லோக்கல் பாயின் ஒரு நாள் வாழ்க்கை..! (இதுவும் ஒரு பொழைப்பா..!)



அப்பாவொ அரேபியாவில்,
அதனால் ஆடைகளுக்கு பஞ்சமில்லை..!

பளிச்சென்ற உடை என்றாலும்
பாக்கெட் மணி நிலவரம் சரி இல்லை..!

எல்லா பொய்யும் சொல்லி ஆகி விட்ட்தால்
அம்மாவை ஏமாற்ற வழி இல்லை..!

பத்து ரூபாயொடு பஸ் ஏறினாலும்
பந்தாவுக்கு குறைச்சலில்லை..!

வேறு வழியெ இல்லை என்றால் டிக்கெட் எடுத்து,
கல்லூரி பெண்களை முடிந்த வரை சைட் அடித்து..
மன்னம் பந்தல் வரை ஒரு பஸ் பயணம்..!

பாலிடெக்னிக் படிப்பது தெரிய கூடாது என்பதால்,
ஆர்ட்ஸ் காலெஜ் பொன்னுங்களை மட்டும் சைட் அடிக்கும் கயவாலி தனம்.

கையில் பேருக்கு ரெண்டு நோட் புக்,
அதையும் கடலை போட வசதியாக் ஜ்ன்னல் வழி ஃபிகருக்கு..!

இறங்கிய உடன் ஒரு சிகரெட் ஒரு டீ, (பல சமயம் ஒசி) ,

முத்து டீ கடையில் திட்டு வாங்கி,
சேகர் மெஸ் செருப்படி பட்டபின்,

கூட்டமாய் கிளாஸுக்கு போய், பாடம் புரியாமல்
பேய் முழி, முழித்த்தில் பாதி நாள் முடிந்திருக்கும்..!

அம்மா கொடுத்த பணம் எல்லாம், புகையாய் மாறியதால்..!
மெஸ் அக்கவுண்ட் உள்ள உயிர் நண்பனிடம் நெருங்கி பழகி

மதியம் லஞ்சை ஒப்பெற்றி மறுபடி சிகரெட் கொஞ்சம் பான் பராக் போட்டு
ஒரு வழியாய் கல்வி பயின்று வெளியெ வந்தால் மணி நாலு..!

கொஞ்ச நேரம் கிரிக்கெட் ஆடி, சீக்கிரம் அவுட் ஆகி
நல்லா இருக்கும் தலை முடியை, நாப்பது முறை சீவி,

கர்சிப்பில் பத்திரபடுத்தி இருக்கும் பவுடரை,
சுவத்தில் சுன்னாம்பு போல அடித்து
ரெடி ஆயாச்சு உற்சவத்திற்க்கு..!

இது வரை நண்பர் குழாமொடு இருந்தவன்,
அஞ்சு மணிக்கெல்லா எஸ் ஆகி, பஸ் ஸ்டாப்பில் பதுங்கி

கூட படிக்கும் பொண்ணுங்க எல்லோரையும் ஒருவழியாய் வழி அனுப்பி,

கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல்
எம்சிஏ படிக்கும் பொண்னுளுக்கும் லுக் விட்டு,
படி கட்டு சாகசத்திற்க்கு பிறகு,

மாயவரம் போய் மத்த காலெஜ் பொன்னுங்க எல்லாம் கவர் பண்ணிய பின்..!
லோக்கல் நண்பர்களொடு சைக்கிள் மிதித்து,

கொறநாடு போய், பெருமாள் கோவிலுக்கு போகும் பெண்களை பார்த்து
சாப விமோசனம் வாங்கிய பின், ஒரு வழியாய் வீட்டுக்கு போய்,
இந்த பூனையும் பால் குடிக்குமா என பதுங்கி ஒரு நாள் முடிந்த்து.

பிள்ளை படித்து களைத்திருக்கிரானெ என டீ, காபி, டிஃபன்.

பின்னர் ஒன்பது மணி வரை படிப்பது போல ஒப்பெற்றி,
அதன் பின் யாருக்கும் தெரியாமல் எஃப் டீவி பார்த்து ஒரு வழியாய் தூங்கியாச்சு..!

வீட்டில் கட்டபட்ட கன்று போல இருந்தாலும்,
வெளியெ அவுத்து விட்ட எருமை போல ஒரு வாழ்க்கை..!

(ஒரு புதினம் படைக்க ஒரு தருதலையின் வாழ்க்கையை தேர்ந்து எடுக்கும் அவல நிலை என்னை போன்ற எந்த படைப்பாளிக்கும் வரக்கூடாது)

இப்படிக்கு, மெண்டல்...!

Comments

  1. ஒரு நாள் வாழ்கை என்று தலைப்பில் மூன்று வருட கல்லூரி வாழ்கை ஒரு பக்கத்தில் இப்படி ஜாலிய சொன்ன நண்ப இப்படி ஜாலிய நாள்களை கழித்த கூட்டம் தான் நாம் இன்று ...! நினைத்து பார்க்க முடிய ஒரு வளர்ச்சி ஏட்டு கல்வி வாழ்க்கைக்கு உதவாது என்பதற்கு ஒரு உத்தரனமான ஒரு கூட்டம் என்றல் இது தான் ஆனால் லோக்கல் பாய்யா இப்படியா பழிவாங்குவது இதற்க்கு பதில் கடிதம் லோக்கல் பாய் இடம் உண்ட ...?! ஷா குவைத்

    ReplyDelete
  2. அந்தி நேரத்தில் வீட்டில் அயர்ந்து உட்காந்திருகும்போது நம் வீட்டில் செய்து கொடுத்த முறுக்கு சாபிட்டதுபோல நறுக்குன்னு இருந்தது உங்கள் வரிகள் ...வாழ்த்துகள்... இதையும் யாராவது காபி பேஸ்ட் பண்ணுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது.. அந்த அளவுக்கு அருமை !!

    ReplyDelete
  3. பார்ரா..லோக்கல்..உன் வாழ்க்கைய எழுதினதுக்கு ஃபீட் பேக்..! எவ்வளவு ஜாலியா நீ வாழ்ந்துருக்கன்னு..இப்பவாவது உனக்கு புரியுதா...ஸ்டுபிட்....!!??

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நண்பனுக்கு கடிதம் - 1

லோக்கல் பாய்! நீயெல்லாம் ஒரு நண்பனா?

ஓட்ஸ் கஞ்சி குடித்தவனின் ஓலம்..!