நாங்கதான், கேப்லெ கடா வேட்டுவோம்லே....!.

அடுத்ததா, ஹாஸ்டல் லெ ஒரு தீபாவளி லீவ். எல்லொரும் வீட்டுக்கு போரத்துக்கு முன்னாலெ, ஜாலியா வெடி வாங்கி வெடிச்சுட்டு போகலாம்னு ஐடியா பண்ணி, வசூல் பண்றதுக்கு நானும், டினொசரும் திட்டம் போட்டோம்.

வசூல் பண்றதுக்கு பசங்க கிட்டெ போய் பேசினா, அவனுங்களொ, வெணும்னா ஒரு டீ, சிகரெட் வாங்கி தரோம், இடத்தை காலி பண்ணுங்கனு, சொல்லி கேவல படுத்திட்டானுங்க.

மனம் வெறுத்து போய், இந்த பயல்களுக்க்கும், ப்ரின்ஸ் கிட்டெ மாட்டிவிட்ட வார்டனுக்கும் பாடம் கற்ப்பிக்கதுன்னு முடிவு பன்ணொம். அப்பொ டினொசர், ஒரு மாஸ்டர் ப்ளான், போட்டான். (பாருங்க, திட்டம் எல்லாம் அவன் தான் போட்றான். பேர் மட்டும் எனக்கு..என்ன கொடுமை சார் இது..!)


அந்த திட்டம் இது தான்.

1. இருக்கிறதிலெ ஒரு பெரிய அணு குண்டா வாங்கிறது.

2. அதை ஒரு ஊது பத்திலெ தள்ளி ஒரு நூலாலெ கட்டி, ஊதுபத்தி பத்த வச்சு ஒரு முக்கியமான இடத்திலெ ஹாஸ்டல் லெ வைக்க வேண்டியது. ஊதுபத்தி எரிஞ்சிகிட்டெ வந்து த்ரி பத்தறதுக்கு 10 நிமிஷம் ஆவுறமாத்ரி செட் பண்ண வேண்டியது.

3. குண்டு வைச்ச கையொட நாங்க ரெண்டு பேரும் தனியா தனியா ப்ரிஞ்சு போய், வேற ரூமுக்கு போய் பசங்க கூட போய் சேந்துக்க வேண்டியது.

4. 10 நிமிஷம் அப்புறம், குண்டு வெடிச்ச அப்புறம், ஒருத்தரை ஒருத்தர், பாக்கிறதோ, பேசுறதோ கூடாது. (எத்தனை சினிமா பாக்ரோம்..!)

5. குண்டு வெடிச்ச அப்புறம் , எங்களுக்கு பிடிக்காத, சீனியர் பேரல்லாம் சொல்லி , அவன் செஞ்சிருப்பானொ, இவன் செஞ்சிருப்பானொன்னு புரளி கிளெப்பி விடறது.

நாங்க வக்க வைச்ச நினைச்ச் இடம், வார்டன் ரூம்லெ இல்லை மெஸ்சிலெ. ஆனா நாஙக அது கஷ்டம்னு புரிஞ்சி கிட்டோம். கடைசிலெ பாத் ரூம்லெ வைக்கறதுன்னு முடிவு பண்ணொம்.
ஆச்சு. எல்லாம் செட் பண்ணிட்டு, தனி தனியா போயிட்டோம்.
சரியா அணு குண்டு வெடிக்கும் போது, ஒரு சமையல் காரன் உள்ளெ போய்ருக்கான். வெடிச்ச அதிர்ச்சிலெ அந்த ஆளுக்கு ஒரு அரை மணி நேரம் பேச்செ வரலை. ப்ளான் சக்ஸஸ்.

ஆனா இந்த சீனியர் பசங்களுக்கு மட்டும், எங்க மேலெ ஒரு டவுட். என்கொயரி அவனுங்க மேல தான். நாங்க எஸ்கேப்...!

நாங்கதான், கேப்லெ கடா வெட்டுவோம்லெ...!

Comments

Popular posts from this blog

நண்பனுக்கு கடிதம் - 1

வ குவாட்டர் கட்டிங் - விமர்சனம்

நண்பன் பொட்டி சிவாவுக்கு ஒரு கண்ணீர் கடிதம்..!