Posts

Showing posts from 2010

பாசக்கார நண்பன் ஈமொவுக்கு..! உன் பழைய பங்காளியின் குமுறல்..!

பாசக்கார நண்பன் ஈமொவுக்கு..! உன் பழைய பங்காளியின் குமுறல்..! சரக்கும் சைடிஷ்மாய் ஒத்து வாழ்ந்த நாம், கால கொடுமையினால் தனித்து வாழ்கிறோம்..! இந்த கடிதம் உன் மனசாட்சியை உளுக்குமாயின் நீ தெறித்து ஃபேஸ்புக்குக்கு வருவாய். இல்லையெல்..! நீ ரத்த வாந்தி எடுப்பது நிச்சயம்.. (என்ன பாக்குற..இப்டிதானெ எங்களை எல்லாம் ஏமாத்தின ..படிக்குற காலத்துல) நாம் வாழ்ந்த கால கட்ட்த்தை ஃப்ளாஷ் பேக் மியுசிக்கொடு நினைத்து பார்க்கிரென்..! அது ஒரு மாலை நேர மழைக்காலம்...மூதெவி வரக்கூடாது என எல்லாரும் கதவை சாத்தும் நேரம், என் கேடு கெட்டநேரம் தேடி போய் உன் கதவை தட்டினென்..! முதல் சந்திப்பிலெ, கையிலெ டிஃப்ன் பாக்ஸ் , அதிலெ ஒரு குவாட்டர் ஊற்றி, குடிக்க தயாராய் இருந்தாய். ஏன் என்று கேட்ட்தற்க்கு, அவசரத்துக்கு இப்ப்டிதான் என வெட்கம் இன்றி பதில் சொன்னாய்..! தொட்டு கொள்ள எலுமிச்சை ஊறுகாய் என சிக்கனத்தின் சிகரமாய் போனாய்..! அப்பொது கூட நீ ஒரு போதை மருந்து சப்ளையர் என தெரிந்து இருந்தால் நான் அடி பட்டாலும் பரவாயில்லை என மாடி வழியெ கீழெ குதித்தாவது தப்பி இருப்பென் .ஆனால் விதி வலியது..அதன் கரங்கள் கொடியது..! உன் கண

வ குவாட்டர் கட்டிங் - விமர்சனம்

ஹலொ..ஃப்ரெண்ட்ஸ்..! போன வாரம் போட்ட உபுண்ட்டு டெக்னிகல் ஆர்டிகல் கிளிக் ஆகி போச்சுன்னு உங்க கமெண்ட்ஸ பாத்தாலெ தெரியுது. நன்றி..நன்றி..நன்றி..! இதுல என்னா மேட்டர்னா இது மாத்ரி நிறைய ப்லாக் பதிவுலகத்துல இருக்கறதால மெனக்கெட்டு இதெல்லாம் எழுதி உங்க உயிரெல்லாம் வாங்குறதுக்கு பதிலா..நமக்கு என்ன வருமொ, அதையெ பன்னுவொம்னு ஒரு யோசனை.. சரி, இந்த வாரம், ஒரு சினிமா விமர்சனம் பாப்பொம்.. ஆனா இந்த சினிமா விமர்சனமும் பல பேர் ரூம் போட்டு எழுதுறாங்கலெ..நம்ம என்னத்த எழுதி கிழிக்க போறோம்னுதான் இது வரை அந்த மேட்டருக்கெ போகலை...ஆனா போன வாரம் பாத்த ’வ குவாட்டர் கட்டிங்’ பட்த்துக்கு மட்டும் எழுதால்ம்னு ஒரு ஐடியா..! ஏன்னா, பட்த்துக்கு நம்மக்கும் உள்ள கனெக்‌ஷன் தான். நமக்கும் இது மாதிரி ஒரு ஃப்ளாஷ் பேக் உண்டு..அத மொதல்ல பாத்துடுவோம்..! ஒரு நாள் சென்னைல, ஒரு டெலிபோன் பூத்ல உக்காட்ந்து, வேற வேலை வெட்டி இல்லாத்தால டெலிபோன் பூத் பாத்துக்குற பொன்னுக்கிட்டெ கடலை போட்டுட்டு இருந்தொம்..! இந்த சதிகார நண்பர்கள் எல்லாம் எந்த பொன்னு அந்த டெலிபோன் பூத்துக்கு வேலைக்கு வந்தாலும் இதுதான்மா உன் அண்ணன்னு அறிமுகம் என்னை மட

உபுண்ட்டுவும் சில உண்மைகளும்.....!

ஹலொ...நண்பர்களெ..! இந்த வார பதிவு ஒரு சேஞ்சுக்காக, டெக்னிகல் இன்ஃபர்மேசன் பகிர்ந்துக்க போறெம்..! எவ்வளவு நாள் தான் நம்ம மொக்க வாழ்க்கை வரலாறையெ பாக்றது..? அதுனால இதையும் படிச்சு தொலைங்கப்பா..! இப்பொ நாம பாக்க போறது...லினக்ஸ் உபுண்ட்டு (மாத்தி படிச்சா ..வேற அர்த்தம் வரும்டா..லோக்கல்..கேர்ஃபுல்லா படி..) ஆப்ரெட்டிங் சிஸ்ட்ட்த்த பத்திதான். நான் ஒரு வருஷத்துக்கு முன்னாடியெ இதை ட்ரை பண்ணி பாத்துட்டு, சவுண்ட் ட்ரைவர் இல்லாம ட்ராப் பண்ணிட்டென்..! ஆனா இப்பொ புது பதிப்பான உபுண்ட்டு 10.10 ட்ரை பண்ணி அசந்துட்டென்..! நீங்களும் அதை முயற்சி பண்ணதான் ..நான் ஆஃபிஸ் டையத்துல எழுதுரென்..( இல்லன்னா மட்டும் என்னத்த கிழிக்க போறென்னு..லோக்கல் நினைப்பான்...)... முத்தல்ல சொல்ல வேண்டிய தகவல் என்ன்னா..இது ஒரு ஃப்ரீ ஓஸ். நாம தான் ஃபீரியா பினாயில் குடுத்தாலும் அதை குடிச்சுட்டு, அந்த பாட்டிலையும் கழுவி வீட்டுக்கு எடுத்துட்டு போய்டுவொமெ..! அதுனாலெ சந்தெகமெ இல்லாம இது நம்மக்கு பிடிக்கும்..! சில பேர் ...எக்ஸ்பி ய மட்டும் என்னா காசு குடுத்தா யூஸ் பண்ரோம்னு நினைக்கலாம்..! ஆனா இந்த பதிவு அந்த மாதிரி கயவாளிக

குவாட்டர் – இட் டஸ் மேட்டர்..!

Image
நிறைய காலெஜ் மேட்டர் விட்டு போய்ட்டு, என்னா நீ சுயசரிதை எழுதி கிழிக்கிறன்னு, ஒரு நண்பன் என்ன போட்டு குமுறிட்டான். ஆனா, அவன் குடுத்த லீட் எல்லாமெ என்ன மட்டுமெ மானபங்க படுத்துற சம்பவங்களா இருந்தாலும், சத்தியத்துக்கு கட்டுபட்டு..எழுதி தொலைக்கிறென்..! படிக்கிற காலத்துல, எனக்கு சுயதொழில்ல நம்பிக்கை ஜாஸ்தி..நாம உழைச்சு சம்பாதிக்கனும்னு, ஒரு சின்ன கன்சல்டன்சி மாத்ரி ஒரு வேலை பண்ணிட்டு இருந்தென்..(பாருங்க...டிசிஎஸ், இன்ஃபொசிஸ்லாம் பன்றத நாங்க எப்பொவொ பண்னிட்டொம்..!) அது என்னா கன்சல்டன்சின்னா, லவ் பன்றவன் எவனாவது நம்ம கிட்டெ வந்தா அவனுக்கு லவ் லெட்டர் எழுதி குடுக்குறது தான்..! நாம அப்பொவெ பாலகுமாரன், ஜானகிராமன் மாத்ரி நாவல்லாம் படிப்பென்றாதல, அதுலெருந்து காப்பி அடிச்சு, கொஞ்சம் அப்டி , இப்டி சரி பண்ணி குடுப்பென்..! அது என்னா நேரமொ தெரியலை..ஒரு நாலு , அஞ்சு பேருக்கு ஒர்க் அவுட் ஆனதால, நம்ம புகழ் பறவிடுச்சு..(பாருங்க் எதுக்கெல்லாம் நம்மள யூஸ் பண்ணிருக்கானுங்கன்னு..!) ஆனா நான் காப்பி அடிக்கிற விஷயம் மட்டும் ஒருத்தனுக்கும் தெரியாது..! சர்வீஸ் சார்ஜ் என்னவாயிருக்கும்னு உங்களுக்கு தெரியாதா..? குவா

பங்காளிகளின் பாசப்போராட்டம்..!

Image
நாளைக்கு தீபாவளி..நாம் ஒன்னும் போஸ்ட் போடலைன்னா, நாங்க எல்லாம் தலைக்கு எண்னை தேய்ச்சு குளிக்க மாட்டொம்னு வாசக நண்பர்கள் எல்லாம் அடம் பிடிக்கறதால..(வருஷத்துக்கு ஒரு முறை குளிக்கறத நாம எதுக்கு கெடுக்கனும் பாருங்க..!) ஒரு சின்ன லெட்டர் ரீகேப் இந்த ப்லாக்ல பாத்துடுவொம்..! இந்த லெட்டர் எல்லாம், என்னை புகழ்ந்து அனுப்ப பட்ட மெயில்கள் தான்..! படிச்சா உங்களுக்கெ புல்லரிச்சுடும்..! இந்த மெயில் மஸ்கட்ல குப்பை கொட்டும் என் நண்பன் ஜீனியர் பையன், சவுதிக்கு நாடு கட்த்த பட்ட லோக்கல் பாய்க்கும் எனக்கும் நடந்த பாசப்போராட்டம் (எல்லார் படமும் கடைசில விட்ரும்.. படிங்க..! கொஞ்சம் பெரிய பதிவுதான்..அட்ஜஸ் பண்ணி படிங்க..! படிச்சுட்டு மறக்காமெ கமெண்ட் எழுதுங்க..! ஜீனியர் பையன் டூ மெண்டல் யோவ் சைமண்டெக்கெ என்ன பாத்து பயபுடுறான்.. என்ன்கிட்டே வா..என் புகழ் உலகம் முழுக்க பரவிக்கிடகுது, உன் ப்லாக் எல்லாம் எனக்கு மேட்டரெ இல்ல..வேனுன்னா என் பேர போட்டு என் ஃப்ரண்டுன்னு எழுது..உன்னையும் நாலு பேரு மதிப்பாங்க..ஒகெ..? பாரு என் அட்டாச்டு சிவிய...பாத்திட்டு திருந்து..! _____________________________________________________

சரக்கு பார்ட்டியும், சத்திய சோதனையும்..!

Image
சர்வீஸ் ஸ்டோரிஸ்- (தண்ணில கண்டம் பார்ட்-1) சரி இப்பொ..ஒரு சர்வீஸ் ஸ்டொரிய பாத்துடுவொம்..! வாழ்க்கை இப்டியெ, ஒரு டைப்பா ஒடிகிட்டு இருந்ந்த்து.. கூட படிச்ச பய மக்கள் எல்லாம் என்னை ஒரு சர்வீஸ் என்ஞினியர்னெ நம்பிட்டானுங்க..! நானும் பயங்கரமா படம் காட்டி என்னை பில்டப் பண்ணிகிட்டென்..! யாரவது ஆர்வ கோளாறுல என்னை பாக்க ஆஃபிஸ் வந்துடுவானுங்க..! வந்தவனுங்களை அப்டியெ டீகடையொட திருப்பி அனுப்பிடுவென்..அப்புறம் ஆஃபிஸ் உள்ள வந்து, நம்ம அல்ல கையா இருக்கிறது தெரிந்சா நமக்கு படம் உட்ராதா..? இதுல எப்டியாவது எனக்கும் ஒரு வேலை வாங்கி குடுன்னு ரெக்கமெண்டெஷன் வேற..! நானெ சொந்த சூட்கேஸ் கூட இல்லாம அல்லாடிட்டு இருந்தென்..! நான் எங்க...? எல்லாரும் இலக்கு இல்லாம சுத்திட்டு இருந்தானுங்க.! ஒருத்தனுக்கும் வேலை கிடைக்கல..! கேட்டா தோல்வியெ, வெற்றிக்கு முதல் படின்னுவானுங்க..! ஆனா வெற்றிய எத்தனையாவது மாடில கொண்டுபோய் வ்ச்சிருக்கானுங்கன்னு...ஒருத்தனுக்கும் தெரியலை..! ம்..சரி இப்பொ நான் பலி கடா ஆக்க பட்ட இன்னொரு சம்பவத்த பாப்பொம்..! ஆஃபிஸ் வேற இட்த்துல மாத்துற ப்ரொப்போசல் ஒன்னு வந்த்து..! மவுண்ட் ரோடு பக்கம் பெரிய ஆஃபி

16 வருஷ்த்து பழைய படம்..!

Image
உலகின் தலை சிறந்த பத்து போட்டொக்களில் ஒன்றாக வரக்கூடிய, காண்பதற்க்கு அறிய, பார்த்தாலெ புல்லரிக்க்கூடிய ...என்னா...மொக்கை போதுமா...! சரி..சரி..! இந்த போட்டோ எடுக்கபட்டு வருஷம் 16 ஆவுது..! என்னாடா இது...கார்த்திக், குஷ்பு பட டைட்டில் மாத்ரி இருக்கெ..வாழ்க்கை ரொம்ப ரம்யமா இருந்து இருக்கும்னு மட்டும் நினைச்சிடாந்திங்க..! எங்க காலெஜ் வாழ்க்கை ரெணிகுண்டா ரெஞ்சுக்கு தான் இருந்த்து..! சரி இப்ப போட்டொல இருக்கிற கனவான்களை பத்தி பாப்பொம்..! முதல்ல நிக்கிறானெ..மெட்ரிகுலெசன் ஸ்கூல் யூனிஃபார்ம் போட்டு....அவன் தான் மண்டையன்..பெயர் காரணம் ஒன்னும் பெருசா இல்லை..! மண்டை பெருசா களிமண்னொடு இருந்த்தால..மண்டையன்னெ வச்சுட்டொம்..! இவன் பிரபுதேவா மாத்ரி டிரஸ் பண்ணுவான், ஆனா பர்ஃபாமென்ஸ் எல்லாம் வடிவெல் ரேஞ்சுக்குதான் இருக்கும்..! இவன் புத்திசாலி தனத்துக்கு தனியா அப்புறம் ஒரு பதிவு போடுவொம்..! அடுத்து, ஸ்லொ சைக்கிள் ஒட்ற மாத்ரி உட்காந்து இருக்கிறவன் பேரு, கிச்சா. கிச்சான்னவுடனெ ஜெண்டில்மேன் அர்ஜுன் மெமரில வருதா..வந்தா நான் பொறுப்பு இல்ல..! ஆனா ஆளு உலக மகா நடிகன்..! நொடிக்கு ஒரு முறை மூஞ்ச மாத்தி மாத்தி எதிராளி

கருப்பு சாமிக்கு ஒரு கடிதம்..!

Image
எனதருமை நண்பா..! உன்னை பற்றி உன் பெருமை பற்றி சொல்ல, நான் செய்த பாக்கியம் தான் என்ன..? உனக்கு கடிதம் எழுத நினைக்கயில் எதை எழுதுவது..எதை விடுவது. என மண்டை காய்ந்து மலைத்து நிற்கிரென் நண்பா..! நாங்கள் வளரும் போது, பாத்து போங்க காத்து கருப்பு அடிச்சுடும்னு சொல்லுவாங்க..! உன்னை என்ன சொல்லி வளர்த்தார்களொ..என் ..நண்பா.. அந்த இருட்டுக்கெ சவால் விடும் கும்இருட்டு நண்பா ...அதை சொல்லவா..? மாயவரம் பஸ் ஸ்டாண்டுக்கெ தாதாடா நான் என படம் காமித்து.. ஒரு முறை போலீஸ் ரெய்டில் ரொட்டொர பழக்கடையில் பதுங்கி பழம் விற்றாயெ நண்பா..அதை சொல்லவா..? ஒரெ ஒரு மக் கள்ளு குடிப்பொம் என என்னை கூட்டி போய்.. என்னை மட்டையாக்கி பனை மரத்திக்கு கீழெ படுக்க வைத்து எஸ் ஆனாயெ ..நண்பா ..அதை சொல்லவா..? லோக்கல் பாயின் பர்ஸ்னாலிட்டிக்கு ஈசியாக மடங்கி இருக்க வேண்டிய பாப்பாவை, கள்ளு குடித்து உளறி கெடுத்தாயெ பாவி நண்பா.. ..அதை சொல்லவா..? டினொசரொடு சேர்ந்து சதி செய்து என் பட்ட பெயரை பெண்களிடம் பரப்ப ப்ளான் போட்டாயெ.. சதிகார நண்பா ..அதை சொல்லவா..? ஒரு குவாட்டருக்கு ஒரு கையெழுத்து என எங்கள் ரெக்காட் நோட்டில் HOD கையெழுத்தை அப்டியெ போட்டு

நண்பனுக்கு கடிதம் - 1

Image
அனுப்புனர். மெண்டல், அபுதாபி. பெருநர்: கோகுல், குவைத். அன்பு நண்பா , எங்கெ போனாய்..? சிந்தனை முத்துக்களை எல்லாம் வெளியெ சிந்தாமல், மனதிலெயெ புழுங்கி போய், எங்களொடு சேர்த்து அறிவை தொலைத்தாயெ..! நன்பா..! பாடம் புரியாமல் பொனாலும்..முத்து முத்தாய் நோட்ஸ் எடுப்பாயெ..நன்பா..? அப்பாஸ் போல் இருந்தாலும் ஃபிகர் கரெக்ட் பண்ண தெரியாத அப்பாவி நண்பா.. நீ..எங்கு போனாய்..? என்னையும் மனிதனாக மதித்து வீட்டுக்கு கூட்டிப்போய் விருந்தளித்தாயெ நண்பா..! பாப்ரி மசூதியை இடித்த போதும்..பதறாமல் முத்து கடையில் பன்னும் டீயும் சாப்டாயாமெ..! உன் பொருமைக்கு அளவெல்லையா..? ரோட் சைட் ரொமியொவாய் சுத்தி த்ரிந்த லொக்கல் பாய்க்கு ஒரு சொல் சொல்லி திருத்தி இருக்க கூடாதா..? மைக்ரொப்ராசஸ்சர் பேப்பர் எக்ஸாம் போது.. பாடம் தெரிந்த மாத்ரி நான் உளரியதையும் காது கொடுத்து அரை மணி நேரம் கேட்டாயெ..என்னெ உன் பொருமை...! வாடகை சைக்கிள் கட்டுபடியாகத எனக்கு, காதல் செய்ய உதவியாய் சைக்கிள் குடுத்து உதவிய நண்பா..நீ எங்கு போனாய்..? சிகரெட் இல்லாமல் கஷ்டபட்ட எங்களுக்கு, அஞ்சு பத்து என்று ஸ்பான்சர் செய்தாயெ நன்பா..! எப்படி என் கடனை தீர்ப்பென்..!

ரெக்கவரி ஆப்ரெஷன் – 1

Image
ஒருமாதிரி, கஸ்டமர் கால்ஸ் எல்லாம் போக ஆரம்பிச்சென்.. கால்ஸ் கோ ஆர்டினெட்டர் நம்ம ஆளுங்கறதால லைட்டான கால்ஸ் மட்டும் எடுத்துட்டு போய்ட்டு, சர்வீஸ் ரிப்பொட்ல பெருசா நிறைய எழுதி, கையெழுத்தையும் நானெ போட்டும் ஒருமாதிரியா காலம் ஒடிட்டு இருந்த்து. சமயம் கிடைக்கும் போதெல்லாம் ஓசி போன்ல கஸ்டமர் ப்ளெஸ்லருந்து கால் பண்ணி கோ ஆர்டினெட்டர் கிட்டெ கடலை போடுவென். ஆனா ஆஃபிஸ்ல நான் அடிக்கடி போன் பண்ணி ரிப்பொட் பன்றன்னு ஓரெ பாரட்டு. ஆன சமயத்தில நம்ம கண்லய மண்ன தூவிட்டாங்கன்னா பாத்துக்குங்களென்..! ஒரு நாள், அர்ஜெண்ட் கால்ஸ் ஒன்னு இருக்கு, உடனெ ஆள் அனுப்புன்னு எங்க பாஸ் சொல்லிட்டார். சரின்னும் என் மெனஜரும்...சும்மாதானெ இருக்கான்னு, என்ன போய்ட்டு வர சொல்லிட்டாரு..! நான் என்ன ப்ராப்ளம்ன்னு கேட்டென்..! அவரும் பார்டிஷன் டேபிள் ப்ராபளம். போய்ட்டு வான்னு சொல்லிட்டாரு..! எனக்கொ ஒன்னும் புரியலை..! கடங்காரன் கொஞ்சம் டீடெயிலா சொல்லிருக்க கூடாது. (அப்பொல்லாம் என்ன கூகுளா இருந்த்து..கண்டு பிடிக்க..?) விபரம் கேட்கவும் யாரும் இல்லை ஆஃபிஸ்ல..நானா யொசிச்சு..சரி.. பார்டிஷன் டேபிள் ப்ராபளம்ன்னா, கம்புயுட்டர் வச்சிருக்ர ட

லோக்கல் பாயின் ஒரு நாள் வாழ்க்கை..! (இதுவும் ஒரு பொழைப்பா..!)

Image
அப்பாவொ அரேபியாவில், அதனால் ஆடைகளுக்கு பஞ்சமில்லை..! பளிச்சென்ற உடை என்றாலும் பாக்கெட் மணி நிலவரம் சரி இல்லை..! எல்லா பொய்யும் சொல்லி ஆகி விட்ட்தால் அம்மாவை ஏமாற்ற வழி இல்லை..! பத்து ரூபாயொடு பஸ் ஏறினாலும் பந்தாவுக்கு குறைச்சலில்லை..! வேறு வழியெ இல்லை என்றால் டிக்கெட் எடுத்து, கல்லூரி பெண்களை முடிந்த வரை சைட் அடித்து.. மன்னம் பந்தல் வரை ஒரு பஸ் பயணம்..! பாலிடெக்னிக் படிப்பது தெரிய கூடாது என்பதால், ஆர்ட்ஸ் காலெஜ் பொன்னுங்களை மட்டும் சைட் அடிக்கும் கயவாலி தனம். கையில் பேருக்கு ரெண்டு நோட் புக், அதையும் கடலை போட வசதியாக் ஜ்ன்னல் வழி ஃபிகருக்கு..! இறங்கிய உடன் ஒரு சிகரெட் ஒரு டீ, (பல சமயம் ஒசி) , முத்து டீ கடையில் திட்டு வாங்கி, சேகர் மெஸ் செருப்படி பட்டபின், கூட்டமாய் கிளாஸுக்கு போய், பாடம் புரியாமல் பேய் முழி, முழித்த்தில் பாதி நாள் முடிந்திருக்கும்..! அம்மா கொடுத்த பணம் எல்லாம், புகையாய் மாறியதால்..! மெஸ் அக்கவுண்ட் உள்ள உயிர் நண்பனிடம் நெருங்கி பழகி மதியம் லஞ்சை ஒப்பெற்றி மறுபடி சிகரெட் கொஞ்சம் பான் பராக் போட்டு ஒரு வழியாய் கல்வி பயின்று வெளியெ வந்தால் மணி நாலு..! கொஞ்ச நேரம் கிரிக்

பல கிளைகளாய் பிரிந்தாலும், வேரை மறக்காமல் இருப்பொம்..!

Image
அன்பு நண்பா...! உன் கடிதம் கண்டென். மனம் உவந்தென்..! அதொடு எங்கிருந்தொ காப்பி பேஸ்ட் செய்த கவிதையும் கண்டென்...! கடுப்படைந்தென்...! இருப்பினும், கவிதை பொருள் கண்டு களிப்படைந்தென்...! மண்டையில் படிப்பு ஏறவில்லை..! ஆனாலும் நாம் வெளிநாடு விமானம் ஏறினொம்..! வகுப்பில் கடைசி பெஞ்ச் ஆனாலும் வாழ்க்கையில் முதலாய் வந்தொம். முன் வாழ்க்கையில் ரியலாய் வாழ்ந்த நாம், பின் வாழ்க்கையில் ரியாலில் புரண்டொம்...! படிக்கும் பசங்களால் உதாசீன படுத்த பட்ட நாம் அவர்களுகெ உதாரணமானொம்...! வகுப்பு பாட்த்தை அலட்சிய படுத்தினோம்...! ஆனால் வாழ்க்கை பாட்த்தை கற்று கொண்டொம்...! கால்குலெட்டெரெ யூஸ் பன்ன தெரியாமல் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தொம்..! ப்ரொக்ராம் தெரியாமல் லேபுக்கு வெளியெ விரட்டபட்டாலும், வெயிலில் சர்வெ எடுக்கும் சிவில் ந்ண்பர்களை கேலி செய்தொம்..! மதங்கள் நம்மை பிரித்த போதும், ஒரெ சிகரெட்டை ஒற்றுமையாய் ஊதினொம்..! பொய் கணக்கு சொல்லி வீட்டில் பணம் வாங்கி, பல நாட்கள் கூத்தடித்தொம்..! சின்னதாய் சண்டைகள் போட்டொம்..! மறுநாளெ மன்னிப்பு கேட்டோம்..! பெரிய கிரிக்கெட் டீம் என படம் காமித்து, லீக்கின் முதல் மேட்சிலெயெ தோற்

குவைத்திலிருந்து கோகுலின் குமுறல்..!

Image
கல்லுரி வாழ்கை ...! கல்லூரியில் படிக்க வேண்டும் நானும் ஒரு நல்ல படிக்ககூடிய மாணவனாய் வரவேண்டும் B.E இல் சேரவேண்டும் தனது பெயருக்கு பின்னல் இரண்டு எழுத்து B.E வரவேண்டும் ரோஜா படத்தில் வரும் அரவிந்த சாமி போல கம்ப்யூட்டர் துறையில் இருக்க வேண்டும் என்ற கனவுகளுடம் பாலிடெக்னிக் சேர்ந்தால் முதல் நாள் சரியான கழுத்து வலி, பொதுவாக கூச்ச சுபவாம் கொண்ட நான் கல்லூரிக்கு முதல் நாள் கொஞ்சம் தாமதமா சென்றதால் பெண்கள் அமரும் பகுதிக்கு அருகில் தான் இடம் கிடைத்தது. தலையை திருப்பினால் பெண்களை பார்ப்பது போன்று ஆகிவிடும் என்று ஒரு பக்கமாக பார்த்து கொண்டு இருந்தால் அடுத்த நாள் சரியான கழுத்து சுளுக்கு. என்னை போன்றே அனைவரும் நல்லவர்கள் என்று நினைத்து கொண்டு இருந்தால் எங்கள் க்ரூப்பில் ஒரு ஹிந்தி நடிகர் போல ஒரு நபர் ஆக்டிவான பேச்சு அதிகமான அறிவு திறமை உள்ளவர் போன்ற ஒரு தோற்றம் நான் இவரை கண்டு என்னோட இக்நோரன்சே தெரிய கூடாது என்பதினால் அளவாக பேசுவேன். இந்த நிலையில் என்னோட ஸ்கூல் நண்பர் லோக்கல் பாய் மற்றும் முகேஷ் இருவரும் நான் இருந்த வகுப்பில் இருந்தாதல் கொஞ்சம் தைரியம், அனைவரும் நல்லா படிக்க கூடியவர்கள

காலி சூட்கெஸிம்..கஸ்டமர் ப்ளெஸும்...!

Image
அது ஒரு ப்ரிண்டர் ப்ராப்ளம். ஏற்கனவெ ரெண்டு மூனு பேர் போய்ட்டு வந்து மேக்ஸிம்ம் டேமெஜ் பன்னி வச்சிருக்கானுங்க. இந்த நேரத்துலெ என்னை ஆட குளிப்பாட்டி மாலை போட்டு அனுப்புற மாத்ரி ரெடி பன்னிட்டாங்க. அவசரமா தேடுனதில, ஒரெ ஒரு டப்பா சூட்கெஸ் மட்டும் சிக்கிடுச்சு. ஆனா ஒரு ஸ்குரு டிரைவர் கூட கிடைக்கல. இவளத்துக்கும் அந்த சூட்கெஸ் ரொம்ப ராசியாம். ஒரு கால்ஸ் கூட க்ம்ப்ளிட் ஆகாத எவனொ தலைய சுத்தி வீசி எறிஞ்சு இருக்கான். ஆக ஒருமாத்ரி வெறும் சூட்கெஸ் மட்டும் எடுத்து கிட்டு நானும் பாடிகாட் முனிஸ்வரன் எல்லாம் வேண்டிகிட்டு கிளம்பிட்டென். மேனஜர் கிட்டெ இது நியாயமா..? அப்டின்னு கேட்டென். அவரோ, ஊருலெருந்து வரும் போது என்ன எடுத்துட்டு வந்தென்னு கேட்டார். நான் வாய மட்டும் தான் எடுத்துட்டு வந்தென், அப்டின்னென். அப்பொ அதையெ இப்பவும் எடுத்துட்டு போன்னு, மனசாட்சி இல்லாமெ சொல்லிட்டார். ஒரு மாத்ரி கஸ்டமர் ப்ளெஸ் போய் சேந்துட்டென். அவர் கஸ்டமர் இல்லை..கஷ்டமர்...! என்னை புதுசா பாத்த உடனெ, பேனசோனிக் கம்பெனிலெருந்து ப்ரிண்டர் ஸ்பெஷலிட் வந்து இருக்கிறதா நினைச்சுட்டார். என் கம்பெனி ஒரு உறுப்படாத கம்பெனி அப்படி இப்படி

சர்வீஸ் ஸ்டோரிஸ் – 1

Image
நான் வேலைக்கு சேந்த நாலெ நாளுல நமக்கு பத்து அரியர் இருக்கிற மேட்டர் லீக் ஆயிட்டு. அதுனாலெ ஒருத்தன் பக்கத்துல சேத்துக்க மாட்டென்னுட்டானுங்க..! அப்டியெ யாராவது கூப்டு போனாலும், பாதியிலெயெ கிழட்டி விடரதிலெயெ குறியா இருப்பானுங்க..! சரி, இப்படி கைல பொட்டியொட , தெருத்தெருவா அலையரதுக்கு , பேசாம, ஆஃபிஸ்க்குள்ளெயெ இருந்து மானிட்டர் சர்வீஸ் ஆவது கத்துக்குவொம்னு ஐடியா பன்னென். அப்பொ மானிட்டர் சர்வீஸ் பன்ற ஒரு பான் பராக் பார்ட்டி இருந்தாரு..! டபுள் மீனிங் டயலாக்னா அல்வா இந்த ஆளுக்கு..! ஒரு சோடா புட்டி கண்ணாடி வேற..ஆனா மானிட்டர் சர்விஸ் பண்றதுல..ஆளு கில்லாடி..! இவரு சர்வீஸ் பன்னிட்டு இருக்கும் போது, இவருக்கு டூல்ஸ் எடுத்து குடுக்கனும், அப்புறம் மானிட்ட்ர் எல்லாம் கிளின் பன்னி வைக்கனும்னு ஏகபட்ட கெடுபிடி. அப்பொல்லாம் மானிட்ட்ர் சர்வீஸ் பன்னா கஸ்டமர் கிட்டெ நிறைய சார்ஜ் பண்ணிடுவாங்க. அதுனாலெ கம்பெனில நல்ல வாய்ஸ். அதுனாலெ, அந்த ஆள் அடிக்கிற மொக்க ஜோக்க எல்லாம் சகிச்சு கிட்டு, அவரு பண்ற சர்வீஸ் உத்து பாத்துட்டு இருப்பென். முக்கியமான சர்வீஸ் கட்ட்த்துல, வெற ஏதாவது வேலை கொடுத்து வெளிய அனுப்பிட்டு, ச

இண்ட்ரொ நம்பர் – 2

Image
இப்பொ மைக்ரொவெர்ல்ட் கம்பெனி இண்ட்ரொ முடிச்சுடுவொம். அடுத்து நமக்கு ஏற்கனெவெ அறிமுகமான நல்லவன். சிட்டியிலெ படிச்சு வளந்தால, நம்ம படம் எல்லாம் அவன் கிட்டெ வேலைக்காகலை. நான் ஒரு டாஸ் ஸ்பெஷலிஸ்ட்டுன்னு சொல்லி கிட்டு அலைஞ்சிட்டு இருந்த போது, அவன் என்ன தனியா கூப்டு, டாஸ்ல இது வரை எத்தனை வெர்ஷ்ன் அப்டின்னு சொல்லிட்டு வெளிய போன்னு...கட்டம் கட்டிட்டான். நான் வெர்ஷ்ன்னா யாருங்க சார்..அப்டின்னென். அவன் வெறி ஆயிட்டான். அப்புறம் நான் அவன் கிட்டெ சரண்டர் ஆகி, யு ஆர் மை பெஸ்ட் ஃப்ரெண்ட் அப்டின்னு, வடிவேல் பிரபுதேவா கிட்டெ சொல்லுவாரே, அத சொல்லி எஸ்கெப் ஆய்ட்டென். அப்புறம் நான் கஸ்டமர் ப்ளெஸ்ல மாட்டிக்கும் போதெல்லாம் என்னை காப்பத்துற்தும், அவன் டெய்லி கால் லிஸ்ட்லெ சேந்துடுச்சு. அவ்வளவு நல்லவன பத்தி அடுத்து அடுத்து பாக்கலாம். அப்புறம்.....சர்வீஸ் கோ ஆர்டினெட்டர்...பாப்பா பாக்க பளிச்சுனு இருக்கும். கால்ஸ் அலாட் பண்றதும், அட்டண்ட் பண்றாங்களானு செக் பண்றதும் அதொட வேலை. அத இம்ப்ரெஸ் பண்றதுக்குனு ஒரு குருப்பெ அலைஞ்சது. ஆனா, கஸ்டமர் எல்லாம் போன் பண்ணி என்ன மட்டும் திட்டும் போது , அய்யொ பாவம்னு,. அதுவெ ஒர

I AM BACK..!

Image
பாசக்கார பங்காளிகளுக்கு...! கொஞ்ச நாள் ஸ்டேண்ட் பை மோடல இருந்துட்ட்துக்கு மன்னிக்கனும். வெலை பளூ அப்டின்னல்லாம் ஒன்னும் இல்லை. கொஞ்ச நாள் எழுதலைனா அப்புறம் டச் விட்டு பொய்டுது. அதான் ஒன்னும் இல்லை. இது என்ன மாதிரி எழுத்தாளர்களுக்கெல்லாம் வர கூடிய பிரச்சினைதான். (சரி சரி...கல்லு தேட வெண்டாம்..) இனி தொடர்ந்து எழுதுவோம். இது வரை எழுதுன எல்லாம் படிச்சா எனக்கெ கன்ன கட்டுது. ஒரு முழு நீள காமெடி ஸ்கிரிப்ட் மாதிரி தான் இருக்கு நம்ம வாழ்க்கை. எல்லாரையும் சிரிக்க வச்ச சார்லி சாப்ளின் சொந்த வாழ்க்கை சோகமா இருந்த்துன்னு சொல்லுவாங்க..ஆனா நம்ம வாழ்க்கை அப்டி இல்லை. சிரிப்பா சிரிச்ச வாழ்க்கை யா இருந்தாளும் எப்டியொ சிரிச்சா சரி. ஸொ..கீப் ஸ்மைலிங்...! அடுத்த போஸ்டல...! லெட் அஸ் ராக்...! (இந்த அர்னால்ட் போட்டொ..கொஞ்சம் என் சாயல்ல இருந்த்தால..அதையெ போஸ்ட் பன்னிட்டென். அர்னால்ட் ரசிகர்கள் கொல வெறி அடைய வேண்டாம் என கேட்டு கொள்கிறென்.) அதோடு வாசக நெஞ்சங்கள்..கமெண்ட்ஸ் எழுதி..தாங்களும் வெட்டியாய் இருப்பதை உறுதி செய்ய வேண்டுகிறென்..!

நாங்க எல்லாம் சூப்ப்ப்ப்ப்ப்பர் சீனியர்ஸ்..!

Image
நம்ம டீம் அப்டின்ன உடனே, சக்தே இண்டியா ல வர ஹாக்கி டீம் ரேஞ்சுக்கு நினைச்சுடாதிங்க..! சென்னை28 ல வர மாத்ரி டீம் தான். ரெண்டு மூனு பேர்தான் சீரியாஸா கால்ஸ் அட்டண்ட் பன்னுவானுங்க..! மத்தவனெல்லாம் எங்க போறான்னெ..கண்டுபிடிக்கவெ முடியாது. சரி இப்பொ ஒவ்வொருத்தார பாத்துடுவொம். சர்வீஸ் மேனஜர்: இவர் எதையும் சர்வீஸ் பண்ணி என் சர்வீஸ்ல பாத்ததில்ல.. காலை மீட்டிங்ல…நீ ரைட்ல போ..நீ லெஃப்ல போ…நீ நேரா போய் யூ டேர்ன் எடுன்னு சொல்லிட்டு இவர் எங்க பொவார்னு எவனாலயும் கண்டு பிடிக்க முடியாது. அனெகமா இவரை டிரிப்லிக்கென் மேன்சன் ரூம்ல ரெஸ்ட் எடுக்க பொய்டுவார்.. வீக் எண்ட்ல எப்டியும் ஒரு பீராவது வாங்கி குடுத்துடுவார். அதுனாலயெ இவரை அனுசரிக்க வேண்டியாதா பொய்ட்டு..! அடுத்து ஒரு சீனியர் சர்வீஸ் என்ஜினியர் (நாங்க தானெ டைட்டில்லாம் வச்சிக்கிரது..எவன் கெக்ரது) அதிகம் பேசமாட்டார். காலைலெ வந்தா மேஜர் கால்ஸ் எல்லாம் எடுத்து கிட்டு கண் காணாம பொய்டுவார். இவர் ஒருத்தர் கிட்டதான் டீவிஎஸ் ஃபிஃப்டீ இருந்தது. அதுனால காலைலெ இவர் கிட்டெ ஒசி லிஃப்ட் கேக்க பெரிய அடிதடியெ நடக்கும்..! அடுத்து ஒரு சர்வீஸ் என்ஜினியர், இவர் தான் உ

மைக்ரோவேர்ல்டு VS மைக்ரோசாஃப்ட்

Image
ஒகெ. இப்பொ நான் சேர்ந்த கம்பெனி பத்தி பாப்பொம். அந்த கம்பெனி பேரு மைக்ரோ வேர்ல்டு ( ஊத்தி மூடி ரொம்ப நாளாச்சு அதுனாலெ பேரு சொன்னாக்க ஒன்னும் ஆக போறதில்ல..) பேர பாத்துட்டு பெருசா மைக்ரோசாஃப்ட் மாதிரின்னு நினைச்சிடாதிங்க..! ஒரு பத்துக்கு , பதினைஞ்சி அடி ரூம்.. இதுதான் சர்வீஸ் பண்ற இடம். இதுல பாதி இடம் பாடாவதி ஆன மானிட்டரையும் ப்ரிண்டரையும் அடுக்கி வச்சிருப்பானுங்க..! மீதி இடத்துலெ நாங்க எல்லாரும் உட்காந்து மீட்டிங் போடனும். (பாதி பேர் நிக்க வேண்டியதான்!). அதுனாலெயெ இந்த இட பற்றாகுறைன்னாலெயெ சர்வீஸ் கோஆர்டினேட்டர் பொண்ணு ராஜி கூட "நெருங்கி" பழக வேண்டியதா போய்ட்டு..! (ஹி..ஹி) பத்து மணி வரைக்கும் மீட்டிங் நடக்கும். யார் யாரு எங்க பொவனும்னு மேனஜர் (ஆக்சுவலி…இவர் மேனஜர் இல்லை..டேமஜர்) முடிவு பண்ணுவார். எங்கள மாதிரி அப்ரசண்டிஸ் எல்லாம் வோடாஃபோன் நாய் குட்டி மாதிரி பின்னாடியெ பொவனும். இதிலெ கொடுமை என்னன்னா..அந்த சர்விஸ் பொட்டியயும் இந்த அப்ரசண்டிங்கதான் தூக்கிகிட்டு பொவனும். சரி நம்மளையும் மதிச்சு வேலை குடுத்துருக்கானுங்களேனு விதியென்னு..நாங்களும் பின்னாடியெ போவொம். பஸ் பாஸ் கம்பென

கணிபொறி வேலையும்..காலக் கொடுமையும்..!

Image
சென்னை மாநகரம். ஒருவழியா வந்து சேந்தாச்சு. அடுத்த பிரச்சினை வேல தான். ஃபர்ஸ்ட் க்ளாஸ்லெ முடிச்சிவன் எல்லாம் ஊர்லெ நிம்மதியா இருக்கான். ஆனா பத்து அரியர் இருக்கிற எனக்கு வேலை அப்டின்றது ஒரு கால கொடுமைதான். படிக்கிறப்ப..கம்பியுட்டர ஆன் பண்ணி ஆஃப் பண்ண கூட தெரியாதவன், கம்பியுட்டர் சர்வீஸ் பண்ற ஒரு கம்பெனிலெ ஜாயின் பண்னென். ஒரு மூனு மாசம் சம்பளம் கிடையாது. ட்ரெயினிங்தான். (அப்பிடியெ குடுத்துறுந்தாலும் மனசாட்சிபடி நானெ திரும்ப குடுத்துருப்பென்) அப்பொ எல்லாம் விண்டொஸ் கிடையாது. எல்லாம் டாஸ்தான். டாட்மேட்ரிக்ஸ் ப்ரிண்டர்தான். எனக்கு வேலை கத்து குடுக்க சொல்லி ஒரு நல்லவன் கைல ஒப்படைச்சாங்க. அவனும் அதிலெ உள்ள ரிஸ்க் தெரியாம ஒத்து கிட்டான். (பத்து அரியர்னு தெரிஞ்சிருந்தா பக்கத்திலெ சேத்து இருக்கமாட்டான். இவனை பத்தி அப்புறம் டீடெய்லா பாக்கலாம்) சர்வீஸ் போற இடமெல்லாம் நான் கூட போய் நான் வேல கத்துக்கனும். இதான் ஏற்பாடு. அப்புறம் ஒரு மேனஜர் , ஒரு சீனியர், ஒரு சர்வீஸ் கோஆர்டினெட்டர், நாலு பேர் நம்மள மாதிரி சம்பளம் இல்லா அல்ல கைகள் அப்டின்னு ஒரு சின்ன கம்பெனி அது. சர்வீஸ் கோஆர்டினெட்டர் ஒரு பொண்ணு (

மயிலை டூ சென்னை...சென்னை டூ மயிலை

Image
ஓவர் டூ சென்னை... வாழ்வில் பல கனவுகளோடு எல்லோரையும் போலவே நானும் வேலை தேடி சென்னைக்குச் சென்றேன். வீட்டில் உள்ளவர்கள்,உறவினர்கள் மற்றும் லோக்கல் நண்பர்கள்,நண்பிகள் எல்லோரிடமும் சொல்லிவிட்டு பந்தாவாக எனது நண்பர்கள் சென்னையில் நல்ல வேலையில் இருக்கிறார்கள், எனக்கும் வேலை ரெடியாக இருக்கிறது என்று பீலா விட்டுவிட்டு டை கட்டிக்கொண்டு A/c யில் உட்கார்ந்து வேலை செய்வது போல் பல கனவுகளுடன் மெண்டல் கொடுத்த அட்ரஸை நோக்கி கிளம்பினேன். மாம்பலத்தில் அவர்கள் கொடுத்த அட்ரஸில் சரியாக போய் சேர்ந்தேன். அங்கு போய் சேர்ந்த பிறகு தான் தெரிந்தது. ஒரு ஜீவன்(மெண்டல்) உழைத்து ஒன்பது ஜீவன் சாப்பிட்டுக்கொண்டிருந்தது (வெட்டியாக வேலை தேடிக்கொண்டிருக்கிறோம் என்ற பெயரில் ). மெண்டல் தான் பாசக்கார பயலாச்சே அங்கும் டைனோசர் கட்டுப்பாட்டில் தான் இருந்தான். நான் போன அன்று எவனும் ஒன்றும் சொல்லவில்லை, நன்றாக 3 வேளையும் வாங்கி சாப்பிட்டோம்.( அங்கு நான் ஏழையாகும் வரை). 2 நாட்களுக்கு பிறகு தான் தெரிந்தது இவர்களின் உண்மை நிலை. மெண்டல் காலையிலேயே எழுந்து எல்லோருக்கும் சப்பாத்தி ரெடி பண்ணி, பக்கத்தில் இருந்த அய்யர் கடையில் ஒரு சர்வர

ஓவர் டூ சென்னை…!

Image
இவ்வளவு நேரம் என் மொக்க கதைகளை படித்து சகித்த நண்பர் கூட்ட்த்துக்கு நன்றி. ஒருவழியா, படிச்சு கிழிச்ச பிறகு, ஆளுக்கு ஒரு பத்து அரியரோட வெளிய வந்த்தோம். அதிலும் இந்த டினொசர் பதிமூனு அரியரோட வெளிய வந்து, முதல் இட்த்தை தக்க வச்சுகிட்டான். வெளிய வந்தொம் அப்டினு சொல்லறத விட விரட்டபட்டொம்னு தான் சொல்லனும். கல்லூரி முடிவில் நடந்த சில காதல் சம்பவங்களை ஸ்கிப் பண்ணிடுவொம். ஏன்னா, இந்த ப்லாக்கொட நோக்கம் ஒரு கட்டிங் சரக்குக்கெ கஷ்டபட்ட நாங்க எப்படி வாழ்கைலெ உயர்ந்து ஸ்டார் ஹொட்டல்லெ ஸ்காச் சாப்பிடுரொம், அப்டின்னு, உலகத்துக்கு உணர்த்தரது தான். வெறும் வாய மட்டும் வச்சுகிட்டு எப்டி நாங்க வேலை வாங்க முடிஞ்சது? லாரி ஏறி சென்னை வந்த நாங்க எப்டி லக்சுரி வாழ்க்கை அடைய முடிஞ்சது? திரும்ப திரும்ப அரியர் எழுத போய் நாங்க பட்ட அவமான்ங்கள் எத்தனை? (இதிலெ எங்க கூடவே படிச்ச பொண்ணு ஒண்னு ,மேல படிச்சு, எங்க டிபார்மெண்ட்லெயெ சேர்ந்து பாடம் எடுத்த கொடுமையெல்லாம் நட்ந்து இருக்கு..! ஸோ..நாங்க அரியர் எழுதவெ பதுங்கி போக வேண்டிய பரிதாபம்..) திரும்ப திரும்ப சில பேப்பர்களை எழுதினாலும், ஒரு பத்து மார்க்கு மேல வாங்கம

AVATAR..!

Image
My Brother's Son Santhosh dressed AVATAR in School Fancy Dress Competition.

ஊத்தி மூடப்பட்ட ப்லாக்கும்… உயிர் நண்பர்களும்..!

Image
பாசக்கார பயமக்களெ..! பாதி பர்சனாலிட்டியிலெ எடுத்த போட்டோவுக்கெ இப்படி லோக்கல் பாய் மண்டை காய்ரானெ..! ஃபுல் ஃபார்ம்லெ எடுத்தா சும்மா அசல் அஜித் மாதிரி இருக்கும்ல..! சரி..சரி..! அரபு நாட்டு வாழ்க்கைலெ நம்ம அறிவு எல்லாம் மழுங்கி பொய்டுச்சின்னு..லோக்கல் பாய் ரொம்ப ஃபீல் பண்ணிட்டான். அதுனாலெ..நாம தொடர்ந்து இந்த ப்லாக்க நட்த்துவோம்..! ஓக்கெயா? சரி…இப்பொ என்னத்த எழுதி கிழிக்கறதுன்னு ஒரு பிரச்சினை. நாம ஒரு வோட்டிங் நட்த்துனொம்.. இந்த ப்லாக்ஸ்பாட்டில் நீங்கள் எதிர் பார்பாப்பது என்ன? ரிசல்ட் இதுதான்..! இதே ஸ்டயிலில் நண்பர்களின் கதைகள் மட்டும். – 6 வோட் இதே ஸ்டயிலில் நண்பர்களின் கதைகள், மொக்க் ஜோக்குகள், மற்றும் கட்டுரைகள்– 5 ஓட்டு கொஞ்சம் ட்செண்ட் ஆக (சென்சார் செய்ய பட்ட) நண்பர்களின் கதைகள் மட்டும். - 0 ஓட்டு ஆணியெ புடுஙக வெண்டாம். ஏன்னா... நீ புடுஙகதறது எல்லாமெ தேவை இல்லாத ஆணி தான்..! - 2 ஓட்டு ரெண்டு விஷியம்..! ஒண்ணு… டிசெண்ட் ஆக (சென்சார் செய்ய பட்ட கதையெல்லாம் வேண்டாம்னு.. ஒரு பய ஒட்டு போடாம நாம எல்லாம் எப்பவும் தரை டிக்கட்டுதான்னு ப்ரூவ் பண்ண எல்லாருக்கும்.. நன்றி. ரெண்டு… ஆண

I am Back...!

Image

I am Back...!

Image
I am Back...!