சத்தியவான்....... மெண்டல்


வேறொன்றுமில்லை முன்பே சொல்லி இருந்தோம் அல்லவா நானும் மெண்டலும் வொர்க்புக் வாங்குவதற்காக சிவகாசி சென்று வந்தோம் என்று. அதன் உண்மை நிலவரம் தான் இது.( நண்பர்களுக்கு நான் எவ்வளவு நல்லவன் என்று தெரியபடுத்தவேண்டாமா)

கிளாஸ் வாத்தியார் உங்களுக்கு அட்டெண்டன்ஸ் தருகிறேன் மற்ற மாணவர்களிடம் வசூல் செய்து சிவகாசி சென்று புக் வாங்கி வருமாறு கூறினார். இது போதாதா எங்களுக்கு உடனே அந்த பிராஜக்ட்க்கு பிள்ளையார்சுழி போட்டோம். மெண்டல் டைனோசரை விட்டு என்னிடம் வந்து ஐக்கியமானான்.( சனி யாரை விட்டது)

பழைய புக்கில் அச்சிடப்பட்ட விலை 65ரூபாய். மொத்தம் 80 பேர்(18 பெண்கள் உட்பட்) கணக்குப்போட்டுக்கொள்ளுங்கள். பணத்தை வசூல் செய்துக்கொண்டு சிவகாசி சென்றால் அங்கு புக்கின் விலை வெறும் 23 ரூ தான். (அச்சிட்ப்பட்டதோ 65ரூபாய்)

மெண்டல் வேதாளம் சும்மா இருக்குமா? சூப்பர் ஐடியா கொடுத்தது.

அதாவது மீதிப் பணத்தை எடுத்துக்கொண்டு நாம் குற்றாலம் போவோம். அங்கிருந்துவிட்டு பிறகு ஊர் போவோம் என்று. ஏன் லேட் என்று கேட்டால் புக் வர லேட்டாகிவிட்டது என்று சொல்வோம் என்றான். நான் தான் நல்லவனாயிற்றே எவ்வளவோ மறுத்தும் கடைசியில் மெண்டல் வேதாளம் தான் ஜெயித்தது.

இரண்டு நாட்கள் ஒரே கூத்து தான் போங்கள்....சொர்க்கத்திலேயே மிதந்தோம்.

இந்த மேட்டரை யாரிடமும் சொல்லக்கூடாது என்று மெண்டலிடம் சத்தியம் வேறு வாங்கியிருந்தேன்.

காலேஜ் வந்து எல்லோரிடமும் புக்கை கொடுத்தோம். அன்று தான் சகமாணவர்கள், மாணவிகள் எல்லோரும் எங்களையும் மதித்து நன்றி கூறினார்கள். நாங்களும் புளகாங்கிதம் அடைந்திருந்தோம்.

பேசபயந்த சக மாணவிகள் எல்லோரும் எங்களிடம் சகஜமாக பேசினார்கள். எங்களை நல்லவர்கள் என்று நினைத்து..
.

பொறுக்குமா டைனோசருக்கு, எங்களின் வசதி வாய்ப்பை பார்த்து அவனுக்கு சந்தேகம் வந்துவிட்டது. ஏதேதோ செய்துப்பார்த்தான் ஒன்றும் கண்டுபிடிக்கமுடியவில்லை. முயற்சித்தான் அவனுக்குத்தான் மெண்டலோட வீக்னஸ் தெரியுமே. ஒரு குவாட்டர் வாங்கிகொடுத்து உண்மையை எல்லாம் கறந்துவிட்டான். (பாவி பய போதையிலும் DETAIL ஆ உளறியிருக்கான்.)

நான் மறு நாள் வழக்கம்போல் கிளாஸிற்கு வந்தால் டைனோசர் இம்மேட்டரை நோட்டிஸ் அடித்து ஒட்டாத குறை தான்.

எங்கள் இருவரையும் எல்லோரும் சூழ்ந்துக்கொண்டு, ஒரு பொண்ணு மீதி பணம் கொடு என்கிறது, இன்னொன்று நீங்கள் நல்லா இருப்பீர்களா என்கிறது ஒரே வாழ்த்து மழைத்தான் போங்கள். இதில் எங்கள் பசங்க தர்ம அடி வேறு.

அந்த நேரத்தில் டைனோசர் ஒரு நக்கல் சிரிப்பு சிரிச்சான் பாருங்கள்.. கொடுமை சார் அது.

மெண்டல் பய சத்தியத்தையும் நம்பி நான் போனேனே.. யாரிடம் சொல்லி அழுவது.. (அவ்வளவு அடிங்க, எவ்வளவுதான் வலிக்காத மாதிரியே சமாளிக்கிறது)

லோக்கல் பாய்.

Comments

Popular posts from this blog

நண்பனுக்கு கடிதம் - 1

வ குவாட்டர் கட்டிங் - விமர்சனம்

நண்பன் பொட்டி சிவாவுக்கு ஒரு கண்ணீர் கடிதம்..!