வ குவாட்டர் கட்டிங் - விமர்சனம்

ஹலொ..ஃப்ரெண்ட்ஸ்..!

போன வாரம் போட்ட உபுண்ட்டு டெக்னிகல் ஆர்டிகல் கிளிக் ஆகி போச்சுன்னு உங்க கமெண்ட்ஸ பாத்தாலெ தெரியுது. நன்றி..நன்றி..நன்றி..! இதுல என்னா மேட்டர்னா இது மாத்ரி நிறைய ப்லாக் பதிவுலகத்துல இருக்கறதால மெனக்கெட்டு இதெல்லாம் எழுதி உங்க உயிரெல்லாம் வாங்குறதுக்கு பதிலா..நமக்கு என்ன வருமொ, அதையெ பன்னுவொம்னு ஒரு யோசனை..

சரி, இந்த வாரம், ஒரு சினிமா விமர்சனம் பாப்பொம்.. ஆனா இந்த சினிமா விமர்சனமும் பல பேர் ரூம் போட்டு எழுதுறாங்கலெ..நம்ம என்னத்த எழுதி கிழிக்க போறோம்னுதான் இது வரை அந்த மேட்டருக்கெ போகலை...ஆனா போன வாரம் பாத்த ’வ குவாட்டர் கட்டிங்’ பட்த்துக்கு மட்டும் எழுதால்ம்னு ஒரு ஐடியா..! ஏன்னா, பட்த்துக்கு நம்மக்கும் உள்ள கனெக்‌ஷன் தான்.

நமக்கும் இது மாதிரி ஒரு ஃப்ளாஷ் பேக் உண்டு..அத மொதல்ல பாத்துடுவோம்..! ஒரு நாள் சென்னைல, ஒரு டெலிபோன் பூத்ல உக்காட்ந்து, வேற வேலை வெட்டி இல்லாத்தால டெலிபோன் பூத் பாத்துக்குற பொன்னுக்கிட்டெ கடலை போட்டுட்டு இருந்தொம்..! இந்த சதிகார நண்பர்கள் எல்லாம் எந்த பொன்னு அந்த டெலிபோன் பூத்துக்கு வேலைக்கு வந்தாலும் இதுதான்மா உன் அண்ணன்னு அறிமுகம் என்னை மட்டும் அறிமுகம் பன்னி வச்சிடுவானுங்க..! அந்த பொன்னுங்களும் அண்ணா, அண்ணானு என் மேல மட்டும் பாசத்த கொட்டுவாங்க..!

அப்டி ஒருநாள் நான் பாச மழையில நனைஞ்சிட்டு இருக்கும் போது, நன்பனெட நன்பன் ஒருவன் மாருதி ஆம்னில சும்மா சர்ருன்னு ப்ரெக் அடிச்சு நின்னான். அவன் எங்களை எல்லாம் பாக்கவந்த்ருக்கென் சொன்னாலும், புதுசா வாங்கின கார காமிக்கதான் வந்து இருக்கான்னு தெரிஞ்சு போச்சு.. ஒகென்னு, நாங்களும் பக்கத்துல இருக்கிற டீகடைல டீயெல்லாம் வாங்க்கிகுடுத்து (அங்க மட்டும் தான அக்கவுண்ட் இருக்கு..)

கார் வாங்கினத்துக்கு சரக்கு பார்ட்டி கேட்டொம்..! அப்புறம் தான் தெரிஞ்சது, அன்னைக்கு காந்தி ஜெயந்தி ஒயின் ஷாப் எல்லாம் லீவுன்னு (பயபுள்ள..ஐடியா பண்ணி கிளம்பி வந்துருக்கான் பாருங்க..) ஆனா நாங்க விடுறதா இல்ல..!கடைசியா ஒத்து கிட்டான். இந்த சென்னைல ஒரு நாலு குவாட்டர் கூட வாங்க முடியலைன்னா நீ எல்லாம் என்னடா சென்னைவாசின்னு நன்பன் கிளப்பி விட்டுட்டான். சரிங்க..எல்லா ஏறுங்க்கடா காருலன்னு வீறுகொண்டு கிளம்பிட்டான்..

அப்புறம் ஒரு மூனு மணி நேரம் , என்னா ஒரு அலைச்சல்..ஒரு குவாட்டர் கிடைக்கனுமெ..ஹூம்..! போலீஸ் டைட்டா இருந்த்தால எங்கியுமெ சரக்கு கிடைக்கல..! எக்மொர், பாரிஸ் கார்னர்னு சுத்தாத இடமில்ல..! ஒன்னும் கதை ஆவலை..கடைசில எங்களை எல்லாம் ட்ராப் பண்ணவந்தவன் பசிக்குது சாப்டனும்ட்டான்..! அப்புறம் என்னா ...? இருக்குற காசு எல்லாம் போட்டு அவனுக்கு டிஃபன் வாங்க்கி குடுத்து, இனிமெ இந்த பக்கம் வராதெ மாமு..அப்டி எங்களை பாக்க்குனும்னா லெட்டர் போடு..நாங்க வரோம்ம்னு சொல்லி அனுப்பிச்சிட்ட்டொம்..!

இனிமெ சைக்கிள் வாங்கினவங்கிட்டெ கூட சரக்கு பார்ட்டி கேட்க கூடாதுன்னு முடிவு பண்ணொம்..!

சரி..இப்பொ வ குவாட்டர் கட்டிங்க பாப்பொம்..!படம் போஸ்டர் பாத்த மொக்கயா இருக்கெனு நினைச்சிடாந்தீங்க..படம் நேரில பாத்தா அதொட மொக்க்யா இருக்கறது தெரியும்..!..அதுல எந்த சந்தெகமும் இல்ல..! சவுதி அரேபியாவுக்கு அதிகாலை நாலு மணிக்கு ஃப்ளைட் புடிக்க வேண்டிய ஹீரொவுக்கு சவுதில சரக்கு அலவுட் இல்லைன்னு தெரிய வருது.. அதிர்ந்து போற ஹீரொ ஒரு குவாட்டருக்குகாக சென்னை ஃபுல்லா சுத்துறான். ஆனா குவாட்டர் கிடைக்கல. அந்த ஒரு நைட் நடக்குற சம்பவங்கள்தான் கதை..!

ஹீரொ சிவா அறிமுகம் ஆகும்போது என் பேரு ‘சுறா’ ன்னு சொல்லும்போது..ஹும்..ஹும்..ஒரிஜினல் விஜய் படமான சுறா அளவுக்கு காமெடி இல்ல..!

சவுதில சரக்கு கிடையாதுன்னு சொல்லும்போது ஹீரொவொட அதிர்ச்சி நம்மளயும் தாக்கி உடனடியா குவார்ட்டர் அடிக்கனும்ற உணர்வ உண்டு பண்றது டைரக்ட்ரொட திறமைனுதான் சொல்லனும்.

சரண் க்ளைமாக்ஸ்ல வில்லன சீட்டாட்ட்த்துல ஜெய்க்கும் போது, சரணுக்கு மொக்க் கார்டும், வில்லனுக்கு அதொட மோசமான மொக்க கார்டும் வரும் போது.. சீட்டாட கிளப்பொட லாஜிக் நம்மள சிலிர்க்க வச்சுடுது..!

அப்புறம் ...தீக்குச்சு கேரக்கடரும் அவன் எல்லா வண்டிய்யையும் கொளுத்துறதுக்கு சொல்லற ஃப்ளாஷ் பேக் நம்மள எல்லாம் சோகத்தின் உச்சிக்கெ கொண்டு போய்டுது..!

ஹீரொ சிவா, ஒரு அரசியல்வாதி கூட்ட்துல சிக்கி குவார்ட்டருக்கு கை நீட்டி, கைக்கெட்டனு வாய்க்கு எட்டாம போவும் போது செமஸ்டர் எக்ஸாம்ல பார்டர்ல ஃபெயிலான உணர்வு நம்மள தாக்குது..!அந்த வில்லன் ’நமீதா’ கவர்ச்சி நடிகை இல்லாத குறைய போக்குறார்..!

எஸ் ஐ சிங்காரியா வர அபினாயஸ்ரீ போலீஸா வரதும் , அதொட ஐய்டம் டான்ஸ் வைக்காத்தும் டைரக்ட்டரொட அம்மெச்சுர் தனத்த காமிக்குது.

கடைசில ஹீரொ சரக்கு ஏத்திட்டு போற வண்டில ஏறும் போதும், குவாட்டர ராவா குடிக்கும் போதும் ரசிகர்கள் உணர்ச்சிவசப்பட்டு அழறாங்கன்னு தென்மாவட்டங்களெருந்து வர ரிப்பொட் சொல்லுது..!

ஆக மொத்தம்..

பாட்டு எல்லாம் பயமா இருக்கு..!
ஃபைட் எல்லாம் பேஜாரா இருக்கு..!
கதாநாயகி கண்றாவியா இருக்கு..!
ஸ்கீரின் ப்ளெ சொதப்பலா இருக்கு..!
கேமரா கேவலமா இருக்கு..!
மியுசிக் மொக்கயா இருக்கு..!
கொரியொ கிராஃபி கொடுமையா இருக்கு..!
ஆனா டைட்டிலும், டைமிங் ஜோக்ஸ் மட்டும் டக்கரா இருக்கு..!

மொத்த்தில பார்த்து தொலைக்கவேண்டிய படம்..(டவுன்லொட் பண்ணி மட்டும்..!)!

(வாசக நெஞ்சங்கள் கமெண்ட்டுகள் ஒகென்னா..மேற்கொண்டு சினிமா விமர்சனம் எழுதலாம்..!! இதெ டைரக்டரொட படம் ‘ஓரம் போ’ வும் இது மாதிரி ஒரு சமூக சிந்தனை உள்ள படம்னு கேள்வி பட்டென்..இன்னும் பாக்கலை.. உங்களுக்கு ஒகென்னா எழுதலாம்.. வழக்கம் போல..சொம்பும், தீர்ப்பும் உங்க கைல தான்.. கமெண்ட்ட்டுக்கு காத்திருக்கும், மெண்டல்.)

Comments

  1. அட விமர்சனம் கூட சூப்பரா எழுதுற மாம்ஸ்.

    அய்யோ, தமிழ்நாடு ஒரு அறிவாளியை வெளிநாட்டிற்கு விற்றுடுச்சே...

    லோக்கல் பாய்..

    ReplyDelete
  2. அடடா ... என்ன ... விமர்சனம் ...

    சூப்பர் மச்சி...

    இந்த வரிகள் .. Hilight மச்சி ..
    என்ன திறமை ...

    பாட்டு எல்லாம் பயமா இருக்கு..!
    ஃபைட் எல்லாம் பேஜாரா இருக்கு..!
    கதாநாயகி கண்றாவியா இருக்கு..!
    ஸ்கீரின் ப்ளெ சொதப்பலா இருக்கு..!
    கேமரா கேவலமா இருக்கு..!
    மியுசிக் மொக்கயா இருக்கு..!
    கொரியொ கிராஃபி கொடுமையா இருக்கு..!
    ஆனா டைட்டிலும், டைமிங் ஜோக்ஸ் மட்டும் டக்கரா இருக்கு..!

    மொத்த்தில பார்த்து தொலைக்கவேண்டிய படம்..(டவுன்லொட் பண்ணி மட்டும்..!)!

    ReplyDelete
  3. Pothum. Ithoda nippattu. Ennadaa.. Ethough nalla panrane-nu santhoshapatten.. Old Blindi.. Open Doordi... Athma

    ReplyDelete
  4. nalla vimarsanam...

    ReplyDelete
  5. i like Athma comments

    ReplyDelete
  6. நல்லா இருக்கு படக்கதைய விட உங்க சொந்த கதையும் ....முயற்சி தொடரட்டும் Jen_guru

    ReplyDelete
  7. பாட்டு எல்லாம் பயமா இருக்கு..!
    ஃபைட் எல்லாம் பேஜாரா இருக்கு..!
    கதாநாயகி கண்றாவியா இருக்கு..!
    ஸ்கீரின் ப்ளெ சொதப்பலா இருக்கு..!
    கேமரா கேவலமா இருக்கு..!
    மியுசிக் மொக்கயா இருக்கு..!
    கொரியொ கிராஃபி கொடுமையா இருக்கு..!
    ஆனா டைட்டிலும், டைமிங் ஜோக்ஸ் மட்டும் டக்கரா இருக்கு..!

    மொத்த்தில பார்த்து தொலைக்கவேண்டிய படம்..(டவுன்லொட் பண்ணி மட்டும்..!)!

    Jen_guru

    ReplyDelete
  8. கமெண்ட்ட்டுக்கு காத்திருக்கும், மெண்டல் - ayyo ayyo super - sridhar

    ReplyDelete
  9. ok nice comment all is well kattathora

    ReplyDelete
  10. உங்க காமெடி யான எழுத்து நடை சூப்பர் பாஸ் ......... விரைவில் அரவான் விமர்சனம் எதிர் பார்கிறேன்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நண்பனுக்கு கடிதம் - 1

லோக்கல் பாய்! நீயெல்லாம் ஒரு நண்பனா?

ஓட்ஸ் கஞ்சி குடித்தவனின் ஓலம்..!