மைக்ரோவேர்ல்டு VS மைக்ரோசாஃப்ட்


ஒகெ. இப்பொ நான் சேர்ந்த கம்பெனி பத்தி பாப்பொம். அந்த கம்பெனி பேரு மைக்ரோ வேர்ல்டு ( ஊத்தி மூடி ரொம்ப நாளாச்சு அதுனாலெ பேரு சொன்னாக்க ஒன்னும் ஆக போறதில்ல..) பேர பாத்துட்டு பெருசா மைக்ரோசாஃப்ட் மாதிரின்னு நினைச்சிடாதிங்க..! ஒரு பத்துக்கு , பதினைஞ்சி அடி ரூம்.. இதுதான் சர்வீஸ் பண்ற இடம். இதுல பாதி இடம் பாடாவதி ஆன மானிட்டரையும் ப்ரிண்டரையும் அடுக்கி வச்சிருப்பானுங்க..! மீதி இடத்துலெ நாங்க எல்லாரும் உட்காந்து மீட்டிங் போடனும். (பாதி பேர் நிக்க வேண்டியதான்!). அதுனாலெயெ இந்த இட பற்றாகுறைன்னாலெயெ சர்வீஸ் கோஆர்டினேட்டர் பொண்ணு ராஜி கூட "நெருங்கி" பழக வேண்டியதா போய்ட்டு..! (ஹி..ஹி)

பத்து மணி வரைக்கும் மீட்டிங் நடக்கும். யார் யாரு எங்க பொவனும்னு மேனஜர் (ஆக்சுவலி…இவர் மேனஜர் இல்லை..டேமஜர்) முடிவு பண்ணுவார். எங்கள மாதிரி அப்ரசண்டிஸ் எல்லாம் வோடாஃபோன் நாய் குட்டி மாதிரி பின்னாடியெ பொவனும். இதிலெ கொடுமை என்னன்னா..அந்த சர்விஸ் பொட்டியயும் இந்த அப்ரசண்டிங்கதான் தூக்கிகிட்டு பொவனும். சரி நம்மளையும் மதிச்சு வேலை குடுத்துருக்கானுங்களேனு விதியென்னு..நாங்களும் பின்னாடியெ போவொம். பஸ் பாஸ் கம்பெனி குடுத்துடறாதலெ..பிரச்சினை இல்லை. டீ, சிகரெட் மட்டும் கரெக்ட் பண்ணிட்டா அன்னைய பொழுது ஒகெ. எத்தனை பேர் கூடபோனாலும் இவனுங்க பண்ற சர்வீஸ் மட்டும் புரிஞ்சிக்கவெ முடியலை..! இத்தனைக்கும், விண்டொஸ் கூட கிடையாது..அப்போல்லாம்..டாஸ் மட்டும்தான்.. ஆனா நாவல் நெட்வொர்க் புழ்க்கத்திலெ இருந்த காலம் அது.

கம்பியூட்டர கண்டு பிடிச்சவன் கண்ல பட்டா கொல பண்ற வெறியில சுத்துட்டு இருந்தென்..! அந்த ஃப்ளாஷ்பேக்லாம் பாக்ரத்துக்கு முன்னாடி, நம்ம டீம் மெம்பர்ஸ் எல்லாரையும் ஒரு இண்ட்ரோ குடித்துடுவொம்.

அதை அடுத்த போஸ்ட்ல பாக்கலாம்..!

Comments

Popular posts from this blog

நண்பனுக்கு கடிதம் - 1

லோக்கல் பாய்! நீயெல்லாம் ஒரு நண்பனா?

ஓட்ஸ் கஞ்சி குடித்தவனின் ஓலம்..!