரம் பஸ்ஸ்டாண்ட்க்கு வந்து ஸ்கூல் பெண்களை எல்லாம் வீட்டிற்கு பத்திரமாக அனுப்பிவைக்கும் வேலையை காண்ட்ராக்ட் எடுத்திருந்தோம். ஒருநாள் எங்கள் கடமையை செய்துகொண்டிருக்கும் பொழுது பஸ்ஸ்டாண்டே ஒரே பரபரப்பாக இருந்தது. என்ன ஏது என்று சுதாரிப்பதற்குள் எங்களை துரத்த ஆரம்பித்தார்கள் அங்கிள்களும் ஆண்டிகளும். இதில் எனது நண்பர்கள் சிலருக்கு லத்தி அடி வேறு ( புரிந்திருக்கும் என நினைக்கிறேன்) கண்மூடி கண் திறப்பதற்குள் பஸ் ஸ்டாண்டே பளிச் என்று இருந்தது. இதில் எனது வாகணம் வேறு பஸ் ஸ்டாண்ட் உள்ளே மாட்டிக்கொண்டது. நானோ சிறிது தொலைவில் இருந்த விஜயா தியேட்டர் வரை தலை தெறிக்க ஒடி இருந்தேன் ( லோக்கல் பாய்க்கே இந்த நிலை). அந்த சமயத்தில் பஸ்ஸ்டாண்ட் உள்ளே கடை வைத்திருக்கும் நண்பர் ஒருவர் வந்தார். நான் அவரிடம் நடந்த சம்பவத்தை கூறி அவருடன் சேர்ந்து கடை உரிமையாளர் போல் வேஷம் போட்டு பஸ்ஸ்டாண்ட் உள்ளே வந்தேன். அப்பொழுது நண்பர் கூறினார் காலையில் எவனோ ஒரு நல்லவன் ஒரு ஸ்கூல் பெண்ணிடம் மிகவும் மோசமாக நடந்துகொண்டதால் காலையில் இருந்தே ஒரே ரெய்டு என்று சொன்னார். சரி எனது நண்பர்கள் ...

சத்தியவான்....... மெண்டல்

Image
வேறொன்றுமில்லை முன்பே சொல்லி இருந்தோம் அல்லவா நானும் மெண்டலும் வொர்க்புக் வாங்குவதற்காக சிவகாசி சென்று வந்தோம் என்று. அதன் உண்மை நிலவரம் தான் இது.( நண்பர்களுக்கு நான் எவ்வளவு நல்லவன் என்று தெரியபடுத்தவேண்டாமா) கிளாஸ் வாத்தியார் உங்களுக்கு அட்டெண்டன்ஸ் தருகிறேன் மற்ற மாணவர்களிடம் வசூல் செய்து சிவகாசி சென்று புக் வாங்கி வருமாறு கூறினார். இது போதாதா எங்களுக்கு உடனே அந்த பிராஜக்ட்க்கு பிள்ளையார்சுழி போட்டோம். மெண்டல் டைனோசரை விட்டு என்னிடம் வந்து ஐக்கியமானான்.( சனி யாரை விட்டது) பழைய புக்கில் அச்சிடப்பட்ட விலை 65ரூபாய். மொத்தம் 80 பேர்(18 பெண்கள் உட்பட்) கணக்குப்போட்டுக்கொள்ளுங்கள். பணத்தை வசூல் செய்துக்கொண்டு சிவகாசி சென்றால் அங்கு புக்கின் விலை வெறும் 23 ரூ தான். (அச்சிட்ப்பட்டதோ 65ரூபாய்) மெண்டல் வேதாளம் சும்மா இருக்குமா? சூப்பர் ஐடியா கொடுத்தது. அதாவது மீதிப் பணத்தை எடுத்துக்கொண்டு நாம் குற்றாலம் போவோம். அங்கிருந்துவிட்டு பிறகு ஊர் போவோம் என்று. ஏன் லேட் என்று கேட்டால் புக் வர லேட்டாகிவிட்டது என்று சொல்வோம் என்றான். நான் தான் நல்லவனாயிற்றே எவ்வளவோ மறுத்தும் கடைசியில் ம...

அன்பான நண்பர்களுக்கு,

அன்பான நண்பர்களுக்கு, தமிழில் டைப் செய்ய இன்னும் தெரியாமல் இருக்கிறீர்களா, கவலையே வேண்டாம். NHM Writer என்ற Software ஐ download பண்ணி அதை கம்யூட்டரில் Install பண்ணுனால் நீங்கள் நினைக்கும் பொழுது எல்லாம் தமிழில் டைப் செய்யலாம். அதற்கான லிங்க்... http://software.nhm.in / Products/NHMWriter/tabid/55 / Default.aspx Note: Type செய்யும்பொழுது கீழே உள்ள Taskbar ஐ கிளிக் பண்ணி Alt + 2 செலக்ட் செய்துக்கொள்ளுங்கள். சரியாக வேலை செய்யவில்லை என்றால் வேர்ட் டாகுமெண்ட் ஒப்பன் பண்ணி பிறகு Alt + 2 செலக்ட் செய்து தங்கிலீசில் டைப் செய்யலாம். எ.கா.: அம்மா = ammaa , பிறகென்ன copy and paste தான். இனியாவது கமெண்ட்ஸ் எதிர்பார்க்கலாமுல்ல.. பாவமய்ய மெண்டல் இரவு கண் முழித்து அப்டேட் செய்கிறான்யா, இப்பொழுதாவது மதிங்கய்யா... அவனை(ரை). லோக்கல் பாய் ( படித்தவன் தான்)

லோக்கல் பாய் …….( ஒரு கூஜாவால் அசிங்கப்பட்டது)

மெண்டலுக்கும் டைனோசருக்கும் யாரும் மாட்டவில்லை என்றால் அவர்களின் பார்வை என் மீது தான். ஏனென்றால் நான் தான் லோக்கல் பாயாச்சே. ஒரு ஞாயிறு மாலை, இருவரும் சைக்கிளில் படையெடுத்து என்னை தேடி வந்தார்கள். முதலில் ½ கேட்டார்கள் இல்லை என்றதும் ¼ பிறகு நாட்டுச்சரக்கு வரை இறங்கி வந்தார்கள். என்னுடையே நிலையோ அப்பொழுது அவர்களிடம் சிகரெட் கேட்டு நின்றேன். அப்பொழுதுதான் மெண்டல் டினோசர் காதில் ஏதோ ஒதினான். அது வேறொன்றுமில்லை. என்னுடைய நண்பன் ஒருவன் நாட்டுச்சரக்கு மொத்தவியாபாரி அவனிடம் வாங்கிக்கொடு என்றார்கள். நான் எவ்வளவோ மறுத்தும் அவர்கள் தான் வென்றார்கள். நண்பனிடம் இவர்களின் நிலையை விளக்கினேன். முதலில் மறுத்தான் பிறகு எங்களின் அரிப்பு தாங்கமால் , கலவை கலக்காத சரக்கை ஒரு கூஜாவில் கொடுத்து அதில் 10 மடங்கு தண்ணீர் கலந்துகொள்ளச்சொன்னான். அதை கலந்து குடித்தால் 10 நாள் மூன்று பேர் மூன்று வேளை வைத்து குடிக்கலாம். நண்பனோ மிகவும் கவணமாக எடுத்துசெல்லும்படியும் கூஜாவை நாளை கொண்டு வந்து கொடுக்கும்படி சொல்லி அனுப்பினான். இவர்களும் மகிழ்ச்சியுடன் சைக்கிளில் கிளம்பிச்சென்றார்கள். அதான் குரங்கு அப்பம் தின்ற ...

மறக்க முடியாத நண்பன் வீட்டுக் கல்யாணம்…

மறக்க முடியாத நண்பன் வீட்டுக் கல்யாணம்… இந்நண்பனை நாங்கள் எல்லோரும் ஜமுக்கு என்று தான் கூப்பிடுவோம். சும்மா பழம் மாதிரி இருப்பான். ( கொஞ்சம் அதிகமாக அளந்து விடுவான். எங்களின் வறுமை மற்றும் விதி பொறுத்துக்கொள்ள வேண்டிய சூழ்நிலை) அவன் எங்கள் எல்லோரையும் மதித்து அவன் சகோதரியின் கல்யாணத்திற்கு அழைத்திருந்தான். எங்கள் அமைச்சரவையிலும் எல்லோரும் போவதாக முடிவெடுத்து அவனிடமே பஸ்ஸிற்கு காசெல்லாம் வாங்கி ரெடியாகிவிட்டோம். சுமார் 10 அமைச்சர்கள் என்று நினைக்கிறேன். பரிசு பொருள் வாங்குவதற்காக வசூல் ஆனத்தொகை வெறும் 75 ரூபாய். அதிலும் டினோசர் கமிஷன் அடித்தான்.( என்ன ஒரு பிளய்ன் சிகரெட் இதற்காக எனக்கும் அவனுக்கும் சண்டை வேறு). எத்தனையோ கல்யாணத்தில் கலந்திருந்தாலும் இந்த கல்யாணத்தை எங்களால் மறக்கமுடியாது. அன்று பா.ம.க வினர் பந்த் அறிவித்திருந்தார்கள். சும்மாவே மரத்தை வெட்டுவார்கள் இதில் அவன் இருக்கும் ஊர் ஜெயங்கொண்டம் அவர்களின் கோட்டை வேறு. நாங்கள் பயப்படுவோமா, ஆம்பளை சிங்கமுல்ல… டிராக்டர் பிடித்து, லாரி மாறி, கொஞ்சம் நடந்து அந்த ஊர் போய் உயிருடன் சேர்ந்ததே பெரும்பாடாகி விட்டது. அவனது அப்ப...

இதை படிக்கும் நண்பர்களுக்கு…..ஒரு எச்சரிக்கை…

தயவுசெய்து எல்லோரும் எதாவது எழுத முயற்சியுங்கள்….இன்னுமா ஏதும் எழுத கத்துக்காம அப்படியே புண்ணாக்கா இருக்கீங்க ( எப்படிடா மெண்டல் , இது போதுமா) இதற்கு டைனோசர் விதிவிலக்கு ( அவன் எழுத படிக்க தெரியாதவன் என்பது நம் எல்லோருக்கும் தெரிந்ததே. ) நாகரீகம் கருதி இத்துடன் விடுகிறேன். Atleast Photo வாவது Followerல் போடுங்கப்பா…….…!) லோக்கல் பாய்

கொசு..!.….(கடுகு சிறுத்தாலும் காரம் குறையாதவன்)

கொசு..! எத்தனை காயில் கொளுத்தினாலும் இவனை மட்டும் கொல்லவே முடியலை..! கள்ளனை நம்பினாலும் நம்பலாம் ஆனால் ……………………நம்பக்கூடாது என்பார்கள் (சும்மா விளையாட்டுக்கு மாப்ள, கோவிச்சுக்காத) முகத்தை பாவமாக வைத்திருப்பான். எங்களிடமிருந்து கொஞ்சம் தள்ளியே இருப்பான். ஏனென்றால் அவன் அப்பொழுது வயதுக்கு வரவில்லை. (ஆனா பிஞ்சிலேயே பழுத்தவன்) பிறகு எங்களின் வீக்னஸை எல்லாம் தெரிந்துக்கொண்டு எங்களை எல்லாம் தூக்கிச் சாப்பிட்டவன். கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது போல் அவ்வப்பொழுது சில நல்ல ஐடியாவும் குடுப்பான் ( எப்படி உருப்படாமல் போவது என்பதற்கு). என்னுடைய அழிவில் இவனுக்கும் பங்குண்டு. (நீ எங்க ஊரு மாப்பிள்ளை என்று சொல்லியே என்னைக் கவிழ்த்தவன்..) ம்.. மண்டையனையும், இவனையும் மறக்க முயற்சிப்பது நல்லது.. ஏனென்றால் இனியாவது நான் உருப்படுனுமுல்ல.. எத்தனை நாளைக்குத்தான் இப்படியே…………..என்ன சொல்றீங்க நண்பா, லோக்கல் பாய்

மெண்டல்…. பெயர் விளக்கம்

மெண்டல்… . இந்தப்பெயருக்கு இவ்வளவு பொருத்தமானவன் இவனைத்தவிர வேறு யாரும் இருக்கமுடியாது. இப்பெயரை இப்பொழுது வரை கட்டிக் காப்பாற்றிவருபவன். இவனைப்பற்றி இங்கு சொல்லவில்லை என்றால் எனக்கு இந்த ஜென்மப்புண்ணியம் கிடைக்காமல் போய்விடும்… வாழ்க்கையில் ஒரு குறிக்கோள் இல்லாமல் வாழ இவனிடம் தான் கற்றுக்கொண்டேன். யாரிடமும் எளிதில் பழகிவிடுவான். இயற்கையிலேயே வெள்ளை மனம் கொண்டவன். ( என் வீட்டில் இவனைக்காட்டி நிறைய பணம் வாங்கி ஜாலியாக செலவு செய்துள்ளேன். இவன் ஆதரவற்றவன். இவன் படிப்புக்கு நாங்கள் எல்லோரும் தான் உதவுகிறோம் என்று... அதற்காக இப்பொழுது அவனிடம் மன்னிப்புக்கோருகிறேன். ஏனென்றால் நான் ஒரு ஜென்டில்மேன்). அப்பொழுது ஜெண்டில்மேன், காதலன் போன்ற படங்கள் வந்த சமயம். ஒசியிலேயே படத்தை பலமுறைப்பார்த்து 2,3 ஸ்டெப் டான்ஸ் கற்றுக்கொண்டு, டேய் இதைப்பாரேன்..இதைப்பாரேன் என்று எல்லோரிடமும் ஆடி காண்பித்து உயிரை வாங்குவான். டைனோசர் இவனை உசுப்பேற்றிவிட்டு காலேஜ் புரோகிராமிலும் மேடையில் ஆடி எங்கள் வகுப்பில் உள்ள எல்லோரின் மானத்தையும் வாங்கினான். (அதே பாடலுக்கு ஒரு ஜூனியர் மேடையில் ஆடியதைப்பார்த்த பிறகு த...