’தங்கமணி என்ஜாய்’ சங்கத்தின் குதூகூல சரக்கு பார்ட்டி அழைப்பிதழ்

நிகழும் நந்தன ஆண்டு ஆனி மாதம் 21ந்தேதி, செம்ம்ம்ம எமகண்ட்த்தில் 6-70க்குள் குதுகூல சரக்கு பார்ட்டி நடை பெறும் என்பதை அறிவித்துகொள்கிறோம்.

 நிகழ்ச்சி நிரல்:

6:30க்கு வெல்கம் ட்ரிங்க்ஸ் – ஆளுக்கு ஒரு ஹெனிகன் பியர் வழங்கப்படும். 80 கிலோவுக்கு மேல் உள்ளவர்கள், ரிஷப்ஷனில் உள்ள எடை மெஷினில் நின்று..எடையை உறுதி படுத்தியபின் ரெண்டு பியராக வாங்கி கொள்ளலாம்.

6:45க்கு பவர்ஸ்டார் பாண்டி என அழைக்கபடும் கட்டதொரயின் வரவேற்புரை, ஒயின் ஷாப்பினால் ஏற்படும் ஒருமை பாட்டையும், மறுநாள் ஹேங்க் ஒவரினால் வரும் பெரும் பாட்டையும் முடிந்தவரை விளக்க வருகிறார்.

6:50க்கு சரக்கினால் ஏற்படும் நன்மைகள் பற்றி விளக்க வருகிறார். சரக்கு மாஸ்டர் தீபக் அவர்கள். அளவான குடி, எப்படி வளமான வாழ்வாகும் என செய்முறை விளக்கமும் காண்பிப்பார்.

6:55க்கு அளவு பாத்த பாஸ்போர்ட் விஸ்கி சரக்கு ஊற்றும் வைபவம் காம்ரேட் ராஜ்குமார் அவர்கள் தொடங்கி வைப்பார்கள். ஒரு மில்லி கூட குறைய ஊற்றாமல், இந்திய மதுபான ஆணையத்திடம் சிறந்த ’மிக்ஸிங் மாஸ்டர் பட்டம்’ வென்றவர் இவர்.

7:10க்கு ஒருத்தர் மீது ஒருத்தர் மண்ணை வாறி தூத்த்தி கொள்ளும் அரிய நிகழ்ச்சி நடை பெறும். அன்பர்கள் மானாவாறியாக மற்றவரை திட்டி மனதில் உள்ள கவலைகளை போக்கலாம்.

 8:00க்கு பைசல் பண்ணபடாத பல பிரச்னைகள் ஊதி விடபட்டு வேடிக்கை பார்க்கபடும்!

8:10க்கு சங்கத்தின் அல்போன்சா, செந்தில் அவர்களின் குத்தாட்ட நிகழ்ச்சி. ஒரு நேரத்தில் அவர் கையை ஒருத்தர் புடிச்சு இழுக்கவே அனுமதி.

8:25க்கு சைடிஸ்னால் ஏற்படும் நன்மைகளை பற்றி விளக்க வருகிறார். மலைமுழுங்கி தில்லை. அவர் இது வரை லட்சகணக்கான ரூபாய்க்கு சைடிஸ் மட்டுமே தின்று, ‘தீனிகளின் திருமகன்’ என பட்டம் பெற்றவர் ஆவார். தொடர்ந்து அவர் கரகாட்டம் நடை பெறும். கண்கொண்டு காண்பவர்களின் சகிப்பு தன்மையை பாராட்டி, லேஸ் சில்லி சிப்ஸ் கையோடு வழங்கப்படும். 

9:00 மணிக்கு பார்சல் சாப்பாடு ஒப்பனிங். ஏற்கனவே பிரிச்ச பொட்டலஙக்ள், செந்திலுக்கும் தில்லைக்கும் வழங்கபட்டு, புது பொட்டலங்கள் சரக்கு மட்டுமே அடித்த சங்கத்து ஆட்களுக்கு வழங்கபடும்.

11:00 மணீக்கு மட்டையாகாதவர்களின் ரெண்டாவது ரவுண்டு ஆரம்பிக்கபடும்.

12:00 மணிக்கு அதிலும் மட்டையாகத மாமணிகளின் ரம்மி ஆட்டம் 50 திராம்ஸ் வைத்து ஆடப்படும்.

 3:00 மணிக்கு , அதுவரை விக்கெட் விழாமல் இருப்பவர்கள் ஆளுக்கு ஒரு ஹெனிக்க்னை எடுத்து அடித்து விட்டு, தூங்குபவர்களிடமிருந்து தலைகாணியை பிடிங்கி தூங்கி கொள்ளலாம்

எச்சரிக்கை: 

1. முந்திரி போன்ற சைடிஸ்களை கை நிறைய அள்ளுபவர்கள் மீதி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கபடும்.

 2. இரண்டே சேர்கள் இருப்பதால், சேரில் உட்கார முதலில் வருபவர்க்கே முன்னுரிமை. பின்னர் வருபவர்கள் பத்மாசன பயற்சி செய்ய வேண்டி வரலாம்.

 3. வீடு ஏற்கனவே குப்பையாக இருப்பதால், மேற்கொண்டு குப்பை போட அனுமதி இல்லை.

 4. சரக்கு சாப்பிடாத சில விஷமிகள், சைடிஸை விரைவில் காலி பண்ண கூடும், அவர்களை கண்காணிக்க ‘தங்கமணி எஞ்சாய்” விழா குழுவினர் சார்பாக ஒரு கண்காணிக்க ஒரு குழு உண்டு என்பதை மிகுந்த எச்சரிக்கையோடு தெரிவிக்கிறோம்.

 5. பார்ட்டியின் போது போடும் சண்டைகள்,ஒரு கண்டினிவிட்டிக்கா வீடியோ எடுத்து வைத்துகொள்ள படும்.அது அடுத்த பார்ட்டியின் தொடர்ச்சிக்கு உதவும்.

இங்ங்னம், தங்கமணி என்ஜாய் விழாகுழுவினர்..!

Comments

  1. கமெண்ட் போடக்கூடாதுன்னுதான் நெனச்சேன்..இருந்தாலும் ெல்லா ஆம்பளைகளும் எஞ்சாய் பண்றதைப் பார்த்தா பொறாமையா இருக்கு...ok..let you all enjoy..

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நண்பனுக்கு கடிதம் - 1

வ குவாட்டர் கட்டிங் - விமர்சனம்

நண்பன் பொட்டி சிவாவுக்கு ஒரு கண்ணீர் கடிதம்..!