சரக்கு மாஸ்டர்...! ஈமொ..!




அடுத்து, எங்களுக்கு இந்த லாகிரி வஸ்துக்கள் எல்லாம் அறிமுகம் செஞ்ச அந்த படுபாதகன் பேரு, ஈமொ. பேர் விளக்கம் எல்லாம் சொன்னா தேடி வந்து செருப்பாலெயெ அடிப்பான். அதுனாலெ அவனை ஈமொ ன்னெ கூப்பிடுவோம்.

கள்ளுலெ ஆரம்பிச்சு, சிவன் வரைக்கும் அறிமுகம் பண்ணி எங்க வீட்லெ எல்லாம் விளக்கு எரிய வைக்க வச்ச படுபாவி இவந்தான்..!

அவனை நான் முதல் நாள் பாக்கும்போதெ ஒரு டிஃபன் பாக்ஸ்லெ குவார்ட்டர் 30 ரூபா சரக்க ஊத்தி குடிச்சுட்டு இருந்தான். என்னா அவசரம் பாருங்க..! இவன் சீட்டு கட்டு விளையாட்னா , அந்த சகுனியெ தோத்து போய்டுவான். இவன் டெய்லி செலவுக்கெ சீட்டு விளையாடிதான் சம்பாதிக்கனும்னா பாத்துக்குங்களென்..! என்னா ஒரு உழைப்பு..! எப்டியும் ஒரு மூனு ஜோக்க்ர் ஒளிச்சு வைச்சு இருப்பான் பாடியிலெ..! இது தான் இவை டிக் அடிக்கிற சீக்ரெட்..!

பாடம் புரியலையென்னு கொஞ்சம் கூட வெக்கபடாமெ அவனுக்கு என்ன தெரியுமோ அதையெ திரும்ப திரும்ப சொல்லி மனுஷன் உயிரயெ எடுத்துடுவான். சைக்கிள் டைனமோ எப்படி கரண்ட் ப்ரொட்யுஸ் பண்ணுதுன்னு, என்னொமோ இவனெ அதை கண்டு பிடிச்ச மாத்ரி சொல்லுவான். (ஹும்...பெரிய தொழில்நுட்பம் தான்..!)

இவன் ஆளு அப்பாஸ் மாத்ரி இருந்தாலூம், ஒரு ஃபிகர் கூட இவனை பாக்காத்து இவனை மனதளவுலெ பாதிச்சது..! (இப்போ ரிசண்டாதான் இவன் லவ் மேரஜ் பண்ணி
எங்களை எல்லாம் ஆடி போக வைச்சுட்டான்..!)

இவனொட ஒரே குறிக்கோள் இந்த கொசுவ அடியோட நசுக்கரதுதான். அதுக்காக அவன் போட்ட திட்டம் எல்லாம் இந்த கொசு பயல் ஊதி தள்ளிட்டான்னா பாத்துக்குங்களென்..இவன் திட்டம் போட்ட லட்சணத்த..!

இந்த வீனாபோனவன், டைனொசர கூப்டுட்டு கள்ளு கடைக்கு போன ஒரு கேடு கெட்ட சம்பவத்த அடுத்து பாப்பொம்..!

Comments

Post a Comment

Popular posts from this blog

நண்பனுக்கு கடிதம் - 1

வ குவாட்டர் கட்டிங் - விமர்சனம்

நண்பன் பொட்டி சிவாவுக்கு ஒரு கண்ணீர் கடிதம்..!