16 வருஷ்த்து பழைய படம்..!


உலகின் தலை சிறந்த பத்து போட்டொக்களில் ஒன்றாக வரக்கூடிய, காண்பதற்க்கு அறிய, பார்த்தாலெ புல்லரிக்க்கூடிய ...என்னா...மொக்கை போதுமா...! சரி..சரி..!

இந்த போட்டோ எடுக்கபட்டு வருஷம் 16 ஆவுது..! என்னாடா இது...கார்த்திக், குஷ்பு பட டைட்டில் மாத்ரி இருக்கெ..வாழ்க்கை ரொம்ப ரம்யமா இருந்து இருக்கும்னு மட்டும் நினைச்சிடாந்திங்க..! எங்க காலெஜ் வாழ்க்கை ரெணிகுண்டா ரெஞ்சுக்கு தான் இருந்த்து..!
சரி இப்ப போட்டொல இருக்கிற கனவான்களை பத்தி பாப்பொம்..!

முதல்ல நிக்கிறானெ..மெட்ரிகுலெசன் ஸ்கூல் யூனிஃபார்ம் போட்டு....அவன் தான் மண்டையன்..பெயர் காரணம் ஒன்னும் பெருசா இல்லை..! மண்டை பெருசா களிமண்னொடு இருந்த்தால..மண்டையன்னெ வச்சுட்டொம்..! இவன் பிரபுதேவா மாத்ரி டிரஸ் பண்ணுவான், ஆனா பர்ஃபாமென்ஸ் எல்லாம் வடிவெல் ரேஞ்சுக்குதான் இருக்கும்..! இவன் புத்திசாலி தனத்துக்கு தனியா அப்புறம் ஒரு பதிவு போடுவொம்..!

அடுத்து, ஸ்லொ சைக்கிள் ஒட்ற மாத்ரி உட்காந்து இருக்கிறவன் பேரு, கிச்சா. கிச்சான்னவுடனெ ஜெண்டில்மேன் அர்ஜுன் மெமரில வருதா..வந்தா நான் பொறுப்பு இல்ல..! ஆனா ஆளு உலக மகா நடிகன்..! நொடிக்கு ஒரு முறை மூஞ்ச மாத்தி மாத்தி எதிராளிய குழப்பிடுவான். ம்ம்..என்ன பண்ண..அப்ப்ப்பொ மாயவரம் காளியாகுடி ஹோட்டல்ல போண்டா, காபி எல்லாம் வாங்கி தரதால..அவனை எல்லாம் பகைச்சிக்க முடியுமா சொல்லுங்க..?

அடுத்து நிக்கறது நான்.. மேனுவல் கேமரா அப்டின்றாதால நம்ம பர்சனாலிட்டி சரியா பதியலை..! சரி விடுங்க..!

அடுத்து, நிக்கறது யாருன்னு தான் புரியலை..! (ஒரு வேளை கேமராவுக்கு சொந்தகாரனா இருப்பானொ..?)

அடுத்து நிக்கறது தடி பாலு... இவனுக்கு கடி பாலுன்னு இன்னொரு பெயரும் உண்டு..! (அது ஏன்னு அப்புறம் பாப்பொம்..!) பகல்ல எடுத்த போட்டொவில்யெ எவ்வளவு பளிச்சுன்னு இருக்கான் பாருங்க்க..

அடுத்து , டினொசர்..! கால மடக்கி வச்செ எவ்வளவு உயரம் இருக்கான் பாருங்க..? இவனை எல்லாம் ஒரு நிமிஷம் உத்து பாத்தா குடிக்க பச்ச தண்ணி கூட கிடைக்காது..! அதுனால..தயவு செஞ்சி உத்து மட்டும் பாத்துடாந்தீங்க..!

அடுத்து, லோக்கல் பாய். என்னமொ தெரியலை, தம்பி டக் பண்ணலை இன்னைக்கு..(ஒரு வேளை பேண்ட் கிழிஞ்சிருக்குமொ..?) பாருங்க..எப்டி டினொசருக்கு கட்டு பட்டு நிக்றான்னு..

இந்த போட்டொ முத்து கடை வாசல்ல எடுத்த்து..! யார் எடுத்தான்னு தெரியலை..! எப்டி எங்கிட்ட வந்த்துன்னு தெரியலை..! வேர போட்டொ யார் கிட்டெயாவது இருந்ந்தா குடுங்கப்பா..! ப்லாக்ல போடலாம்..!

அன்புடன் நண்பன், மெண்டல்

Comments

  1. இது out of condition இல் இருந்த பொழுது எடுத்த போட்டோ...
    வருஷம் 16 பட ரேஞ்சுக்கு மேட்டர்கள் இருந்தாலும் போட்டோவில் எல்லோரும் 16 வயதினிலே சப்பானி லெவலுக்குதான் பர்சனாலிட்டி என்று யாரும் தவறாக நினைக்கவேண்டாம்.
    எல்லாரும் பர்சனாலிட்டி பிகர்ஸ் தான்,
    இது ஏதோ பலிவாங்கல் படம். இதற்கு தான் கேமராவை பார்த்தவுடன் நின்றுவிட கூடாது.
    மெண்டலின் பர்சனாலிட்டி தெரியவில்லை என்பதால் இதை போட்டிருக்கிறார், அவர் ஃபுல் பர்சனாலிட்டியான போட்டோ எங்களிடம் உள்ளது. கூடிய விரைவில்.........
    லோக்கல் பாய்

    ReplyDelete
  2. ஷாகுல் மாம்ஸ் .. அந்த பெர்சொனளிட்டி போட்டோ சீக்கிரம் போஸ்ட் பண்ணு .. அவளோட எதிர் பார்கிறேன் ..

    ReplyDelete
  3. வருஷம் 16 படத்தில் வரும் ஒரு பாடல் கட்சி போல உள்ளது உண்மை யாராலும் மறைக்க முடியாது மறுக்கவும் முடியாது மாம்ஸ், லோக்கல் பாய்யா இது ...! மாம்ஸ் இப்படியா பழிவாங்குவது ,,!! லோக்கல் பாய் ஹி ஹி ஹி ,,,! கல்லுரி இறுதி ஆண்டு நாம் எடுத்த போட்டோ எல்லாம் சுதாகரிடம் இருந்தது அவரிடம் தொடர்ப்பு கொண்டு அந்த புகை படங்களை வாங்க யாராவது உதவ முடியுமா ..! Sha-KWI

    ReplyDelete
  4. Really Nice Photo - Potti Siva

    ReplyDelete
  5. Idhukku 16 vayadhinile appadinnu peru vachiirkkalam

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நண்பனுக்கு கடிதம் - 1

வ குவாட்டர் கட்டிங் - விமர்சனம்

நண்பன் பொட்டி சிவாவுக்கு ஒரு கண்ணீர் கடிதம்..!