தர்மஅடின்னா மட்டும் எங்கேந்து தான் கிளம்பி வருவானுங்களொ..!
பாசக்கார பயமக்களெ...!
இந்த கேடு கெட்ட கதை எல்லாம் படிக்கிரதுக்கு, ரெண்டு பெக் போட்டு தூங்கலாம்னுதான்..தோனும்..! ஆனா எப்டி வாழனும்னு ஆயிரம் புக் இருக்கு. எப்டி வாழக்கூடாதுன்னு ஏதாவது புக் இருக்கா? அதான் இந்த சரித்திர முக்கியம் வாய்ந்த முயற்சி.
(அப்பாடா..ஒரு வாரம் ஆச்சி இந்த பாய்ண்ட யோசிக்க..!)
தயுவு செஞ்சி அவுங்க அவுங்க மனைவி கிட்டெ இந்த தெரு புழுதி எல்லாம் காட்டாதிங்க.. ஏன்னா ஒரு நண்பர் ஒருத்தர் , அவர் மனைவி கிட்டெ இந்த ப்லாக் காமிச்சதில, என் பழக்கவழக்கத்தையெ நிறுத்த சொல்லிட்டாங்களாம். இது தேவையா?
சரி.. சரி..நாம என்னா செய்ய முடியும்..!
நாம நம்ம கடமைய செய்வோம்..!
இப்பொ அந்த மலைஏற்ற சம்பவத்த பாத்துடுவொம்.
ஒருமுறை ஏதொ ஒரு பார்ட்டி...நாங்கதான் மாடு கன்னு போட்டாலெ பார்ட்டி கேட்பொமெ..! அதுனாலெ என்ன பார்ட்டின்னு சரியா நினைவு இல்லை. அஞ்சி ஆறு பெக்கு மேலெ போய் நான் கம்ப்ளீட்டா டினொசர் கண்ட்ரோல்ல போய்ட்டென். ஃபுல் பூஸ்ட்லெ டீ கடைக்கு போனொம். போன இட்த்திலெ டினொசர் என்னை அந்த டீ கடை அண்னண் கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக்க சொன்னான். நானும் வயசிலெ பெரியவரா இருக்காரென்னு விழுந்து வணங்கிட்டென். என்ன, மப்புலெ கொஞ்சம் எழுந்த்துரிக்கதான் கஷ்ட பட்டுட்டேன். அப்புறம், ரூமுக்கு வந்த்து தூங்கிட்டோம்.
காலையிலெ எழுந்த்து, கடைக்கு போனொம், இந்த டினொசர் படுபாவி காலையிலெ அவன் வேலையெ ஆரம்பிச்சுட்டான். அவன் மெதுவா மாப்ளை, ஏண்டா நெத்து அண்னண் கால்ல விழுந்த்தென்னு கேட்டான். என் நாக்குலெ சனி இருக்குன்னு எனக்கு தெரியாம நானும், மாப்பு, நான் மப்புலெ இருக்கிறப்போ எந்த நாய் கால்லெ வேண்னாலும் விழுவெண்டானு சொல்லி தொலைஞ்சிட்டென். அவ்வளவு தான், டினொசர் என்னை கெட்டியா புடிச்சிகிட்டான். அப்பொ அண்ன்னெயெ நாய் அப்டின்றியா.. கேட்டான். டீ கடை அண்னண் வெறி ஆயிட்டார். நானும் கெஞ்சறென்..அண்ணா கொஞ்சம் டைமிங் மிஸ் ஆயிடுச்சுன்னு. ஒன்னும் ஒர் அவுட் ஆவலை. தர்ம அடி. அது என்னமொ தெரியலை...அடிக்கறது முன்னாடி ரெண்டு மூனு பெர் தான் இருக்கானுங்க.. அடி விழ ஆரம்பிச்ச அப்புறம்..ஒரு பத்து பேர் சேந்துட்ரானுங்க..! எங்கேந்து தான் வருவானுங்களொ..!
NICE WRITING ...
ReplyDeleteமாம்ஸ் இந்த நிகழ்வு உண்மையில் ஒரு சினிமாவில் வருவது போன்று உள்ளது இதில் உள்ள சில நிகழ்வுகளை தொகுத்து
ReplyDeleteசினிமாவிற்கு அனுப்பினால் நிச்சயம் அது சினிமா காமடியில் இடம் பெரும் . மாம்ஸ், ஒரு காமடி கதை ஆசிரியர் வளர்க்கிறார் , சினிமாவிற்கு சென்றல் பெரிய ஆழ வருவாய் தல .. ஷாகுல் வடகரை