குவாட்டர் – இட் டஸ் மேட்டர்..!


நிறைய காலெஜ் மேட்டர் விட்டு போய்ட்டு, என்னா நீ சுயசரிதை எழுதி கிழிக்கிறன்னு, ஒரு நண்பன் என்ன போட்டு குமுறிட்டான். ஆனா, அவன் குடுத்த லீட் எல்லாமெ என்ன மட்டுமெ மானபங்க படுத்துற சம்பவங்களா இருந்தாலும், சத்தியத்துக்கு கட்டுபட்டு..எழுதி தொலைக்கிறென்..!

படிக்கிற காலத்துல, எனக்கு சுயதொழில்ல நம்பிக்கை ஜாஸ்தி..நாம உழைச்சு சம்பாதிக்கனும்னு, ஒரு சின்ன கன்சல்டன்சி மாத்ரி ஒரு வேலை பண்ணிட்டு இருந்தென்..(பாருங்க...டிசிஎஸ், இன்ஃபொசிஸ்லாம் பன்றத நாங்க எப்பொவொ பண்னிட்டொம்..!) அது என்னா கன்சல்டன்சின்னா, லவ் பன்றவன் எவனாவது நம்ம கிட்டெ வந்தா அவனுக்கு லவ் லெட்டர் எழுதி குடுக்குறது தான்..!

நாம அப்பொவெ பாலகுமாரன், ஜானகிராமன் மாத்ரி நாவல்லாம் படிப்பென்றாதல, அதுலெருந்து காப்பி அடிச்சு, கொஞ்சம் அப்டி , இப்டி சரி பண்ணி குடுப்பென்..! அது என்னா நேரமொ தெரியலை..ஒரு நாலு , அஞ்சு பேருக்கு ஒர்க் அவுட் ஆனதால, நம்ம புகழ் பறவிடுச்சு..(பாருங்க் எதுக்கெல்லாம் நம்மள யூஸ் பண்ணிருக்கானுங்கன்னு..!)

ஆனா நான் காப்பி அடிக்கிற விஷயம் மட்டும் ஒருத்தனுக்கும் தெரியாது..! சர்வீஸ் சார்ஜ் என்னவாயிருக்கும்னு உங்களுக்கு தெரியாதா..? குவார்ட்டர் தான்..!

அப்பொதான்..புல்லட்டு..புல்லட்டுனு (ஒருத்தந்தாங்க..!) ஒரு நண்பன் வந்து ஓன்னு அழுதான்..! தான் ஒரு பொன்ன தாறுமாறா லவ் பண்றதாவும், அந்த பொன்னு இவனை கண்டுக்க மாட்டெங்குதுன்னு சொல்லி, கதறி தீத்துட்டான்..! சரிடா..லெட்டர் தான..எழுதி தரென்னுட்டென்..!

நண்பன் ஒரு சூப்பர் புல்லட் வச்சிருந்ந்தான்..ஆகா...நமக்கு சூப்ப்ர் கிளையன்ட் மாட்டிட்டான்..! இவனுக்கு மட்டும் இந்த பொன்ன ஒத்துக்க வச்சுட்டா நாமளும், படிப்பு முடிக்கிறவரைக்கும் செட்டில் ஆயிடலாம்னு அவனை தனியா மாடில (க்ளையண்ட் மீட்டிங்னு வச்சுக்குங்களென்..) வச்சு கவுன்சிலிங் பன்னென்..!

என் மூளைய போட்டு கசக்கி, (அப்புறம் லைஃப் டைம் ப்ராஜெக்ட் ஆச்செ..!) என் மொத்த எஃபொர்ட்டும் போட்டு..ஒரு லெட்டர் எழுதுனென்...ஒரு நாலு பக்கம் இருக்கும்..! படிச்சுட்டு கையொட ஒரு குவார்ட்டர் வாங்கி கொடுத்துட்டான்..! மேட்டர் ஒர்க் அவுட் ஆச்சுன்னா அன்லிமிடெட் சரக்குடா உனக்குன்னுட்டான்..! நான் ப்ராஜெக்ட் சப்மிட் பன்னிட்டு வெயிட் பண்ணிட்டு இருந்ந்தென்..! ஒரு ரெண்டு நாள் இருக்கும்..!

பாத்தா..கொல வெறியொட என்ன தொறத்துறான்..! என்னடானு கேட்டா மேட்டர் வொர்க் அவுட் ஆகலை..அந்த பொன்னு, இவனை அவங்க வீட்ல வெற மாட்டி விட்டுடுச்சாம்..! அவன் கடுப்பாயி,,வாங்கி குடுத்த குவாட்டரையும் திரும்ப கேட்கறான்..!

ஆகா...நாம தான் ஓவரா எழுதிட்டொம்னு, என்னாடான்னு விசாரிச்சா, பய புள்ள எட்டவது படிக்கிற புள்ளய போய் லவ் பண்ணிருக்கான்..! ஏண்டா எல்லாம் சொன்னியெ, படுபாவி இதை சொன்னியாடா..கேட்டா..நீ கேட்டியான்னு என்னையே திரும்ப கேக்குறான்..! எட்டாவது படிக்கிற புள்ளைக்கு லவ்லெட்டர்..கடங்காரன்..அடி வாங்காம தப்பிச்சானெ..! என் பேர சொன்னா என்னையும்ல் போட்டு வாங்கி இருப்பானுங்க..! இவனை எல்லாம் என்னா பண்றது ...சொல்லுங்க...!

அந்த நாள்... அந்த நாள் கருப்பு நாள்...என்னையெ பல கேள்விகளை கேட்க வச்சுடுச்சு...! எத்தனை நாவல்..எத்தனை லெட்டர்..எத்தனை ஜோடி...எத்தனை குவாட்டர்...எல்லாம் போச்சு..குடிச்ச குவாட்டர திரும்ப கேக்குறான் , இதொட என்ன கேவலம் ஒரு மனுஷனு என்ன வேனும்...!ஹும்..!

முடிவு பண்ணென்..! நம்ம வாழ்க்கையிலெயெ இத நட்த்தி காமிச்சு ,நாம யாருன்னு இந்த உலகத்துக்கும் இந்த காலெஜ்க்கும் புரிய வக்கனும்னு..! இத கேட்க உங்களுக்கு ஈசியா இருக்கலாம்..ஆனா எங்கிட்டெ இருந்த நாலு பழைய பேண்ட், சட்டைய வச்சுக்கிட்டு இதுல நான் இறங்கினெனா அது எவ்வளவு கஷ்டம்னு எல்லா பயமக்களுக்கும் நல்லா தெரியும்..!

அந்த சம்பவத்த சொல்றது சொந்த காசிலெ சூன்யம் வச்சிகிற மாத்ரிதான்..இருந்ந்தாலும், சத்தியத்துக்கு கட்டுபட்டு (எத்தனை தடவை தான் நானும் கட்டு படற்து..!) சொல்றென்..கூடிய சீக்கிரம் சொல்றென்..!

Comments

  1. unmai, unmai, unmai

    Antha Kadithathil Ettavathu padikkira ponnukku alavaukku athikama advice panni eluthi en nanbhan bullettoda lifeai keduthiyeda paavi.

    kuditha quarterai thirumba ketkiraan enbatharkaaga avanai antha ponnaiye verukka advice panniye athu gnabagam illaiya.

    unnai sutri niraiya paavangal irukku, kaasikku po.

    Local boy

    ReplyDelete
  2. உண்மை..உண்மை..உண்மை..
    அந்த கடித்தில் எட்டாவது படிக்கிற பொன்னுக்கு அளவுக்கு அதிகமா அட்வைஸ் பண்ணி எழுதி என் நண்பன் புல்லட்டொட லைஃபை கெடுத்தியெடா பாவி..!
    குடித்த குவாட்டர திரும்ப கேக்க்றான்னு அவனை அந்த பொன்னையெ வெறுக்க அட்வைஸ் பன்னியெ அது ஞாபகம் இல்லையா?
    உன்ன சுத்தி நிறைய பாவங்கள் இருக்கு..காசிக்கு போ..!

    Local Boy

    ReplyDelete
  3. மாம்ஸ் .. புல்லட் சரவணன் வாழ்கைய .,,, இப்படி புரட்டி போட்டுட்டியே.... இன்னும் எத்தினை பேர் வாழ்க்கைல ...விளையாண்டு இருக்கியோ ....

    எல்லாத்தையும் எழுது மாம்ஸ் ..

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நண்பனுக்கு கடிதம் - 1

லோக்கல் பாய்! நீயெல்லாம் ஒரு நண்பனா?

ஓட்ஸ் கஞ்சி குடித்தவனின் ஓலம்..!