பங்காளிகளின் பாசப்போராட்டம்..!



நாளைக்கு தீபாவளி..நாம் ஒன்னும் போஸ்ட் போடலைன்னா, நாங்க எல்லாம் தலைக்கு எண்னை தேய்ச்சு குளிக்க மாட்டொம்னு வாசக நண்பர்கள் எல்லாம் அடம் பிடிக்கறதால..(வருஷத்துக்கு ஒரு முறை குளிக்கறத நாம எதுக்கு கெடுக்கனும் பாருங்க..!) ஒரு சின்ன லெட்டர் ரீகேப் இந்த ப்லாக்ல பாத்துடுவொம்..!

இந்த லெட்டர் எல்லாம், என்னை புகழ்ந்து அனுப்ப பட்ட மெயில்கள் தான்..! படிச்சா உங்களுக்கெ புல்லரிச்சுடும்..! இந்த மெயில் மஸ்கட்ல குப்பை கொட்டும் என் நண்பன் ஜீனியர் பையன், சவுதிக்கு நாடு கட்த்த பட்ட லோக்கல் பாய்க்கும் எனக்கும் நடந்த பாசப்போராட்டம் (எல்லார் படமும் கடைசில விட்ரும்.. படிங்க..! கொஞ்சம் பெரிய பதிவுதான்..அட்ஜஸ் பண்ணி படிங்க..! படிச்சுட்டு மறக்காமெ கமெண்ட் எழுதுங்க..!

ஜீனியர் பையன் டூ மெண்டல்

யோவ் சைமண்டெக்கெ என்ன பாத்து பயபுடுறான்.. என்ன்கிட்டே வா..என் புகழ் உலகம் முழுக்க பரவிக்கிடகுது, உன் ப்லாக் எல்லாம் எனக்கு மேட்டரெ இல்ல..வேனுன்னா என் பேர போட்டு என் ஃப்ரண்டுன்னு எழுது..உன்னையும் நாலு பேரு மதிப்பாங்க..ஒகெ..? பாரு என் அட்டாச்டு சிவிய...பாத்திட்டு திருந்து..!
_________________________________________________________

மெண்டல் டூ ஜீனியர் பையன்


மாப்பு, இந்த மாதிரி வேர்ட்ல காப்பி பேஸ்ட் பண்ண சிவி எல்லாம் நான் நிறைய பாத்துட்டென். (எவண்டா..இந்த எம்ஸ் வேர்ட்ல புல்லட்ஸ் கண்டுபுடிச்சது.. வரிசையா போட்டுறானுங்கப்பா..)நான் என்ன சொல்ரேன்னா..இந்த ஐடி ல வேலை பாக்குறவனுங்களுக்கு எல்லாம் வருஷத்துக்கு ஒரு முறை அப்ரெஸல் வக்கரதுக்கு பதிலா..ஒரு இண்டர்வியு வக்கனும்.. (ஹையா..நான் பொழைச்சென்..!) அப்பொ தெரியும்டா உங்க ஃபிலிம் எல்லாம்..!

அதுசரி...அது யாரு சைமண்டு..உன் கூட வெலை பாக்குரவரா ..! அவரு ஏன் உன்ன பாத்து பயப்படுராரு..கடன் எதுவும் வாங்கி இருக்கியா..! கம்புயுட்டர் ஒப்பன் பண்ண தெரியாம நீ பேய் முழி முழிச்சு ராஜன் தி கிரெட் கிட்ட பாட்டு வாங்கினீயெ..மறந்து போய்ட்டா..! ஆஃபிஸ் போன்ல திருட்டு தனமா ஐஎஸ்டி போன் பன்னி என் வேலைக்கெ வேட்டு வைக்க பாத்தியெ..! ஏதொ உன்கிட்டெ ஒசி சிகரெட் வாங்கி குடிச்சதாலெ..வாய்க்கு வந்த படி எல்லாம் பேச கூடாது..புரியாதா லே.
__________________________________________________________

ஜீனியர் பையன் டூ மெண்டல்

இந்த உண்மையெல்லாம் தெரிஞ்ச ஒரே சாட்சி நீதான், ஒன்னே காலிபண்ணத்தான் நான் நிம்மதியா வேலை பாக்க முடியும்.
__________________________________________________________

மெண்டல் டூ ஜீனியர் பையன்


அது சரி, அது எப்டி ஒரு பேங்கையெ ஏமாத்தி.வேலை தெரிஞ்சமாத்ரி நடிக்க முடியுது உன்னாலெ..!
உனக்கு நினைவு இருக்கா. உன் ரூம்ல ரெண்டு கம்ப்யுட்டர் நெட்வொர்க்ல கனக்ட் பன்ன ஒரு ஃபுல் பாட்டில் பேரம் பேசி கூப்ட்டு போய் ஏமாத்தினியெ. அதுக்காக கேபிள்கூட உஷார் பண்ணிட்டு வந்தனெ..! (அத கனக்ட் பன்ன நான் பட்ட பாடு எனக்கு தான் தெரியும்)
ஒரு ஐம்பது ரியால் வொர்த் கூட இல்லாத உன் பேரில உன் கம்பெனிலருந்து, ஐந்நூரூ ரியால் சார்ஜ் பன்னாங்களெ..!எல்லாம் மறந்து போய்டியா மாமு..!
வரலாறு மாறாது..இந்த மெண்டலும் மாற மாட்டான்.
மரியாதையா வாங்கின காச குடு.
__________________________________________________________

ஜீனியர் பையன் டூ மெண்டல்

யோ, நா இங்க வரும்பொது பிரெஷெர், காலேஜ் முடிச்சி புதுசா வந்த பயனேசீன் குடுத்து, ஒன்னும் சொல்லி குடுக்கமா, நம்ம வேலையே புடிங்கிடுவானோ ஒரு பயத்துலே ஊருக்கு போயடுவந்தே ஆனா நீ வந்த உடனே அதே ராஜன்தான் என்ன டைரக்டா எடுக்க GM கிட்ட பேசினாரு. உன்னோட கெட்டபுத்தினாலெ என்னே திருட்டு போன் பண்ன வெச்ச, வேனாவேனாம்னு நான் சொல்ல சொல்ல கேட்காம என்னே உன்ன மாதிரி திருட்டு போன் பன்னிவெச்சி என்னோட iஇமெஜ வாண்ட்டாட ராஜன் கிட்ட ஸ்பாயில் பன்னே Mind it.. U bloddy Polytech Student

நீ வேலை இல்லாதே நேரத்துலே எனக்கு மெயில் அனுப்பி வேல வங்கி தான்னு சொன்னியே அப்போ பெரும் பாடு பட்டு என் கம்பெனிலே உனக்கு வேல அரெஞ் பண்ணேனே அப்போ இந்த ஜூனியர் பையன (அம்மைஅப்ப முதலியாரே) ஞாபகம் இல்லையா (Reference : Samasaram athu minsaram, Visu Dialouge)..

உன்னே சந்திச்ச அந்த நாள் என் வாழ்கையிலே ஒரு கருப்பு நாள். ஏன்னா நீரொம்ப கருப்பு...
__________________________________________________________

மெண்டல் டூ ஜீனியர் பையன்

ஆஃப். பன்றியா உன் கதைய. சரி..ஃப்ரெஷா வந்த காலெஜ் பையன்னு சொல்லிறியெ..! ஃப்ரெஷா உள்ளவன் எப்படி மஸ்கட் வந்த. ஏன்னா சென்னைலெ ஒரு பய உனக்கு வேலை குடுக்கலை. ஏதொ ஒரு கப்பல்ல கண்டெய்னர் ஏறி மஸ்கட் வந்த. எப்படியொ எவனையொ மொக்க போட்டு ஒரு மன்னார் அண்ட் கம்பெனில வேலைக்கு சேந்த. கேட்டா சாஃப்ட்வேரு ப்ரொக்ராம்னு சொன்ன. நான் அப்பவெ ராஜன் கிட்டெ சொன்னேன். இவன் முழியெ சரி யில்லைன்னு. அவருதான் பாத்தா செத்த காலெஜ் லெருந்து வ்ந்தவன் மாத்ரி இருக்கானு...பொழைச்சு பொரான்னு..சர்வர் பாஸ்வெர்ட் வரைக்கும் குடுத்தாரெ..! என்ன ப்ளடி பாலிடெக்னிக் நு சொல்றியெ..நீ படிச்ச டிகிரிக்கு உனக்கு பிஸ்ஸா டெலிவரி பாய் வெலை கூட கிடைக்காது ...தெரியுமாலெ..?

சர்வருரொட எல்லா தொழில் நுட்பமும் சொல்லி குடுத்து, உனக்கு டீ, சிகரெட் வாங்கி குடுத்த இந்த பெரிய மனுஷன பாத்தா கேள்வி கேட்கிற..!

உன் கூட பழகின பாவத்துக்கு.. பழைய செருப்ப எடுத்து என்னையெ அடிச்சிக்கிரேன். என் மூஞ்சிலெயெ முழிக்காதெ. இனிமெ, நான் மஸ்கட் பக்கம் ட்ரான்ஸிட்ல கூட தலை வச்சி படுக்க மாட்டென்.
கெட் லாஸ்ட்..!
__________________________________________________________

லோக்கல்பாய் டூ ஜீனியர் பையன்

டியர் ஜீனியர் பையன் ,

உங்கள் வேதனை எங்களுக்கு புரிகிறது. இந்த மெண்டலால் பாதிக்கப்பட்டவர் நீங்கள் மட்டும் இல்லை, நீங்களும் ஒருவர் அவ்வளவு தான்

தவளை தன் வாயால் கெடும் என்பது போல் அவனுடைய யோக்கியதை எல்லாவற்றையும் அவன் ப்லாக்கில் ( mani2many.blogspot.com) எழுதி வருகிறான். உங்களுடைய கோபங்களை அதில் கமெண்டாக காட்டுங்கள்.
கூடிய விரைவில் அவன் மனைவியிடம் மாட்டுவான்.

அந்த நாளை ஆவலுடன் எதிர்பார்க்கும்...

எதிரியின் எதிரி நண்பன் என்ற முறையில் உங்களுடன் கைகுலுக்கும்...

லோக்கல் பாய். ரியாத்
__________________________________________________________

மெண்டல் டூ ஜீனியர் பையன்

நாலு நரி ஒன்னு சேருதா...! ஆனா சிங்கம் சிங்களாதாண்டா வரும் டுபாக்குர் லோக்கல் பாய்..!
__________________________________________________________

ஜீனியர் பையன் டூ லோக்கல்பாய்

டியர் லோக்கல் பாய்

Mr மெண்டல் போன வாரம்அவரே புலின்னு சொன்னாரு, இப்போ சிங்கம்னு சொல்லுறாரு, போனமாசம் பாம்புன்னு சொன்னாரு, இன்னாங்க டோடல் zoo வே அவரு தான் னா.அப்போ அவரே மனுஷன் நெனச்சி பேசிகிட்டு இருதொம். சரி தயவு செய்து அவர் Blog நேம்ம மாத்த சொல்லுங்க ( mani2many.blogspot.com பதிலா sani2many.blogspot.comவெக்கசொல்லுங்க. Plz
இப்படிக்கு
எதிரியின் எதிரி நண்பன் என்ற முறையில் உங்களுடன் கைகுலுக்கும். ஜீனியர் பையன்

__________________________________________________________

மெண்டல் டூ ஜீனியர் பையன் & லோக்கல்பாய்


அன்பு நண்பா லோக்கல், உயிருக்கு உயிரா பழகின நண்பன இந்த வேலில போற ஒணான் ஜீனியர் பையனுக்காவா என்னை எதுக்குரே. இவன பத்தி உனக்கு தெரியாது மாமு. குரு துரோகம், நம்பிக்கை துரோகம் எல்லாத்தையும் மிக்ஸில போட்டு அடிச்சா அதுல கிடைக்குமெ..அந்த ஃப்ளெவர்தான் இந்த ஜீனியர். என் கூட வேலைக்கு சேந்து, என் கிட்டெ ரிப்பொட் பண்ண சொன்னா என்ன பத்தி என் மேனஜர் கிட்டெ ரிப்பொட் பன்ன படுபாவி இவன். இந்த ஜீனியர் பையனொட பேருக்கு அல்லா கொடுத்த கொடைன்னு அர்த்தம்...ஆனா இவனொ சென்னைக்கு கிடைச்ச சாபம். வேண்டாம். உன் வேலைக்கு ஆப்பு வச்சிடுவான். தயவு செஞ்சி எங்க வேலை பாக்ரன்னு மட்டும் சொல்லிடாதெ..!

அன்பு நண்பா ஜீனியர் , சகோதரன் மாத்ரி பழகி, உன் அறிவு கண்ண திறந்த இந்த நன்பன, இந்த நாடு கட்த்த பட்ட எருமைக்காவா எதுக்குரெ..! படிக்கறகாலத்துலெ நிரைய பணம் வச்சிருந்தும், தவிச்ச வாய்க்கு ஒரு பீர் வாங்கி குடுகாத பாதகன் இவன். பணம் வசூல் பண்ணி புக் வாங்கரொன்னு சொல்லி, அத மூனு நாள்ள உக்காந்து குடிச்சான், ஆனா எனக்கொ ரெண்டெ ரெண்டு அட்டு குவாட்டர் வாங்கி குடுத்து, எல்லார் கிட்டெயும் என்ன, ஒரு வழிப்பறி திருடன் ரேஞ்சுக்கு மாட்டி விட்டவன் இவன். இவன் கூட இருந்தா ஒரு பொன்னு த்ரிம்பி பாக்காது..ஏன்னா இவன் ராசி அப்டி. வேண்டாம் இவன் சகவாசம்..சொன்னா கேளு..!

________________________________________________________

ஜீனியர் பையன் டூ மெண்டல்

அன்பு நண்பா...
என்னைப்பற்றி நண்பரிடம் நல்ல முறையில் அறிமுகபடுத்தி வைத்தமைக்கு மிக்க நன்றி...... ( பொறம்போக்கு நாயே)

நண்பர் ஜீனியர இந்த வாங்கு வாங்கிறியே என்ன ஆச்சு, பெரிசா வச்சாரா ஆப்பு உனக்கு, எங்க சாதி சனம் அப்படி செய்யாதேடா..

டைனொசரிடம் இரு தினத்திற்கு முன்பு போன் பேசினேன், உன் பெயரை கேட்டாலே அலறுகிறான். இப்போ தான் சனி (நீ தான்) விலகி கொஞ்சம் நிம்மதியாக இருக்கிறேன் என்று சொல்கிறான்.

உன் வாழ்க்கையை கொஞ்சம் திரும்பி பார். என் டிரஸ்ஸை போட்டுக்கொண்டு ஒசி சைக்கிள் வாங்கிக்கொண்டு பசங்க கிட்ட படம் காட்ட பெண்களிடம் போய் என்னிடம் கொஞ்சம் நேரம் பேசுங்கள் என்று கெஞ்சி , வழிந்து நிற்பாயே அதை சொல்லவா?

அல்பம் 5ரூ கள்ளிற்காக எத்தனை டாவை கெடுத்தவண்டா நீ. குடித்து விட்டு அவள்களிடம் மரியாதை குறைவாக பேசி உன்னிடம் பழகியதற்காகவே என்னை வெறுத்தவள்கள் எத்தனை பேர் அதை சொல்லவா? உன்னை விட்டு விலக சொல்லி எத்தனை பெண்கள் என்னிடம் கெஞ்சினார்கள். உன்க்காக பல தியாகங்கள் செய்தவனடா நான்.

இது எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு நல்லவனை திருட, அதுவும் புத்தக பணத்தை யாரிடம் சொல்ல அந்த கொடுமையை. அந்த வயதில் உன்னை தவிர வேறு யாராலும் அப்படியெல்லாம் யோசிக்க முடியுமா, அந்த சமயத்தில் என்னை பிரைன்வாஷ் செய்து அவ்வளவு பணத்தையும் குடித்தே காலி செய்தாயே...பாவி

பிறவித்திருடனடா நண்பா நீ,

என் நண்பன் ஜமுக்கை அவன் குடும்பத்தினரே ஒதுக்கி வைக்கும் அளவுக்கு அவனை ஆளாக்கினாயே அதை சொல்லவா...

உன்னால் நன்றாக இருப்பவன் ஒருவனை சொல்லுடா டேய்..
என்னை உசுப்பி விடாதே வேண்டாம்.. எங்கள் ஏரியா பெண்ணை கட்டி இருப்பதால் உன்னை இத்தோடு விடுகிறேன்..

உன் கூட செய்த பாவங்களை உன்னால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்து புண்ணியம் தேடி கொள்ள தான் இந்த கூட்டணி முயற்சி.

வளைகுடா நாட்டில் உன்னை பிளாக் லிஸ்டில் சேர்க்க தான் இந்த முயற்சி.. (சவுதி, குவைத், மஸ்கட்)- ஒகே

என்றும் எச்சரிக்கையுடன்..(ஏனென்றால் உன்னால் அவ்வளவு பட்டிருக்கிறேன்)

லோக்கல் - ரியாத்

__________________________________________________________


மெண்டல் டூ ஜீனியர் பையன்


அன்பு நண்பா லோக்கல்பாய், என்ன டொட்டல் டேமேஜ் பண்ணிட்டொம் அப்டிதான்னு
நினைக்கிறியா..! என் பேனா முனை கூர்மை ஆனது. நேர்மையானது.. நெத்து அடிச்சகாத்துல பறக்குர தெரு புழுதிக்கெல்லாம் நான் பதில் சொன்னா.. பல லட்சம் வாசகர் கொண்டப்லாக்குக்கு பொருப்பாசிரியரா இருக்க முடியுமா.?
பல அவதூறு கிளப்புற உன்னொட மெயில என்ன மாத்ரி இரும்பு உள்ளம் கொண்டவன, இந்தவீர வன்னியன என்ன பண்ண முடியும்.

சொந்த ஊருல உன் பேர சொன்னா ஒரு வாடகை சைக்கிள் கிடைக்குமா..?

சுந்தரம் தியெட்டர்ல, பூவே உன்க்காக படம் பாக்க பொனொம். தியெட்டர் ஒன்ர் எனக்கு தெரிஞ்சவன்னு சொல்லி ,கடைசிலெ முருக்கு விக்கிறவன அறிமுகம் பன்னியெ.
நீயும் ஒரு மனுஷனா..?

சட்டை சும்மாவா குடுத்த, ரெக்கார்ட் நோட் எழ்தி குடு, இல்லை உன் கணக்குல சிகரெட் வாங்கி குடுன்னு மான்ங்கெட்ட தனமா கேட்டியெ..மறந்துட்டியா மாமு..?

என் குடும்பத்தை எல்லாம் விசாரிச்சு, என் மேல பாசமா நடிச்சு, லஞ்ச் என்
கணக்குல சாப்ட்டு, காணாம போனவன் தான கயவாளிதானடா நீ..?

அதெல்லாம் விடு..நான் டாவடிச்ச பொன்னு கேக்கரமாத்ரி என்னை மெண்டல் பாண்டி.. மெண்டல் பாண்டி..சத்தமா கூப்டு..அந்த பொன்னு என்னை வாழ்வெ மாயம் கமல் ரேஞ்சுக்கு பாத்துதெ..உனக்கு மனசாட்சி இல்லை..!

வேண்டாம்..! நீ மெஸ்ல என் கணக்குல
சாப்டியெ..அந்த கணக்கும், நீ குடுத்த டீ ஷர்ட்டுக்கும்..சரியா போச்சு..
இதொட நிறுத்திக்குவொம்..!

என்றும்..பாதிக்க பட்ட.. மெண்டல்..!
__________________________________________________________

ஜீனியர் பையன் டூ மெண்டல்

அன்புள்ள நண்பர் மெண்டல் அவர்களுக்கு,

தங்களின் மெயில் கண்டேன், கலக்கமடைந்தேன். இன்னுமா நீ அவ்வளவையும் ஞாபகம் வைத்திருக்கிறாய்.

எனக்கு தெரியும் உன்னிடம் வைத்துக்கொண்டால் என் கதி அதோகதி தான்.

ஏதோ ஜீனியர் பையன் என்ற பெயர் என் சாதி சனம் பெயராக இருக்கிறதே , உதவிக்கு வருவார் என்று பார்த்தால் ஆள் ஆரம்பத்திலேயே எஸ்கேப்.

எனி ஹவ் நான் உன்னிடம் சரண்டர் ஆவதை தவிர வேறு வழியில்லை.

உன்னை நினைத்து சில வரிகள் எழுதலாம் என்று நினைத்தேன். எனக்கு தமிழ் சரியாக வராது என்று உனக்கு நன்றாகவே தெரியும். அதனால் அதை ஆங்கிலத்தில் தருகிறேன். உனக்கு எதாவது அர்த்தம் புரியவில்லை என்றால் என்னிடம் வெட்கப்படாமல் கிளியர் செய்துக்கொள்.

உனக்காக எழுதிய சில வரிகள் இதோ...

Friends forever means that you will never stop being friends...
Am I right?
I will never let myfriendshipdie down anymore...

Everlasting friendship is gold...
Never throw it away...
Never discard it from your life...
Since you never know when you will be able to get it back...
Forever you may befriends...

Over the years you will separate...
But your friendship resists to break...
Ever shall you leave them...
They will always be in your heart...
Very long years will past since you see them...
But one day...

Everything will change...
Resist giving up on them...
You will find them one day.

யுவர்ஸ் லவ்விங் ஃபிரண்ட்..
லோக்கல்பாய் -ரியாத்
__________________________________________________________


மெண்டல் டூ ஜீனியர் பையன்


அன்பு நண்பா...!
உன் கடிதம் கண்டென். மனம் உவந்தென்..!

அதொடு எங்கிருந்தொ காப்பி பேஸ்ட் செய்த கவிதையும்
கண்டென்...! கடுப்படைந்தென்...!

இருப்பினும், கவிதை பொருள் கண்டு களிப்படைந்தென்...!
லட்சியங்கள் ஏதுமில்லை..ஆனால் லட்சங்கள் நம் காலடியில்..!

சைடிஷ் இல்லாமல் சரக்கடித்த நாம் இன்று ஸ்டார் ஹோட்டலில்
ஸ்காட்ச் அடித்தொம்..!

வகுப்பை கட் அடித்த நாம் வாழ்க்கையில் ஹிட் ஆனொம்..!

இத்தனை திறமைகள் நம்மிடம் ஒளிந்திருந்தும் அரியர்கள் பல
வைத்தொம்..! அடங்காமல் திருந்திருந்தொம்..!

முன் வாழ்வை தொலைத்தொம் என்று பலறும் புலம்பும் போது, இல்லை என
நாம் மறுத்தொம்..!

எதுவும் தொலைக்கவில்லை..! எதுவும் மறக்கவில்லை..!

பிரிந்த ந்ண்பர் கூட்டம், ப்லாகில் ஒன்று சேர்ந்தது...!
_________________________________________________________

Comments

  1. hm ethuvum illai endral personel letter ellama blogil poduvathu,

    But its good to read

    Local boy

    ReplyDelete
  2. Hai mappla eppadi ippadi ellam kalakkira roomma maritta roomma english vera kathtukitta .. Sha

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நண்பனுக்கு கடிதம் - 1

வ குவாட்டர் கட்டிங் - விமர்சனம்

நண்பன் பொட்டி சிவாவுக்கு ஒரு கண்ணீர் கடிதம்..!