மயிலை டூ சென்னை...சென்னை டூ மயிலை


ஓவர் டூ சென்னை...

வாழ்வில் பல கனவுகளோடு எல்லோரையும் போலவே நானும் வேலை தேடி சென்னைக்குச் சென்றேன்.

வீட்டில் உள்ளவர்கள்,உறவினர்கள் மற்றும் லோக்கல் நண்பர்கள்,நண்பிகள் எல்லோரிடமும் சொல்லிவிட்டு பந்தாவாக எனது நண்பர்கள் சென்னையில் நல்ல வேலையில் இருக்கிறார்கள், எனக்கும் வேலை ரெடியாக இருக்கிறது என்று பீலா விட்டுவிட்டு டை கட்டிக்கொண்டு A/c யில் உட்கார்ந்து வேலை செய்வது போல் பல கனவுகளுடன் மெண்டல் கொடுத்த அட்ரஸை நோக்கி கிளம்பினேன்.

மாம்பலத்தில் அவர்கள் கொடுத்த அட்ரஸில் சரியாக போய் சேர்ந்தேன். அங்கு போய் சேர்ந்த பிறகு தான் தெரிந்தது. ஒரு ஜீவன்(மெண்டல்) உழைத்து ஒன்பது ஜீவன் சாப்பிட்டுக்கொண்டிருந்தது (வெட்டியாக வேலை தேடிக்கொண்டிருக்கிறோம் என்ற பெயரில் ).
மெண்டல் தான் பாசக்கார பயலாச்சே அங்கும் டைனோசர் கட்டுப்பாட்டில் தான் இருந்தான். நான் போன அன்று எவனும் ஒன்றும் சொல்லவில்லை, நன்றாக 3 வேளையும் வாங்கி சாப்பிட்டோம்.( அங்கு நான் ஏழையாகும் வரை). 2 நாட்களுக்கு பிறகு தான் தெரிந்தது இவர்களின் உண்மை நிலை.

மெண்டல் காலையிலேயே எழுந்து எல்லோருக்கும் சப்பாத்தி ரெடி பண்ணி, பக்கத்தில் இருந்த அய்யர் கடையில் ஒரு சர்வரை கரெக்ட் பண்ணி ஒரு பூரி செட் வாங்கி அதில் கிடைக்கும் சாம்பார், கிழங்கை வைத்து எல்லோருக்கும் உணவளிப்பான். He is really great.
நானும் ஒரு வாரம் போல் வேலைத்தேடிக்கொண்டிருந்தேன், சிலருக்கு வேலையும் கிடைத்தது, ஆனால் சம்பளம் கிடையாதாம். வேலை மட்டும் செய்ய வேண்டுமாம். பிறகு நைட்டானால் வேலை செய்த இடத்தில் எதை சுருட்டலாம் என்று டைனோசர் தலைமையில் Group Discussion நடக்கும். பின்ன இவர்கள் போற கம்பெனி எப்படி விளங்கும்..

அய்யோ சாமி இந்த பொழப்பு நமக்கு வேண்டாம் இந்த வேலையை தான் நான் ஊரிலேயே அழகா செய்வேன்ல என்று மெண்டலிடம் மட்டும் சொல்லிவிட்டு அன்றே நான் கிளம்பிவிட்டேன் சென்னையிலிருந்து.

பிறகு நான் என்னுடைய முழுத்திறமையில் முன்னேறிய கதையை அடுத்ததில் சொல்கிறேன்.

என்றும் அன்புடன்,
லோக்கல் பாய்..

Comments

Popular posts from this blog

நண்பனுக்கு கடிதம் - 1

லோக்கல் பாய்! நீயெல்லாம் ஒரு நண்பனா?

ஓட்ஸ் கஞ்சி குடித்தவனின் ஓலம்..!