கருப்பு சாமிக்கு ஒரு கடிதம்..!


எனதருமை நண்பா..!

உன்னை பற்றி உன் பெருமை பற்றி சொல்ல, நான் செய்த பாக்கியம் தான் என்ன..?

உனக்கு கடிதம் எழுத நினைக்கயில் எதை எழுதுவது..எதை விடுவது.
என மண்டை காய்ந்து மலைத்து நிற்கிரென் நண்பா..!

நாங்கள் வளரும் போது, பாத்து போங்க காத்து கருப்பு அடிச்சுடும்னு சொல்லுவாங்க..! உன்னை என்ன சொல்லி வளர்த்தார்களொ..என் ..நண்பா..
அந்த இருட்டுக்கெ சவால் விடும் கும்இருட்டு நண்பா ...அதை சொல்லவா..?

மாயவரம் பஸ் ஸ்டாண்டுக்கெ தாதாடா நான் என படம் காமித்து..
ஒரு முறை போலீஸ் ரெய்டில் ரொட்டொர பழக்கடையில் பதுங்கி பழம் விற்றாயெ நண்பா..அதை சொல்லவா..?

ஒரெ ஒரு மக் கள்ளு குடிப்பொம் என என்னை கூட்டி போய்..
என்னை மட்டையாக்கி பனை மரத்திக்கு கீழெ படுக்க வைத்து எஸ் ஆனாயெ ..நண்பா ..அதை சொல்லவா..?

லோக்கல் பாயின் பர்ஸ்னாலிட்டிக்கு ஈசியாக மடங்கி இருக்க வேண்டிய பாப்பாவை,
கள்ளு குடித்து உளறி கெடுத்தாயெ பாவி நண்பா.. ..அதை சொல்லவா..?

டினொசரொடு சேர்ந்து சதி செய்து என் பட்ட பெயரை பெண்களிடம் பரப்ப ப்ளான் போட்டாயெ.. சதிகார நண்பா ..அதை சொல்லவா..?

ஒரு குவாட்டருக்கு ஒரு கையெழுத்து என எங்கள் ரெக்காட் நோட்டில் HOD கையெழுத்தை அப்டியெ போட்டு ஒரிஜினலுக்கெ சவால் விட்டாயெ நண்பா.. ..அதை சொல்லவா..?

வில்ஸ் சிகரெட் மட்டும் புடி மாப்ள..கோல்ட் ப்ரச்னையெ வராது என பொய் சொல்லி, என்னை சிகரெட்டுக்கு அடிமை யாக்கினாயெ நண்பா... ..அதை சொல்லவா..?

எல்லா பலான பட்த்துக்கும் லோக்கல் பாயை கூட்டி போய் அவனை ஒரு போர்ன் ஸ்டார் ரேஞ்சு ஆக்கினாயெ..நண்பா.. அதை சொல்லவா..?

எங்க ஊர் மாப்ள என்று சொல்லியெ என்னை கவுத்து என் மெஸ் அக்கவுண்டை காலி பண்ணினாயெ ... நண்பா... ..அதை சொல்லவா..?

கிரிக்கெட் விளையாட்டில் உன் கலருக்காக மட்டும். உன்க்கு ‘லாரா’ என பெயர் வைத்தொம்..நீ அதை மறந்து..க்ரிகெட் மேட்சில் என்னை பந்து பொருக்கி போட சொல்லி அவமான படுத்தினாயெ .. நண்பா... ..அதை சொல்லவா..?

ஒரு பொன்னுங்களையும் விடாமல் கலாய்த்து, தவறியும் ஒருத்தர் கூட எங்களை திரும்பி பார்க்கவிடாமல் பார்த்து கொண்டாயெ ,, நண்பா... ..அதை சொல்லவா..?

அஞ்சு ஏக்கர் தென்னந்தொப்பு ஊருல இருக்குன்னு சொல்லி (யாருதுன்னு நீ சொல்லவெ இல்லை) நைட்டொட நைட்டா ஊருக்கு கூட்டிப்போய் திருட்டு எளநீர் வெட்டி குடுத்தாயெ ... நண்பா... ..அதை சொல்லவா..?

நான் எதை சொல்ல..எதை விட என் கருப்பு நண்பா..!

உன் பெருமையை உலகுக்கு எடுத்து சொல்லும் பாக்கியம் பெற்ற அன்பு நண்பன்..!
மெண்டல்..!

Comments

  1. டேய் கருப்பசாமி,
    இது எல்லாம் ஒரு மனிதத்தனத்துடன் செய்யக்கூடிய செயல்களா.. உன் மானத்தை கப்பலேற்றிவிட்டான் பாரு என் மாப்ள மெண்டல்.. இப்போ தான் எனக்கு கொஞ்சம் நிம்மதியாக இருக்கு..
    மெண்டல் ஈஸ் ஆல்வேஸ் கிரேட்.
    லோக்கல் பாய்..

    ReplyDelete
  2. ஹலோ பிரதர், அப்பிடியே என்னப் பத்தி பக்கத்துல உக்காந்து பாத்து எழுதுன மாதிரி இருக்கு?

    ReplyDelete
  3. பாண்டி நண்பா .. இத படிக்கும் போது ரொம்ப சந்தோசமா இருக்குடா .. ரியால நடந்தத சூப்பரா சொல்லி இர்ருகட ..,
    அருமை .. பிரமாதாம் ..

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நண்பனுக்கு கடிதம் - 1

வ குவாட்டர் கட்டிங் - விமர்சனம்

நண்பன் பொட்டி சிவாவுக்கு ஒரு கண்ணீர் கடிதம்..!