கணிபொறி வேலையும்..காலக் கொடுமையும்..!
சென்னை மாநகரம். ஒருவழியா வந்து சேந்தாச்சு. அடுத்த பிரச்சினை வேல தான். ஃபர்ஸ்ட் க்ளாஸ்லெ முடிச்சிவன் எல்லாம் ஊர்லெ நிம்மதியா இருக்கான். ஆனா பத்து அரியர் இருக்கிற எனக்கு வேலை அப்டின்றது ஒரு கால கொடுமைதான். படிக்கிறப்ப..கம்பியுட்டர ஆன் பண்ணி ஆஃப் பண்ண கூட தெரியாதவன், கம்பியுட்டர் சர்வீஸ் பண்ற ஒரு கம்பெனிலெ ஜாயின் பண்னென். ஒரு மூனு மாசம் சம்பளம் கிடையாது. ட்ரெயினிங்தான். (அப்பிடியெ குடுத்துறுந்தாலும் மனசாட்சிபடி நானெ திரும்ப குடுத்துருப்பென்)
அப்பொ எல்லாம் விண்டொஸ் கிடையாது. எல்லாம் டாஸ்தான். டாட்மேட்ரிக்ஸ் ப்ரிண்டர்தான். எனக்கு வேலை கத்து குடுக்க சொல்லி ஒரு நல்லவன் கைல ஒப்படைச்சாங்க. அவனும் அதிலெ உள்ள ரிஸ்க் தெரியாம ஒத்து கிட்டான். (பத்து அரியர்னு தெரிஞ்சிருந்தா பக்கத்திலெ சேத்து இருக்கமாட்டான். இவனை பத்தி அப்புறம் டீடெய்லா பாக்கலாம்)
சர்வீஸ் போற இடமெல்லாம் நான் கூட போய் நான் வேல கத்துக்கனும். இதான் ஏற்பாடு. அப்புறம் ஒரு மேனஜர் , ஒரு சீனியர், ஒரு சர்வீஸ் கோஆர்டினெட்டர், நாலு பேர் நம்மள மாதிரி சம்பளம் இல்லா அல்ல கைகள் அப்டின்னு ஒரு சின்ன கம்பெனி அது.
சர்வீஸ் கோஆர்டினெட்டர் ஒரு பொண்ணு (நமக்குன்னு வந்து சேருது பாருங்க) அப்டின்றதாலெ நான் வேலை நல்லா தெரிஞ்ச மாதிரி காட்ட வேண்டிய நெருக்கடிக்கு தள்ள பட்டென்.
எனக்கு டைப்பிங் நல்லா வரும் அப்டின்றதாலெ, எனக்கு தெர்ஞ்ச நாலு டாஸ் கமெண்ட திரும்ப திரும்ப டைப் பண்ணி பிஸியா இருக்கிர மாத்ரி சீன் போடுவென். எனக்கு ரொம்ப பிடிச்ச டாஸ் கமெண்ட் CLS தான். ஏன்னா தப்பா ஏதாவது அடிச்சா டக்னு CLS அடிச்சு கிளியர் பண்ணி எதிராளி கண்ல மண்ண தூவலாம் இல்லையா.. அதான். எனக்கு வேல சொல்லி கொடுத்த நல்லவன் (இவனை இனிமெ இப்பிடியெ கூப்டுவொம்) ரொம்ப திறமைசாலி..ஏதாவது மேஜர்னா அவனைதான் அனுப்புவாங்க. அவன் திறமைக்கெ நான் சவால்னா பாத்துக்குங்களென்..! எனக்கு வேலை சொல்லிக்கொடுக்கறதுக்குள்ள அவன் ஒரு வழியாயிட்டான்..!(இப்பொ இவன் US ல இருக்கான் (உழவர் சந்தை இல்லிங்கன்னா..!)
நான் புகைய வச்ச மதர் போர்டு, கரப்ட் பண்ணின ஃப்லாப்பீஸ், தொலைச்ச டூல் கிட்ஸ், விரட்டி அடிச்ச கஸ்டமர், பணய கைதியா ரூம்லெ போட்டு பூட்டிய கஸ்டமர், சர்வீஸ் கோஆர்டினெட்டர் கூட லவ் (அது இல்லாமயா..?),
இப்டி நிறைய கதைகள் இருக்கு..! அதுலெ ஒன்னு அடுத்து பாக்கலாம்..!
(மேல இருக்கிற போட்டொ நல்லவன் மவுண்ட் ரோட்ல சர்வீஸ் போகும் போது எடுத்தது. அப்பவெ என்னா ஒயரம் இருக்கான்..பாருங்க..! ஹீ..ஹீ..)
"" படிக்கிறப்ப..கம்பியுட்டர ஆன் பண்ணி ஆஃப் பண்ண கூட தெரியாதவன், கம்பியுட்டர் சர்வீஸ் பண்ற ஒரு கம்பெனிலெ ஜாயின் பண்னென். ஒரு மூனு மாசம் சம்பளம் கிடையாது. ட்ரெயினிங்தான். (அப்பிடியெ குடுத்துறுந்தாலும் மனசாட்சிபடி நானெ திரும்ப குடுத்துருப்பென்)
ReplyDeleteஎனக்கு டைப்பிங் நல்லா வரும் அப்டின்றதாலெ, எனக்கு தெர்ஞ்ச நாலு டாஸ் கமெண்ட திரும்ப திரும்ப டைப் பண்ணி பிஸியா இருக்கிர மாத்ரி சீன் போடுவென். எனக்கு ரொம்ப பிடிச்ச டாஸ் கமெண்ட் CLS தான்.""
வெட்கப்படாமல் உண்மையை எழுதும் நீ Really Gentleman.
எனக்கும் டைப்பிங் தெரிந்ததால் தான் கம்ப்யூட்டரிலேயே உடகார வச்சானுங்க. இல்லன்னா நம்ம knowledge-க்கு அப்பவே படம் விட்டுருக்கும்.
ஆனாலும் சமாளிச்சோமுல்ல.
என்ன நம்ம கூட படித்த மேதாவிகள் யாரும் கமெண்டே எழுதலை. உண்மையை எழுத வலிக்குதோ....
Regards
Local boy