சரக்கு பார்ட்டியும், சத்திய சோதனையும்..!
சர்வீஸ் ஸ்டோரிஸ்- (தண்ணில கண்டம் பார்ட்-1)
சரி இப்பொ..ஒரு சர்வீஸ் ஸ்டொரிய பாத்துடுவொம்..!
வாழ்க்கை இப்டியெ, ஒரு டைப்பா ஒடிகிட்டு இருந்ந்த்து.. கூட படிச்ச பய மக்கள் எல்லாம் என்னை ஒரு சர்வீஸ் என்ஞினியர்னெ நம்பிட்டானுங்க..! நானும் பயங்கரமா படம் காட்டி என்னை பில்டப் பண்ணிகிட்டென்..!
யாரவது ஆர்வ கோளாறுல என்னை பாக்க ஆஃபிஸ் வந்துடுவானுங்க..! வந்தவனுங்களை அப்டியெ டீகடையொட திருப்பி அனுப்பிடுவென்..அப்புறம் ஆஃபிஸ் உள்ள வந்து, நம்ம அல்ல கையா இருக்கிறது தெரிந்சா நமக்கு படம் உட்ராதா..?
இதுல எப்டியாவது எனக்கும் ஒரு வேலை வாங்கி குடுன்னு ரெக்கமெண்டெஷன் வேற..! நானெ சொந்த சூட்கேஸ் கூட இல்லாம அல்லாடிட்டு இருந்தென்..! நான் எங்க...?
எல்லாரும் இலக்கு இல்லாம சுத்திட்டு இருந்தானுங்க.! ஒருத்தனுக்கும் வேலை கிடைக்கல..!
கேட்டா தோல்வியெ, வெற்றிக்கு முதல் படின்னுவானுங்க..! ஆனா வெற்றிய எத்தனையாவது மாடில கொண்டுபோய் வ்ச்சிருக்கானுங்கன்னு...ஒருத்தனுக்கும் தெரியலை..!
ம்..சரி இப்பொ நான் பலி கடா ஆக்க பட்ட இன்னொரு சம்பவத்த பாப்பொம்..!
ஆஃபிஸ் வேற இட்த்துல மாத்துற ப்ரொப்போசல் ஒன்னு வந்த்து..! மவுண்ட் ரோடு பக்கம் பெரிய ஆஃபிஸ்..! சரி நாமும் எத்தனை நாள் தான் பத்துக்கு பத்து அடி சர்வீஸ் ரூம்ல பதிமூனு பேரு பேர் உட்காந்து மீட்டிங் போடறதுனு..நமக்கும் ஒரெ ஜாலி..!
அதுக்கு மறுநாள் ஆயுத பூஜை வேற..! சரின்னு, காலைலெ ஒரு எட்டு மணிக்கெல்லாம் போய் பழைய ஆஃபிஸ்ல போய் நின்னொம்..! சரி தூக்கி எறக்க எல்லாம் ஆள் வரும்ம்னு பாத்தா ஒருத்தனையும் கானோம்..! மணி ஒன்பது ஆன அப்புறம் தான் எனக்கு மண்டைக்குள்ள மணி அடிச்சது...ஒஹொ...நம்ம ஜாப் ப்ரொஃபைல் இப்டி போகுதான்னு.. ஒனர் நேரா வந்ந்தாரு..ஒரு கார்டுன் பாக்ஸ் வேன்ல அவரெ ஏத்தி வச்சாரு..! அப்புறம் நாம என்ன பண்ண முடியும்...!
ஒரு மூனு மணி நேரம்..! என்னா ஒரு உழைப்பு...! என்ன செண்ட்ரல் ரயில் வே ஸ்டேஷன்ல சிவப்பு சட்டை போட்ருப்பாங்க...! நாங்க போடலை..! அவ்வளவு தான் வித்தியாசம்.. பாவிங்க...சேல்ஸ் மேனஜர கூட விட்டு வக்கலை...எல்லா திங்ஸ்சும் வேன்ல ஏத்தி இறக்கி சும்மா சுளுக்கு எடுத்து உட்டுடானுங்க..!
எல்லாம் முடிஞ்சு, பாதி உயிரொட வீட்டுக்கு போவலாம்னு கிளம்பற நேரத்தில, எங்க வயித்தில எல்லாம் ஹெவெர்ட்ஸ் ஃபைவ் தவுசண்ட் பீர வாக்றமாதிரி ஒரு நியுஸ்..! ஒன்னும் இல்லை..எல்லாருக்கும் சரக்கு, சாப்பாடு வாங்கி கொடுன்னு ஒருத்தன் கையில ரெண்டாயிரம் ரூபா காசு கொடுத்து விட்ருக்காரு எங்க பாஸ்..!
இவர எல்லாம் மனித உரிமை மீறல்ல உள்ள போடனும்னு நாங்க பேசிட்டுருக்கும் போது... என்னா ஒரு கருணை உள்ளம் பாருங்க..? அட..டா..!
சரி ரொம்ப உடம்பு வலிக்குதென்னு, நானும் ஒரு குவாட்டருக்கு ஆசைபட்டுட்டென்..அதான் நான் செஞ்ச ஒரெ தப்பு..! மொட்டை மாடில உட்காந்து வெயிட் பண்ணொம்..!!
சரக்கும் வந்த்து..! ஒரு பத்து பேரு இருக்கும்..! சும்மா குமுறி எடுத்துட்டானுங்க எல்லாரும்..! எனக்கு (சிவகாமி கம்பியுட்டர் ஜோசியப்படி) தண்ணில கண்டம் அப்டின்றதால..ரொம்ப ஜாக்ரதையா சரக்கு அடிக்க ஆரம்பிச்சென்..! என் கண்டபடி எனக்கு சரக்கு வாங்கி கொடுக்க்ரவன் கண்டமாயிடுவான்..! என் ராசி அப்டி..! ஆனா பாருங்க அரை மணி நேரம் ஆகியும் சரக்கு வாங்கிட்டு வந்தவன் நம்ம கிட்டெ ஒரு வார்த்தை கூட ஏடாகூடமா ..பேசலை..!
அப்பாடா..நைசா நாம கடைய கட்டுவொம்னு நினைச்சென்..!
அப்பொதான் சனி வேற ரூபத்தில வெளையாட ஆரம்பிச்சது.. என் கம்பெனி ஜென்ரல் மேனஜர் நாங்க எல்லாம் சரக்கு சாப்ர அழக பாக்க வந்துட்டாரு..!
ஆஹா...நேரம் நெருங்கிச்சு போல இருக்குன்னு..நானும் சைலண்ட்டா சரக்க ஏத்திட்டு இருந்தென்...அப்பொ பாத்து, ஒரு சேல்ஸ் மேன்..(பேரு ஞாபகம் இல்லை..) நைசா என்னை ஏத்தி விட்டான்..! நாம எல்லாம் என்ன கூலியா..நம்மளை இப்டி தட்டு முட்டு சாமான் எல்லாம் தூக்க விட்டுடானுங்களெ..! நீதான் இங்க இருக்குறதுலெயெ துணிச்சலான, புத்திசாலியான் ஆளு...! நீதான் இதெல்லாம் கேட்கனும்னு.. ஏத்தி விட்டுட்டான்..! (பய புள்ள பாருங்க சரக்கு போதைல கூட எப்டி கரெக்டா ஜோலிய முடிக்கிறானுங்க..!)
அப்புறம் என்ன..அடுத்த பத்து நிமிஷம் நான் மட்டும் தான் ஜெனரல் கிட்டெ பேசி இருக்கென்..என்ன பேசினென்னு என்க்கு தெரியலை...என் உரை முடிஞ்ச கையொட டேபிள்லெயெ மட்டையாயிருக்கென்..! அப்ப்றம் ஒரு ஆட்டொல என்ன அள்ளி போட்டு ரூம்முக்கு கொண்டு போயிருக்கானுங்க...! (நல்ல வேளை மீன்பாடி வண்டி இல்லை...பாவி பயலுங்க..ஆட்டொ காசை கரெக்ட் பன்றதுக்கு அதையும் செய்வானுங்க)..
ஜென்ரல் மேனஜர்..ஜென்ரல் டேமெஜர் ஆயி, சரக்கெ சாப்டாம அவரும் அரை மயக்கமாயி அவரையும் கைதாங்கலா கூட்டி போயிருக்கானுங்க..!
மறுநாள் காலை..ஆயுத பூஜை...நானொ ஆஃபிஸ்க்கு வெளிய...ஜென்ரல் என்ன தனியா வந்து பாக்க சொல்லி இருக்கார்னு, சண்டாள பாவிங்க..படைச்ச பொறி கடலை கூட குடுக்காம என்ன வெளிய நிறுத்திட்டானுங்க...!
உள்ள, என்வாழ்கை விளக்க ஏத்தி வச்ச சேல்ஸ்மேன் பய பக்தியொட சூடம் காமிச்சிட்டுருக்கான்...எனக்கு கொள்ளிய போட்டுட்டு..!
அப்ப்றம் தான் நான் என்னல்லாம் ஜென்ரல கேள்வி கேட்டெனு...பசங்க சொல்றானுங்க...! அது என்ன்னு நீங்களெ பாருங்களென்..!
கம்பெனில் இருக்கிறது பதினைந்து பேரு...அதுக்கு என்னய்யா ஜென்ரலு மேனஜ்ர்ன்னு ஒரு ஜமுக்கு..?
மண்டைல முடியெ இல்லை ...உனக்கு எதுக்குயா..ஹெல்மெட்..?
டெயிலி கம்பெனி காசுல சரவணபவன்ல ஃபுல் மீல்ஸ் அடிக்கிறியெ..சொந்த காசுல ஒரு டீ வாங்கி குடுத்திரிக்கியாய்யா..?
இருக்கிற மிச்சர எல்லாம் நீ காலி பண்ணிட்டா...நாங்க எப்டியா மீதி சரக்க அடிக்கரது..?
ஃபைவ் ஸ்டார் சாக்லெட் சாப்டா அல்சர் வராதுன்னு சொல்றியாமெ..?
சாக்லெட் என்ன உங்க அப்பனா வந்து வாங்கி குடுப்பான்..?
ஒரு மெகா பைட்டுக்கு எத்தனை பைட்டு..நீ எல்லாம் பெரிய புடுங்கி ஜெனரல் மேனஜர் தானெ..பதில் சொல்லு பாக்கலாம்..?
நீ மட்டும் ஆஃபிஸ்க்கு டெய்லி பத்து மணிக்கு தான் வரெ..நாங்க வந்தா மட்டும் ஒனர் கிட்டெ போட்டு குடுக்ற..?
இந்த மாதிர் எல்லாம் ஒரு ஜென்ரல் மேனஜர் கிட்டெ போதைல கலாய்ச்சா..என்ன கூப்டு முத்தமா கொடுப்பாரு..ஆச்சு..நல்ல வேலை வேலைய விட்டு தூக்கலை..!
இனிமெ இப்டி செய்ய மாட்டென்..அப்டின்னு மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்துட்டு...!ஆனா கண்டிஷன் என்ன தெரியுமா..இனிமெ ஆஃபிஸ் வொர்க் பண்ற எவன் கூடவும் நான் தனியா குடிக்க கூடாதுன்னு...ரொம்ப பாதிக்க பட்ருப்பார் போல...! ம்...!
சிட்டில பெரிய தாதா , ரவுடிங்களெ எல்லாம் போலீஸ் டெயிலி மானிட்டர் பண்ணுமெ..அந்த மாதிரி என்னையும் ரெட் ஸோன்ல வச்சிட்டானுங்க..!
o இப்பொ தெரியுதா..தண்ணில கண்டம்னா என்ன்னு...? இது மாதிரி இன்னும் ரெண்டு சம்பவம் இருக்கு...பாப்பொம்..!
இன்றைய நீதி கதை இதுதான்..! (பெட்டர் வீக் எண்ட்லயாவது இந்த கதைய படிச்சுட்டு போங்கப்பா..!..!)
(இந்த சம்பவத்த பாத்தாவது, டாஸ்மாக்ல சளும்பிக்கிட்டெ சரக்கு அடிக்ற மாப்ள எல்லாம் திருந்துங்கப்பா..! )
அடப்பாவி, நீ போகிற இட்த்தில் எல்லாம் இப்படிதான் அசிங்கப்படுறியா மாம்ஸ்,
ReplyDeleteசரக்கடிச்ச பிறகு நீ செய்ற கூத்துக்காகவே உனக்கு எவ்வளவு வேண்டுமானாலும் வாங்கி கொடுக்கலாம் மாப்ள,
என்ன ஒரு குவார்ட்டர் வாங்கி கொடுத்தால் போதும் நீ உன் சொத்தை எல்லாம் எழுதி கொடுத்துவிடுவாய் மாம்ஸ்...
இந்த பிளாக்கில் வரும் கதைகள் எதிர்காலத்தில் உன் பெருமையை உலகுக்கு எடுத்து சொல்லும்.
அடுத்த கதையையும் படிக்க ஆவலோடு காத்திருக்கிறேன்.
லோக்கல் பாய்..
சூனா, பானா..மீசைல மண்ணு ஒட்டலியெ..அப்டியெ போய்ட்டெ இருக்கனும்..! அசிங்கத்துல ஆர்டினரி என்ன..? அர்ஜெண்ட் என்ன..? ஆனா இப்ப்ல்லாம் முன்ன மாத்ரி இல்ல மாம்ஸ்..ஆஃப் அடிச்சாலும் மப்பெ ஏற்றது இல்ல..! ஆனா தண்ணில கண்டம் மட்டும்..தொடர்ந்துகிட்டு தான் இருக்கு மாம்ஸ்..!
ReplyDelete