பிக்னிக் வித் பார்ட்டி

ஒரு செமஸ்டர் ரிசல்டில் எங்களில் ஒருவன் (பல வருடமாக ஒரே கிளாஸை டீஃபார் ஆகி படித்தவன்) வகுப்பிலேயே முதல் மாணவனாக வந்தான். கொஞ்சம் பணக்காரன் கூட.

வழக்கம்போல் அவனை போட்டு பூஸ்ட் பார்ட்டிக்கு ஏற்பாடு செய்தார்கள் மெண்டலும் டினோசரும். இது கொஞ்சம் வித்தியாசமாக எப்படியென்றால் பிக்னிக் வித் பார்ட்டி. அதாவது அருகில் உள்ள காரைக்கால் சென்று மருந்து சாப்பிட்டு விட்டு வருவது. ஏற்பாடுகள் எல்லாம் ரெடி.

அவன் ஜீப் எடுத்து வந்திருந்தான். சுமார் 10 பேர் என்று நினைக்கிறேன். காரைக்கால் புறப்பட்டு சென்றோம். நாங்கள் படித்தவர்கள் அல்லவா? முன்னேற்பாடுகள் எல்லாம் பக்காவாக ஏற்பாடு செய்திருந்தோம்.

அதாவது ஜீப்பை ஒட்டுவதற்கு ஒரு எக்ஸ்ட்ரா டிரைவர். ( ஏனென்றால் நாங்கள் ஃபிளாட்டானால் வண்டியை ஒட்டி வருவதற்காக.)

மேலும் எங்கள் குரூப்பில் ஒருவன் சொந்த மெடிக்கல் ஷாப் வைத்திருந்தான். அவன் நிறைய மாத்திரை எல்லாம் எடுத்து வந்திருந்தான். ஏனென்றால் யாரும் வாமிட் எடுத்துவிடக்கூடாது என்று.

பூஸ்ட் பார்ட்டி ஆரம்பம் ஆனது. வழக்கம் போல் எங்கள் மருத்துவர் ஐயா அதான் மருந்து மாத்திரை எடுத்து வந்தவன் தான் முதல் போனி, வாமிட் கம் ஃபிளாட் ( மாத்திரை மருந்து எல்லாம் வேஸ்ட்)

இரண்டாவது வண்டி ஓட்ட தெரிந்த இருவரும் ஃபிளாட்.

பிறகென்ன எல்லோரையும் பின்னாடி அள்ளிப்போட்டு ஒருவன் கூட சீட்டில் உட்காரவில்லை வண்டி ஒட்ட தெரிந்தவன் அரை மயக்கத்தில் ( இவன் பரம்பரை குடிகாரன்) வண்டியை ஓட்டி வந்து எங்கள் எல்லோரையும் ரூமில் கொண்டு வந்து சேர்த்தான்.

அன்று நாங்கள் எல்லோரும் பிழைத்ததே அதிசயம். ஏனென்றால் வண்டி ஓடவில்லை, பறந்தது.

ஓசியில் கிடைத்தால் இவர்களுக்கு ஒரு லிமிட்டே கிடையாதப்பா....

லோக்கல் பாய்

Comments

Popular posts from this blog

நண்பனுக்கு கடிதம் - 1

வ குவாட்டர் கட்டிங் - விமர்சனம்

நண்பன் பொட்டி சிவாவுக்கு ஒரு கண்ணீர் கடிதம்..!