தங்க மணி என்ஜாய் குருப்பின்
குதுகல 'சிறப்பு' சரக்கு பார்ட்டி அழைப்பிதழ்.

நிகழும் ஏதோ ஒரு ஆண்டில் இந்த மாதம் இன்னிய தேதிக்கு, கேப்டன் என அன்பாக அழைக்கப்படும் ராஜ்குமார் அவர்களின் புரொமோஷனை முன்னிட்டு, எலக்ட்ரா ஸ்ட்ரிட்..வாயில் நுழைய முடியாத பில்டிங் பெயர் கொண்ட அவரது இருப்பிட்த்தில் பார்ட்டி நடை பெறும்.. மாடு கண்ணு போட்டாலே பார்ட்டி கேட்கும் இந்த உலகத்தில், வேறு வழியே இல்லாமல் கேப்டன் இந்த பார்ட்டியை நமக்கு தருகிரார் என்பதை கண்களில் ஈரம் கசிய தெரிய படுத்துகின்றோம்.

நிகழ்ச்சி நிரல்:
8:00 மணிக்கு நண்பர்கள் அவர்களுக்கு கொடுக்க பட்ட பாஸ்வேர்டை உபயோக படுத்தி மூண்று முறை குயில் போல் கூவ வேண்டும். அப்போது தான் கதவு திறக்கப்டும்.

8:30க்கு வெல்கம் ட்ரிங்க்ஸ், தன்ணி கேன்லெருந்து அவங்க அவங்க மொண்டு குடித்து கொள்ள வேண்டும். தள்ளு முள்ளு கூடாது.

8:45க்கு நியுஸ் பேப்பர் கீழே விரிக்கபடும்.

8:50க்கு கிச்சனிலிருந்து வஞ்சிரம் மீன், இரால் மற்றும் உணவு வகைகள் கொண்டுவரப்படும். இடையில் ஒன்று இரண்டை எடுத்து வாயில் போடுபவர்களை ஒரு க்ரியேட்டிவ் வெப் கேமிரா கொண்டு கண்காணிக்கப்படும்.

9:00க்கு நண்பர் கேப்டன் ராஜ்குமார் அவர்கள், தான் கடந்து வந்த பாதை, உருண்டு வந்த மேடு பள்ளஙக்ளை பற்றி கண் கலங்க விவரிக்கிறார்.
இதை பல முறை கேட்ட நண்பர்கள், டேபிளில் வைக்க பட்டுள்ள குமுதம், ஆனந்தவிகடன் படித்து தப்பித்து கொள்ளலாம். என்ன நடந்தாலும் தப்பித்து போக வாய்ப்பே இல்லை.

9:30க்கு அரை மணி நேரமாகியும் கேப்டன் பேசி கொண்டிருக்கும் பட்சத்தில், நாமே கண்ணாடி டம்ளர்களில் சரக்கை ஊற்றி கொள்ளலாம்.

9:45க்கு கேட் டிசைனாராக இத்தனை வருடம் பெஞ்சை தேய்ச்சு, பல தில்லாலங்கடி வேலைகள் செய்து,.தற்போது ப்ராஜெட் கோ ஆர்டினேட்டராக ப்ரோமோஷன் வாங்கியிருக்கும் கேப்டனை புகழ்ந்து (வேற வழி..அவரு பார்ட்டியாச்சே) சிறப்புரை ஆற்றுகிறார் பவர் ஸ்டார் பாண்டி என அழைக்கபடும் கட்டதொர அவர்கள்.

9:55க்கு ஒரு வாரமா தலைமறைவான மணி அவர்கள், தனக்கு எப்போது ப்ரோமோஷன் கிடைக்கும் என அழுத்தமான கேள்வியை முன் வைக்கின்றார்.

10:00க்கு போனவாரம் பார்ட்டியில் வெளக்கெண்ணை என நண்பர் செந்தில், தில்லையிடம் பாட்டு வாங்கினதை அடுத்து, அவர் உண்மையிலெயே வெளக்கெண்ணையா என விவாதம் தொடர்கிறது.

10:30க்கு நண்பர் அண்ணாமலையின் நடிகைகள் பற்றிய கிசுகிசு பரப்பும் நிகழ்வு. கார் இவர் வச்சிருக்கார் , கார வச்சிருந்த சொப்பன சுந்தரிய யார் வச்சிருக்கார் என்பதை போன்ற அரிய நகைசுவை காட்சிகளை எடுத்து விளக்குகிறார்.

11:00 பில்லா2 படம் பற்றிய விவாதம், படம் பார்க்காமலே பாத்த மாதிரி பேச வருகின்றார் நண்பர் கண்ணபிரான்.

11:30க்கு அளவுக்கு அதிகமா சாப்பாடை அமுக்கி மயங்கி கிடக்கும் தில்லை அவர்களின் மேல் தண்ணிர் தெளித்து மயக்கம் தெளிவிக்கும் நிகழ்ச்சி.

12:30க்கு கதவு இழுத்து பூட்டபடும்

12:45க்கு மொய் நோட்டோடு ஒருவர் அமருவார். நண்பர்கள் தாங்களால் இயன்றதை அவரவர் பாக்கெட்டிலிருந்து எடுத்து வழங்கவும் (இப்ப தெரியுதா ஏன் கதவ பூட்டினோம்னு!)

1:00க்குக் ரம்மி விளையாட்டு தொடரபடும் பார் மெம்பர்ஸ் வெளிநடப்பு செய்யப்படுவார்கள். படுக்க முந்தியவர்களுக்கு தலைகாணி கிடைக்கும். லேட்டாக படுப்பவர்களுக்கு அதே தலகாணிகள் லேட்டாக கிடைக்கும்.

நன்றி ..வணக்கம்.

இங்ங்னம்
தங்கமணி என்ஜாய் விழாகுழுவினர்.!

Comments

  1. படுக்க முந்தியவர்களுக்கு தலைகாணி கிடைக்கும். லேட்டாக படுப்பவர்களுக்கு அதே தலகாணிகள் லேட்டாக கிடைக்கும்.//

    ஹா ஹா ஹா பினிஷிங் சூப்பர்யா.

    ReplyDelete
  2. Remove "Word Verification for comments"

    ReplyDelete

Post a Comment