கூவாகமெ ஒன்னா சேந்துவந்து கும்மி அடிக்காத குறைதான்...!




இது ஒரு சைகோ சம்பவம். மனம் பலகீனமானவர்கள் இதை படிக்கவேண்டாம்.
(பில்டப் எப்ப்ப்ப்ப்ப்பூபூபூடி..?)

டினொசர் தான் ஷாருக்கான் மாதிரி இருக்கென்னு சும்மா ஃபிலிம் காட்டிகிட்டெ இருப்பான். ரொம்ப நாளுக்கு அப்புறம்தான் ரெண்டு பேருக்குமெ மீசையெ வளராது அப்புடின்ற ஒத்துமைய கண்டுபிடிச்சொம். எங்க செட்லெ அப்பொவெ நல்லா மீசை வச்சுட்டு இருந்த்து லோக்கல் பாய் மட்டும்தான். டினொசரொ ரோட்ல விக்கிற குருவி லேகியம் வரைக்கும் வாங்கி தடவி பாத்துட்டான். ஹூம்..ஹூம்..ஒரு புல்லு முளைக்குனுமெ...!

மனம் வெறுத்து போய்.. தனக்கு இல்லாத இந்த கருமம் புடிச்ச மீசை எவனுக்குமெ இருக்க கூடாதுடா மெண்டல் அப்டின்னு, ஒரு நாள் நைட் சொன்னான். இவன் என்னடா இவ்வளவு குமுறிக்கிட்டு இருக்கானெ..! அப்டின்னு சொல்லுடா மாப்பு என்ன பண்ணலாம்னென்...அவன் முதல்ல உன் மீசையை எடுறான்னான். எனக்கும் பெரிய அளவு விளைச்சல் இல்லாத்தால..நானும் எடுத்துட்டென். எடுத்த பிறகு மாமு இப்பொதான் நீ அஜய்தேவ்கான் மாதிரி இருக்க.. நாம இப்பிடியெ இருப்பொம்னான்..(எதுக்கெல்லாம் கம்பெனி போட்ரானுங்க..பாருங்க...!)

காலையிலெ எழுந்து ஒரு அஞ்சி பேருக்கு நாங்களாவெ பாதி மீசை எடுத்துட்டொம். நல்ல தூக்கத்திலெ எவனுக்குமெ அது தெரியலை. காலையிலெ ஒரெ கலவரம்..! ஆனா பாதி மீசையிலெ என்ன பண்ண முடியும்..! ஆனா டினொசரொட டார்கெட் இவனுங்க இல்லையெ...லோக்கல் பாய்தான்..! அவன் டேஸ்காலர் அப்டின்ராதாலெ கைலெ ரேஸரொட வெய்ட் பண்ணொம். ஆனா லோக்கல் பாய் எப்புடியோ இதை ஸ்மெல் பண்ணிட்டு எஸ்கேப் ஆயிட்டான். அவன் பஸ்லெ வர ரெண்டு ஃபிகர் கூட கடலை போட்டு வரதாலெ அவனுக்கு மீசை எடுக்க சிக்கமாட்டென்னுட்டான்.

அப்புறம் நாலு அஞ்சி பேரு கைலெ ரேஸரொட அலைஞ்சத பாத்துட்டு அவனெ வந்து சரண்டர் ஆயி மீசை எடுத்துகிட்டான். ஒரு பத்து பேரு கிளாஸ்லெ மீசை இல்லாம வந்து உக்காந்தா எப்புடி இருக்கும்.

கூவாகமெ ஒன்னா சேந்துவந்து கும்மி அடிக்காத குறைதான்...!

Comments

  1. மாம்ஸ், அதெல்லாம் நினைத்தால் ஒரே ஃஃபீலிங்காக இருக்குடா,

    அதென்ன அஜய்தேவகன் என்று உனக்கு நீயே பில்டப்.

    என்னைப்பற்றி சில நல்ல வார்த்தைகள் எழுதியதால் நன்றி..

    லோக்கல்பாய்

    ReplyDelete
  2. மாம்ஸ் , நீ உண்மையில் அஜயைதேவன் போல தான் இருந்தாய் அதனால் தான் கல்லுரி பெண்களுக்கு உன் மீது ஒரு மோகம் இது தான் உண்மை உன்னிடம் ஓன்று இல்லை பல திறமை இருக்கிறது நமது நண்பர்கள் இப்படி சொல்வதினால் பொறாமை கொள்ளவேண்டாம் - ஷா வடகரை

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நண்பனுக்கு கடிதம் - 1

வ குவாட்டர் கட்டிங் - விமர்சனம்

நண்பன் பொட்டி சிவாவுக்கு ஒரு கண்ணீர் கடிதம்..!