ஒரு மாலை இளவெயில் நேரம், அழகான இலையுதிர் காலம். சற்று தொலைவிலே

நாங்கள் எப்பொழுதும் காலேஜ் முடிந்ததும் மாயவரம் பஸ்ஸ்டாண்ட்க்கு வந்து ஸ்கூல் பெண்களை எல்லாம் வீட்டிற்கு பத்திரமாக அனுப்பிவைக்கும் வேலையை காண்ட்ராக்ட் எடுத்திருந்தோம்.

ஒருநாள் எங்கள் கடமையை செய்துகொண்டிருக்கும் பொழுது பஸ்ஸ்டாண்டே ஒரே பரபரப்பாக இருந்தது. என்ன ஏது என்று சுதாரிப்பதற்குள் எங்களை துரத்த ஆரம்பித்தார்கள் அங்கிள்களும் ஆண்டிகளும். இதில் எனது நண்பர்கள் சிலருக்கு லத்தி அடி வேறு ( புரிந்திருக்கும் என நினைக்கிறேன்)

கண்மூடி கண் திறப்பதற்குள் பஸ் ஸ்டாண்டே பளிச் என்று இருந்தது. இதில் எனது வாகணம் வேறு பஸ் ஸ்டாண்ட் உள்ளே மாட்டிக்கொண்டது. நானோ சிறிது தொலைவில் இருந்த விஜயா தியேட்டர் வரை தலை தெறிக்க ஒடி இருந்தேன் ( லோக்கல் பாய்க்கே இந்த நிலை).

அந்த சமயத்தில் பஸ்ஸ்டாண்ட் உள்ளே கடை வைத்திருக்கும் நண்பர் ஒருவர் வந்தார். நான் அவரிடம் நடந்த சம்பவத்தை கூறி அவருடன் சேர்ந்து கடை உரிமையாளர் போல் வேஷம் போட்டு பஸ்ஸ்டாண்ட் உள்ளே வந்தேன்.

அப்பொழுது நண்பர் கூறினார் காலையில் எவனோ ஒரு நல்லவன் ஒரு ஸ்கூல் பெண்ணிடம் மிகவும் மோசமாக நடந்துகொண்டதால் காலையில் இருந்தே ஒரே ரெய்டு என்று சொன்னார்.

சரி எனது நண்பர்கள் சிதறி ஓடினார்களே அவர்களின் நிலை என்ன என்று எனக்கு கவலை வந்து அவர்களை தேட ஆரம்பித்தேன்.

என்ன கொடுமை சார் அது

ஈமொ சென்னை செல்லும் பஸ்ஸில் உட்கார்ந்திருந்தான்.( ஓரு நயா பைசா கூட பாக்கெட்டில் இல்லாமல்)

கட்டையனோ சம்பந்தமே இல்லாமல் ஒரு கிழவியின் பழ வண்டியைப்பிடித்து கூவி கூவி விற்றுக்கொண்டிருந்தான்.(அவன் உருவத்துக்கேத்த வேலையை சமயோசிதமாக அந்த சூழ்நிலையிலும் தேர்ந்தெடுத்திருந்தான்)

ஃப்ங்க் என்ற நண்பனை ஜீப்பின் உள்ளே பிடித்துவைத்திருந்தார்கள்

மற்ற நண்பர்களோ மிஸ்ஸிங்..

அங்கே நிலைமையே சரியில்லை. அப்புறம் என்ன விடு ஜூட் .. எஸ்கேகேகேகேகேப்ப்ப்ப்ப்..

ஒரு மாலை இளவெயில் நேரம், அழகான இலையுதிர் காலம் சற்று தொலைவிலே .... என்ற பாட்டை கேட்டாலே அந்த நினைப்பு தான் பயமுறுத்துகிறது.

லோக்கல் பாய்.

Comments

  1. காலெஜ் முடிஞ்சா வீட்டுக்கு போகாம பஸ் ஸ்டாண்ட்லெ என்னடா பொருக்கிற வேலை. அப்புறம், உன் வாடகை சைக்கிளை வாகனம்னு சொல்லி சமாளிச்சியெ..! அது சூப்பர் டா மாம்ஸ்..! கீப் இட் அப்..!

    மெண்டல்

    ReplyDelete
  2. மாம்ஸ் , நீயும் இந்த அளவிற்கு நன்றாக சுவராசியமா எழுதுவதற்கு வரவேற்கிறோன் நன்றாக கப்சா உட்ற மாமு (அது என்ன வாகனம் ஹி ஹி ஹி) இப்படித்தான் இருக்க வேண்டும்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நண்பனுக்கு கடிதம் - 1

வ குவாட்டர் கட்டிங் - விமர்சனம்

நண்பன் பொட்டி சிவாவுக்கு ஒரு கண்ணீர் கடிதம்..!