கொசு..!.….(கடுகு சிறுத்தாலும் காரம் குறையாதவன்)

கொசு..!

எத்தனை காயில் கொளுத்தினாலும் இவனை மட்டும் கொல்லவே முடியலை..!

கள்ளனை நம்பினாலும் நம்பலாம் ஆனால் ……………………நம்பக்கூடாது என்பார்கள் (சும்மா விளையாட்டுக்கு மாப்ள, கோவிச்சுக்காத)

முகத்தை பாவமாக வைத்திருப்பான். எங்களிடமிருந்து கொஞ்சம் தள்ளியே இருப்பான். ஏனென்றால் அவன் அப்பொழுது வயதுக்கு வரவில்லை. (ஆனா பிஞ்சிலேயே பழுத்தவன்)

பிறகு எங்களின் வீக்னஸை எல்லாம் தெரிந்துக்கொண்டு எங்களை எல்லாம் தூக்கிச் சாப்பிட்டவன்.

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது போல் அவ்வப்பொழுது சில நல்ல ஐடியாவும் குடுப்பான் ( எப்படி உருப்படாமல் போவது என்பதற்கு).

என்னுடைய அழிவில் இவனுக்கும் பங்குண்டு. (நீ எங்க ஊரு மாப்பிள்ளை என்று சொல்லியே என்னைக் கவிழ்த்தவன்..)

ம்.. மண்டையனையும், இவனையும் மறக்க முயற்சிப்பது நல்லது..

ஏனென்றால் இனியாவது நான் உருப்படுனுமுல்ல.. எத்தனை நாளைக்குத்தான் இப்படியே…………..என்ன சொல்றீங்க நண்பா,

லோக்கல் பாய்

Comments

Popular posts from this blog

வ குவாட்டர் கட்டிங் - விமர்சனம்

ஓட்ஸ் கஞ்சி குடித்தவனின் ஓலம்..!