இவன் எவ்வளவு அடிச்சாலும் வாங்கறான்...இவன் ரொம்ம்ம்ம்ப நல்லவண்டா..ன்னு, சர்டிஃபிகெட் வேற..!

அந்த மலை ஏற்ற சம்பவத்துக்கு முன்னால், ரெண்டு முக்கியமான கேரக்டர்ஸ் பாத்துடுவோம். ஃப்ர்ஸ்ட் இயர் முடிஞ்சி எங்களை ஹாஸ்டல் விட்டே துரத்திட்டாங்க..! அதிலெ ஒண்ணும் ஆச்ச்ர்ய படுறதுக்கு இல்லை. நாங்களும் வெளிய ஜாலியா இருக்கலாமேன்னு வெளிய வந்து ரூம் போட்டோம் (வேற வழி..!) . அந்த ரூம் ஒனர் பேரு, கட்டை. சொந்தமா ஒரு மெஸ் வச்சி நட்த்திட்டு இருந்தார். அவரோட அண்ணன், ஒரு டீ ஸ்டால் நட்த்திட்டு இருந்தார். அந்த ரெண்டு பேர் கிட்டெயும் நாங்க வாங்கின அடி இருக்கெ. அடா..அடா..! அந்த மெஸ்சிலெ நடக்கிற அநியாயத்த தட்டி கேட்ட்துக்குதான் அவ்வளவு அடி..! எண்ணெயெ காட்டாத தோசை..காயெ இல்லாத சாம்பார், வீசி எறிஞ்சா மண்டை உடையற மாத்ரி இட்லி.. இந்த மாத்ரி கொடுமை எல்லாம் ப்சங்க என் தலைமைலெ தட்டி கேக்க ஆரம்பிக்க (என் பெர்மிஷன் எவன் கேக்றான்..!) அதுனாலெ, பாதி அடி நான் வாங்க வேண்டியதா போயிட்டு...! மோர்லெ உப்பு இல்லைனா கூட பச்ங்க என் பேர சொல்லி பிரச்னை பண்ண ஆரம்பிச்சு, அந்த கட்டைக்கு பயந்து நான் தென்னை மரத்திலெலாம் ஏறி பதுங்கும் படி எல்லாம் ஆகிபோச்சு.

மெஸ் இருக்கிற் வீட்லெயெ ரூம் இருந்த்தாலெ போர் அடிக்கும் போதெல்லாம் வந்து அடிக்க ஆரம்பிச்சார். இவன் எவ்வளவு அடிச்சாலும் வாங்கறான்...இவன் ரொம்ம்ம்ம்ப நல்லவண்டா..ன்னு, சர்டிஃபிகெட் வேற..! சரக்கு பார்ட்டி நடக்கும் போது கரெக்டா கட்டை விறகு கட்டை எடுத்துட்டு வந்த்துடுவார். டினொசரும், அண்ணெ , இது உங்க பாடி அண்ணெ , எப்பொ வேனுனாலும் அடிக்கலாம்னே..! கிளப்பி விடுவான்..கடங்காரன்..! அங்க நடந்த கூத்துக்கள் எல்லாம் அடுத்து வரபோற எபிசோட்ல பாப்பொம்...!

Comments

  1. இதில் பெருமைபடும் விசயம் என்னவென்றால் அவர் பரம்பரை தொழிலான மெஸ்ஸை விட்டு விட்டு இப்போது பெட்டிக்கடை நடத்துகிறார். ஊர் கட்டுப்பாடு விதித்து இனி இந்த தொழிலை செய்யக்கூடாது என்று நிபந்தனை வேறு அந்தளவுக்கு அவருக்கு டாச்சர் கொடுத்து, அவர் ட்ராக்கையே மாத்திட்டோம்ல.
    லோக்கல் பாய்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வ குவாட்டர் கட்டிங் - விமர்சனம்

ஓட்ஸ் கஞ்சி குடித்தவனின் ஓலம்..!