பில்லா – நீ கட்டுவியா கல்லா?
தல படத்த தாக்குறது தற்கொலைக்கு சமம், இருந்தாலும் ஒரு சமூக
அக்கறை கொண்ட ஒரு விமர்சகனா எழுதாம இருக்கலாமா? (யாருய்யா இப்ப கல்ல விட்டு எறிஞ்சது!?)
டோரண்ட்ல நல்ல
பிரிண்ட் கிடைச்சும் கால் பண்ணேன் என் நண்பனுக்கு! படத்துக்கு டிக்கட்
வாங்கிட்டேன்..நீ வந்துதான் ஆவனும்னு.. ஏமாளி பயல்..அவன் ட்விட்டர் படிக்கலை
போல..டக்னு ஒத்துகிட்டான் J
படம் போட்டாச்.! பஞ்ச் டயலாக்கோட படம்
ஆரம்பிக்குது..மெலிசான கத்திய எடுத்து எங்கெல்லாம் குத்தமுடியுமோ அவ்ளோ குத்துறார்
தல. வன்முறை படம்னு சொல்லபட்ட புதுபேட்டையில கூட..இப்படி..கழுத்துலயும், இருதயத்துலயும் நேரடியா குத்தபடுற காட்சி காமிச்சதில்லைய்யா. பல கொலைகள் பண்ண நமக்கே பாக்க முடியலை..ஹிம்!!
என் ஃப்ரெண்டு பாடி ரெண்டு முறை தூக்கி போட்டுச்சு..நான்
சமாதான படுத்தி
எல்லாம் சரியா போய்டும்ன்னு..நெஞ்ச நீவி விட வேண்டியதா
போச்சு..தல..பார்வையாளனோட பல்ஸ தூக்கனும்னு முடிவு பண்ண டைரக்டரோட முடிவு இது..நீ
என்ன பண்ணுவ தல..!!?
படம் போட்டு 20
நிமிஷம் ஆச்சு..என்னாடா ஒரு பொம்பளை புள்ளைய கூட காணொம்னு என் நண்பன் அலுத்துக்க,
டக்னு நாலு பொன்ணுங்க தாவணியில்லாம வந்து ஆடுதுங்க. தாவணி வாங்கி தந்தாங்களோ..இல்ல
புழுக்கத்துல போட்டுக்கலையோ தெரியலை.!
பட்த்துல என்ன கதைன்னா.......சரி அதை விடுங்க பாஸ்..வேற
பேசுவோம்.!! அகதியா வந்து இறங்குற அஜீத்க்கு முகம் மட்டும்தான் பாவமா
இருக்கு..பாடியோ இப்பதான் பிரியாணி சாப்டு வந்த மாதிரி பல்கியா இருக்கு. வந்த உடனே
ஒருத்தன செவுள்ல அறையிறார், உடனே அவரு குட்டி டானா உருவாகிடுறாரு அங்க.
அப்புறம் டக்,
டக்னு சீன் நகருது, பிரமாதமான சீன்ல எல்லாம் டைரக்டர தூக்கி சாப்டுறது அஜீத்
மாதிரி கலைஞனலாதான் முடியும்னு நிருபிச்சுட்டாரு. அதே சமயம் சீன் நல்லா இல்லன்னா தாளிக்க
இருக்கவே இருக்காரு டகால்ட்டி.. ச்சே..டோலட்டி டைரக்டர்.!
ரொம்ப ரிஸ்க்
எடுக்குற பில்லான்னு சொல்லும் போது..பசின்னு தல சொல்லும் போது பாவம், ப்ரேக்
ஃபாஸ்ட் சாப்டாமா வந்துருப்பாரோன்னுதான் பாவமா இருக்கு. எப்டி பாத்தாலும் பட்னி
கிடந்த பாடி லேங்வேஜ் எங்க தலைக்கு வரலைங்குற உண்மைய அல்ட்மேட் ஸ்டார் தல அழுத்தமா
நிருபிக்கிறாரு.
தியேட்டர்ல
இருந்த 15 பேருல, ஒருத்தன்..இப்ப என்னதாண்டா சொல்ல வற்றீங்கன்னு திடீர்ன்னு
சத்தமா கேட்கும் போது என்னை முறைச்சு பாத்தான் என் நண்பன்..நிம்மதியா ஃபேஸ்புக்ல
கடலை போட்டுகிட்டு இருந்துருப்பேனாடா பாவி..அப்டிங்க்ற அர்த்தம் அந்த இருட்டுலயும்
எனக்கு தெரிஞ்சது.
பல
இடங்கள்ல..தல டயாலக் கைதட்டல் வாங்க வாய்ப்பு இருந்து, சோம்பேறிகள் நிறைந்த்
அரங்குல அதெல்லாம் நடக்கவே இல்ல. ஹிம்!
ஒவ்வொரு
டீலிங்கா முடிச்சு தராரு பில்லா, ஒரு வழியா தாலுக்கால ஆரம்பிச்சு, வட்டம், பெரிய வட்டம்லாம்
தாண்டி..வெளி நாட்டுல இருக்குற டானையும் சந்திக்கிறாரு.
சரி..நாம தான்
தியேட்டர் மாறி வந்துட்டமான்னு பாத்தா..அதுவும் இல்ல..கரெக்டா 13 பேருதான்
உட்காந்துருக்கானுங்க..இருட்டுல குத்துமதிப்பா உட்காந்து பாத்தா..அது
‘இதயம்..இன்னும் எத்தனை துன்பங்கள் தாங்கிடுமோ’ பாட்டாம்! ஏதோ பேரு ஓமனகுட்டனாம், பனை மரம் மாதிரி
வளந்துகெடக்குது ..பாவிபயபுள்ளை. ஒன்சைட் லவ்வாம் தல மேல.!
மற்ற
பாத்திரங்கள்லாம் நல்ல தேர்வுதான்..அட நல்லா நடிக்கிறாங்களேன்னு பேசிட்டு
இருக்கும் போதே..தல ..அவங்கள எல்லாம் போட்டு தள்ளிடுறார்.
வெளங்கச்சொல்லனும்னா..காட்சிகள் உயிரோட்டமா அமையும் போதெல்லாம் அங்க வந்து அந்த
உயிர போட்டு தள்ளிட்டு..நடந்து போய்கிட்டே இருக்காரு.
ரெண்டு
புள்ளைங்க 7 அடியில சுத்தி வந்தும் மருந்துக்கும் அஜால் குஜால் சீன் இல்ல.
சரி..தலயாவது உள்பனியனோட வருவாரான்னா.....ஹிஹிம்..பெண்ரசிகர்களுக்கும் பெரிய
ஏமாற்றமாதான் இருந்துருக்கும் போல.
கதை ஒண்ணு
கோவால நடக்குது, இல்ல வெளிநாட்ல நடக்குது. சாம்பிள்க்கு கூட தமிழ்நாட்டு ஊரு பேரு
இல்ல. ஓளிப்பதிவுபதிவும் தலயோட ஸ்டைலும் தான்நம்மள கடைசிவரை தியேட்டர்லெருந்து
செவுரு ஏறிகுதிச்சு தப்பிக்காம தடுக்குது.
ஹாலிவுட்
ஸ்டைல் படத்துல எல்லாம் கதைய கேட்கறது இல்ல நாம...அப்புறம் அதே ஸ்டைல்லை முயற்சி
பண்ணா மட்டும், எங்க கதைன்னு கேட்குறோம்!
இது என்னா சார் நியாயம்.
இருந்தாலும்,
ஸ்கிரின்ப்ளேல கொஞ்சம் வித்தை காட்டிருந்தா..இந்த படம் நிச்சயம் சூப்பர்
ஹிட்டுதான்.
எது எப்படி
இருந்தாலும் ரிப்பீட்டட் ரசிகர்கள் கூட்டம் வாய்ப்பு இருக்குறதால இது நிச்சயம்
தோல்வி படம் இல்ல்ன்னு சொல்லாம்.!
படம் முடிஞ்சு
கைல பாத்தா வாங்கின பாப்கார்ன் அப்டியே இருக்கு..!!! இதுலேயே
தெரியலையா...பாப்கார்ன விட படம் நல்லா இருக்குன்னு :)
பில்லா – நீ கட்டுவியா கல்லா?
தண்ணிடுப்பாக்கிக்காக கால் கடுக்க காத்திருக்கும்
– கட்டம் சரியில்லா
கட்டதொர
நல்லதொரு விமர்சனம்...
ReplyDeleteஉங்கள் நண்பர் தளம் மூலம் (http://thalapolvaruma.blogspot.com) உங்கள் தளத்திற்கு முதல் வருகை !
Follower ஆகி விட்டேன்.
பகிர்வுக்கு நன்றி... தொடர வாழ்த்துக்கள்...
மாம்ஸ் செம
ReplyDeletesupper
ReplyDeleteநல்ல வேலை நீங்க விமர்சனம் பில்லாவுக்கு எழுதுறேன் என்றதும் ஒரே பயம் ராஜபாட்டை அளவிற்கு களாய்த்து விடுவீன்களோ என்று நல்ல வேலை அவ்வளவா இல்லை என்னை கேட்டால் நீங்க ஹாலிவுட் படத்துக்கும் விமர்சனம் எழுதினால் நல்லா இருக்கும் என்று உங்களின் பதிவை என் தலத்தில் போட்டு உள்ளேன் யாரவது அதன் வழியா வந்தார்களா...http://thalapolvaruma.blogspot.in/2012/07/apple-vs-android-funny-story-thiruvilaiyadal.html தமிழ்மணத்தில் உங்கள் பதிவை இணைக்கவும்...அப்படியே பிளாக்கர் setting => comments => அப்படியே கிழே வந்தால் Show word verification for comments? என்று இருக்கும் அதை no என்பதை கிளிக் செய்து save கொடுக்கவும் இல்லை என்றால் ஒவ்வொரு முறை கமெண்ட் போடும் போதும் word verification கேட்கிறது...
ReplyDeleteSuper machi . Kalakal review. Kochi naal thala maraiviyudu. Illana thala fans Anna summary via maattangaa. Vetri R
ReplyDeleteநீ திரும்பி வரும்போது உன் கை இருக்காதுவே.... வந்துதான ஆகனும்...
ReplyDeletesuper....
ReplyDeleteஒரு படத்தை விமர்சிக்கவும் உங்கள் கருத்துகளை மற்றவர்கள் பொழுதுபோக்காக கவரும் வகையில் எழுதுவதிலும் உங்களின் திறமை மேலோங்கி நிற்கிறது...அருமை...வாழ்த்துக்கள்
ReplyDeleteநல்லாருக்கு.. ஆனா உங்ககிட்டேந்து இன்னும் எதிர் பார்த்தோம்.. Comment போட்டாச்சு போட்டாச்சு.. :-)
ReplyDeleteRomba Supera Irukku
ReplyDeleteAnd also Sema Comedy
Thank you
By vivekisravel