ஓவர் டூ சென்னை…!
இவ்வளவு நேரம் என் மொக்க கதைகளை படித்து சகித்த நண்பர் கூட்ட்த்துக்கு நன்றி.
ஒருவழியா, படிச்சு கிழிச்ச பிறகு, ஆளுக்கு ஒரு பத்து அரியரோட வெளிய வந்த்தோம். அதிலும் இந்த டினொசர் பதிமூனு அரியரோட வெளிய வந்து, முதல் இட்த்தை தக்க வச்சுகிட்டான். வெளிய வந்தொம் அப்டினு சொல்லறத விட விரட்டபட்டொம்னு தான் சொல்லனும்.
கல்லூரி முடிவில் நடந்த சில காதல் சம்பவங்களை ஸ்கிப் பண்ணிடுவொம். ஏன்னா, இந்த ப்லாக்கொட நோக்கம் ஒரு கட்டிங் சரக்குக்கெ கஷ்டபட்ட நாங்க எப்படி வாழ்கைலெ உயர்ந்து ஸ்டார் ஹொட்டல்லெ ஸ்காச் சாப்பிடுரொம், அப்டின்னு, உலகத்துக்கு உணர்த்தரது தான்.
வெறும் வாய மட்டும் வச்சுகிட்டு எப்டி நாங்க வேலை வாங்க முடிஞ்சது?
லாரி ஏறி சென்னை வந்த நாங்க எப்டி லக்சுரி வாழ்க்கை அடைய முடிஞ்சது?
திரும்ப திரும்ப அரியர் எழுத போய் நாங்க பட்ட அவமான்ங்கள் எத்தனை?
(இதிலெ எங்க கூடவே படிச்ச பொண்ணு ஒண்னு ,மேல படிச்சு, எங்க டிபார்மெண்ட்லெயெ சேர்ந்து பாடம் எடுத்த கொடுமையெல்லாம் நட்ந்து இருக்கு..! ஸோ..நாங்க அரியர் எழுதவெ பதுங்கி போக வேண்டிய பரிதாபம்..)
திரும்ப திரும்ப சில பேப்பர்களை எழுதினாலும், ஒரு பத்து மார்க்கு மேல வாங்கமுடியாத பாவியாயிட்டொம். இந்த லட்சனத்திலெ ஆன்ஸர் ஷீட் எல்லாம் கை மாத்தி எழுதுவொம். அப்டியும் பத்து மார்க் தான் வருதுன்னா, நம்ம எஜிகேஷன் ஸிஸ்ட்த்திலெ எங்கொ பெரிய ஒட்டை இருக்குனுதான் சந்தேகம் வருது.
சில சமயம் மொத்தம் கொஸ்டின் பேப்பரெ அவுட் ஆஃப் ஸிலபஸொ அப்டின்னு டவுட் ஆய்டும்.
ஆன்ஸர் ஷீட் கடைசிலெ, நாங்க ரொம்ப ஏழை குடும்பத்த சேர்ந்த்தவங்க, தயவு செஞ்சி பாஸ் போட்ருங்கன்னு கெஞ்சி பாத்துட்டொம்..ஒண்ணும் ஒர்க் அவுட் ஆகலை..!
எப்டி இந்த அரியர எல்லாம் முடிச்சொம்.
எவ்வளவு செலவு ஆச்சு (புரியலையா..சேஸிங்தான்..!)
இதை எல்லாம் அப்டியெ விட்டுட்டு நாம சென்னை ரயில் (சரி..சரி…லாரிதான்) ஏருவொம்..!
ஓவர் டூ சென்னை…!
"" ஆன்ஸர் ஷீட் கடைசிலெ, நாங்க ரொம்ப ஏழை குடும்பத்த சேர்ந்த்தவங்க, தயவு செஞ்சி பாஸ் போட்ருங்கன்னு கெஞ்சி பாத்துட்டொம்..ஒண்ணும் ஒர்க் அவுட் ஆகலை..!""
ReplyDeleteம் அத்தனை பேரும் இதே டெக்னிக்கை பாலோ பண்ணினால் எப்படி விளங்கும்
மெண்டல் நம்ம பசங்க எல்லாம் இந்த ஃபீல்டில் தான இருக்கானுக, ஒரு கமெண்டையும் காணோம்
லோக்கல் பாய்