மறக்க முடியாத நண்பன் வீட்டுக் கல்யாணம்…

மறக்க முடியாத நண்பன் வீட்டுக் கல்யாணம்…

இந்நண்பனை நாங்கள் எல்லோரும் ஜமுக்கு என்று தான் கூப்பிடுவோம். சும்மா பழம் மாதிரி இருப்பான். ( கொஞ்சம் அதிகமாக அளந்து விடுவான். எங்களின் வறுமை மற்றும் விதி பொறுத்துக்கொள்ள வேண்டிய சூழ்நிலை)

அவன் எங்கள் எல்லோரையும் மதித்து அவன் சகோதரியின் கல்யாணத்திற்கு அழைத்திருந்தான். எங்கள் அமைச்சரவையிலும் எல்லோரும் போவதாக முடிவெடுத்து அவனிடமே பஸ்ஸிற்கு காசெல்லாம் வாங்கி ரெடியாகிவிட்டோம். சுமார் 10 அமைச்சர்கள் என்று நினைக்கிறேன். பரிசு பொருள் வாங்குவதற்காக வசூல் ஆனத்தொகை வெறும் 75 ரூபாய். அதிலும் டினோசர் கமிஷன் அடித்தான்.( என்ன ஒரு பிளய்ன் சிகரெட் இதற்காக எனக்கும் அவனுக்கும் சண்டை வேறு).

எத்தனையோ கல்யாணத்தில் கலந்திருந்தாலும் இந்த கல்யாணத்தை எங்களால் மறக்கமுடியாது. அன்று பா.ம.க வினர் பந்த் அறிவித்திருந்தார்கள். சும்மாவே மரத்தை வெட்டுவார்கள் இதில் அவன் இருக்கும் ஊர் ஜெயங்கொண்டம் அவர்களின் கோட்டை வேறு. நாங்கள் பயப்படுவோமா, ஆம்பளை சிங்கமுல்ல…

டிராக்டர் பிடித்து, லாரி மாறி, கொஞ்சம் நடந்து அந்த ஊர் போய் உயிருடன் சேர்ந்ததே பெரும்பாடாகி விட்டது. அவனது அப்பா ஒரு பெரிய அரசு அதிகாரி. அவருக்கு நாங்கள் வந்தது மிகவும் சந்தோசமாக இருந்தது. ஏனென்றால் பந்த்க்கு பயந்து உறவினர்கள் கூட வராத கல்யாணத்திற்கல்லவா நாங்கள் போயிருக்கிறோம். 1000பேர் எதிர்பார்த்த இடத்தில் 100 பேர்கூட வந்திருக்கமாட்டார்கள் என்று நினைக்கிறேன்,

சரி மேட்டருக்கு வருவோம்….

கல்யாணத்தின் முதல் நாள் இரவு.. நண்பன் ஜமுக்கு நன்றாக ரூம் மற்றும் மது விருந்து எல்லாம் ஏற்பாடு செய்திருந்தான். ஒரு ரவுண்ட் போயிருக்கும், பசங்க தான் ரொம்ப பாசக்கார பசங்களாச்சே. மெண்டல் பய ரொம்ப செண்டிமெண்டாக பேசி நண்பனுக்கும் அதிகமாக ஊற்றி விட்டுவிட்டான். கல்யாணம் காலை 6 டூ 71/2 . இவனுங்க ஃபிளாட்டனதே காலை 4 மணி. அப்புறமென்ன தம்பி இல்லாமலே அக்கா கல்யாணம் நடந்திருக்கிறது. குடும்ப போட்டோ எடுக்க பிறகு வந்து அவனை தூக்கி போயிருக்கிறார்கள்.

நாங்கள் எல்லோரும் கல்யாணத்திற்கு போன நேரம் என்ன தெரியுமா?, காலை 10.30 மணி. மண்டபத்தை காலி செய்துக்கொண்டு இருந்தார்கள். வீடியோக்காரன் மட்டும் பொண்ணு மாப்பிள்ளையை வைத்து படம் எடுத்துக்கொண்டிருந்தான். அந்த சூழ்நிலையிலும் மெண்டல் பய மியூசிக்கே இல்லாமல் புதுதம்பதிகளுக்கு டான்ஸாடிக்காட்டினாயா. மானங்கெட்ட பய இப்ப தெரியுதா மெண்டல் பேர் எப்படி அவனுக்கு பொருந்துது என்று.

பிறகு நண்பன் வந்து அவன் தந்தை அவனிடம் கோபப்பட்டதையும், எங்களை எல்லாம் திட்டியதாகவும் சொன்னான். ஒரு நாளைக்கு எத்தனையோ பேர் நம்மை திட்டுகிறார்கள். இதற்கெல்லாம் வருத்தபடலாமா என்று அவனை ஆஃப் பண்ணி அந்த வருத்தத்தை கொண்டாட திரும்பவும் அவனையே போட்டோமுல்ல.....நாங்கல்லாம் பார்க்கத்தான் நல்லவன் மாதிரி ஆனால்…..

நினைவுகள் தொடரும்……

லோக்கல் பாய்.

Comments

Popular posts from this blog

நண்பனுக்கு கடிதம் - 1

வ குவாட்டர் கட்டிங் - விமர்சனம்

நண்பன் பொட்டி சிவாவுக்கு ஒரு கண்ணீர் கடிதம்..!