ஒரு அரை மணி நேரம் தியானம் முடியுதா இந்த உலகத்திலே?
அடுத்து, டினோசர் தான் .. வேற யாரு. க்ளாஸ்லே நடத்தறது எங்க எனக்கு புரிஞ்சிடுமோ னு .. பக்கதிலே உக்காந்து எனக்கு எதுவும் புரியமா பாத்துக்குவான்.
எங்களுக்கு அப்போவே தியானம் பண்ண தெரியும். அட நடத்தறது புரியாம நைசா தூங்கறத தான் அப்டி சொல்றேன். அப்பதான் ஒரு நாள் நான் தியான நிலைய லே இருக்கும் போது வாத்தியார் யாரையோ பொதுவா ஒரு கேள்வி கேட்டு இருக்கார். இந்த டினோசர் யாருக்கும எந்த தொல்லையும் பண்ணமே தூங்கிகிட்டு இருந்த என்னை எழுப்பி விட்டுட்டன். மாப்பிளை உன்னை கூப்ட்ருரர்னு. நானும் என் தியானம் கலைஞ்சி சார் கூப்டிங்களனு கேட்டு தொலைஞ்சிட்டேன். அவரு நிலை குலஞ்சி போய் சமாளிச்சு கிட்டு ஒரு கேள்வி கேட்டார். எனக்கு வழக்கம் போலே பதில் தெரியலை. (முழிச்சிகிட்டு இருந்தா மட்டும் தெரியவா போவுது). என் தியானம் கலைச்ச டினோசருக்கும பதில் தெரியாதம். பாருங்க என்னா க்ளோசா வாட்ச் பண்ணி இருக்கான் என்னை. ஒரு அரை மணி நேரம் தியானம் முடியுதா இந்த உலகத்திலே?
மாம்ஸ் சில சப்பவங்கள் ரொன்ப சிரிப்பா இருக்கிறது வரவேற்கிறேன் உன்னுடைய ப்லோக் - ஷாகுல் வடகரை
ReplyDelete