லோக்கல் பாய் …….( ஒரு கூஜாவால் அசிங்கப்பட்டது)

மெண்டலுக்கும் டைனோசருக்கும் யாரும் மாட்டவில்லை என்றால் அவர்களின் பார்வை என் மீது தான். ஏனென்றால் நான் தான் லோக்கல் பாயாச்சே.

ஒரு ஞாயிறு மாலை, இருவரும் சைக்கிளில் படையெடுத்து என்னை தேடி வந்தார்கள். முதலில் ½ கேட்டார்கள் இல்லை என்றதும் ¼ பிறகு நாட்டுச்சரக்கு வரை இறங்கி வந்தார்கள். என்னுடையே நிலையோ அப்பொழுது அவர்களிடம் சிகரெட் கேட்டு நின்றேன். அப்பொழுதுதான் மெண்டல் டினோசர் காதில் ஏதோ ஒதினான். அது வேறொன்றுமில்லை. என்னுடைய நண்பன் ஒருவன் நாட்டுச்சரக்கு மொத்தவியாபாரி அவனிடம் வாங்கிக்கொடு என்றார்கள். நான் எவ்வளவோ மறுத்தும் அவர்கள் தான் வென்றார்கள்.

நண்பனிடம் இவர்களின் நிலையை விளக்கினேன். முதலில் மறுத்தான் பிறகு எங்களின் அரிப்பு தாங்கமால் , கலவை கலக்காத சரக்கை ஒரு கூஜாவில் கொடுத்து அதில் 10 மடங்கு தண்ணீர் கலந்துகொள்ளச்சொன்னான். அதை கலந்து குடித்தால் 10 நாள் மூன்று பேர் மூன்று வேளை வைத்து குடிக்கலாம். நண்பனோ மிகவும் கவணமாக எடுத்துசெல்லும்படியும் கூஜாவை நாளை கொண்டு வந்து கொடுக்கும்படி சொல்லி அனுப்பினான்.

இவர்களும் மகிழ்ச்சியுடன் சைக்கிளில் கிளம்பிச்சென்றார்கள். அதான் குரங்கு அப்பம் தின்ற கதையாக கொஞ்சம் தூரம் சென்றதும் ஆளுக்கு ஒரு சிப் (மொடக்) சாப்பிட்டிருக்கிறார்கள். அதான் கலவை கலக்காத சரக்காச்சே. ஏறிவிட்டது. தருமபுரம் ஆதினம் ஆர்ச் அருகில் ரோட்டிலேயே இருவரும் ஃஃபிளாட். சைக்கிள் ஒரு பக்கம் இவர்கள் ஒரு பக்கம் கூஜா ஒரு பக்கம் விடிய விடிய நடுரோட்டில். கூஜாவை யாரோ திருடி சென்றுவிட்டார்கள்.

மறுநாள் காலை அந்த பக்கமாக சைக்கிளில் சென்ற எங்கள் வகுப்பு பெண்கள் எல்லோரும் பார்த்து எங்களிடம் தெரிவித்து பிறகு அவர்களை ரூமிற்கு தூக்கிச்சென்றால் வயிறு எரிகிறது என்று அலம்பல் வேறு. அப்புறமென்ன தெளிய 2 நாள் ஆனது.

இவர்களை நினைத்து சிரிப்பதா? அழுவதா? அல்லது கூஜாகாரனுக்கு பதில் சொல்வதா?

லோக்கல் பாயாக இருப்பதிலும் சிரமம் தான்…

ம், எழுதவே அசிங்கமாக இருக்கிறதே..

இது பாதிக்கப்பட்டவனின் குமுறல்.. யாரும் கோபம் கொள்ள வேண்டாம்.

அடுத்தது ஒரு பஞ்சாயத்துக் கதை….

லோக்கல் பாய்…

Comments

Popular posts from this blog

நண்பனுக்கு கடிதம் - 1

வ குவாட்டர் கட்டிங் - விமர்சனம்

நண்பன் பொட்டி சிவாவுக்கு ஒரு கண்ணீர் கடிதம்..!