குவைத்திலிருந்து கோகுலின் குமுறல்..!


கல்லுரி வாழ்கை ...!

கல்லூரியில் படிக்க வேண்டும் நானும் ஒரு நல்ல படிக்ககூடிய மாணவனாய் வரவேண்டும் B.E இல் சேரவேண்டும் தனது பெயருக்கு பின்னல் இரண்டு எழுத்து B.E வரவேண்டும் ரோஜா படத்தில் வரும் அரவிந்த சாமி போல கம்ப்யூட்டர் துறையில் இருக்க வேண்டும் என்ற கனவுகளுடம் பாலிடெக்னிக் சேர்ந்தால் முதல் நாள் சரியான கழுத்து வலி,

பொதுவாக கூச்ச சுபவாம் கொண்ட நான் கல்லூரிக்கு முதல் நாள் கொஞ்சம் தாமதமா சென்றதால் பெண்கள் அமரும் பகுதிக்கு அருகில் தான் இடம் கிடைத்தது. தலையை திருப்பினால் பெண்களை பார்ப்பது போன்று ஆகிவிடும் என்று ஒரு பக்கமாக பார்த்து கொண்டு இருந்தால் அடுத்த நாள் சரியான கழுத்து சுளுக்கு. என்னை போன்றே அனைவரும் நல்லவர்கள் என்று நினைத்து கொண்டு இருந்தால் எங்கள் க்ரூப்பில் ஒரு ஹிந்தி நடிகர் போல ஒரு நபர் ஆக்டிவான பேச்சு அதிகமான அறிவு திறமை உள்ளவர் போன்ற ஒரு தோற்றம் நான் இவரை கண்டு என்னோட இக்நோரன்சே தெரிய கூடாது என்பதினால் அளவாக பேசுவேன்.

இந்த நிலையில் என்னோட ஸ்கூல் நண்பர் லோக்கல் பாய் மற்றும் முகேஷ் இருவரும் நான் இருந்த வகுப்பில் இருந்தாதல் கொஞ்சம் தைரியம், அனைவரும் நல்லா படிக்க கூடியவர்கள் என்று ஒரு பயம் அதிலும் நமது கல்லுரி ஹிந்தி நடிகர் அஜய்தேவன் வேறு ஒரு என்னேரோமும் ஒரு புக்கோட இருப்பார்,, எக்ஸாம் முன்பு அனைவருக்கும் இந்த கேள்வி தான் வரும் நல்ல படிங்க என்று சொல்லி நோட்ஸ் வேறு கொடுப்பார் எனக்க ஒரு பயம் தமிழ் மீடியம் படித்த எனக்கு இங்கிலீஷ் சரியாக வரதே என்ற பயம் வேறு..!

லோக்கல் பாய் இப்படி படி அப்படி படி என்று ஒரு டிப்ஸ் வேறு கொடுப்பார். எனக்க ஒரு பயம் அனைவரும் பாஸ் பன்னுவார்கள் கடைசில் ரிசல்ட் வந்த பிறகு பார்த்தல் ஆங்கிலத்தில் நாங்கள் இருவரும் பாஸ் எங்களுக்கு கிளாஸ் எடுத்தவரின் நிலை அந்த நோட்டீஸ் போர்டுல் தான் தெரிந்தது ஹிந்தி நடிகர் அஜய்தேவன் போல இருந்தவரின் நடிப்பு அன்று தான் எங்களுக்கு புரிந்தது ..! அஜய் எந்நேரமும் புத்தகத்துடன் தான் இருப்பார் கடைசியில் தான் தெரிந்தது அவர் புத்தகதிற்குள் வைத்து படித்த புத்தகம் என்ன என்று ...! B .E சேரே வேண்டும் கனவோடு வந்த நாங்கள் லோக்கல் பாய் சேர்த்து சுத்தினது தான் மிச்சம் ...!


கோகுலுக்கு பதில்..!

அன்பு நன்பா, கோகுல் (செருப்படிக்கு பயந்து பெயர் மாற்றப்பட்டுள்ளது). உனக்கு சில கேள்விகள். ரோஜாவில் வரும் அரவிந்த் சாமி...கொஞ்சம் அதிகம்தான் என்றாலும், என்னை அஜய் தேவ்கான் என்று விளித்த்தால் அட்ஜஸ் செய்து கொள்கிறென். நானும் உன்னை போல் கார்னர் சீட்டில் உட்காந்து வாழ்க்கை தொலைத்தவன் தான். என்ன, பெண்களையெ பாத்து கொண்டிருந்த்தில் எனக்கு கழுத்து வலி. அதான் நமக்கிடையெ இருந்த வித்தியாசம். நான் இப்படி புக்கும் , கையுமாக ஆனதுக்கு யார் காரணம்..? சத்தியமாக நான் இல்லை.

வாத்தியார் யாரை எது கேட்டாலும், அரை தூக்கத்திலிருந்து என்னை எழுப்பி விட்டு, என்னை காமெடி பீஸ் ஆக்கி வேடிக்கை பாத்த டினொசர் தான் காரணம். நாளடைவில் என்ன கேட்டாலும் எழுந்து ஏதொ உளர்ரானெ..அப்டின்னு பசங்களா பாத்து என்னை புத்திசாலின்னு நினைச்சா நான் என்ன பன்ன..? சொல்லு..?

பைக்ல ஓசி லிஃப்ட், ஒசி கள்ளுன்னு நான் படிக்கிற சில பசங்களொட சில சமயம் தென் படுறது சகஜம் தான். அதுக்காக என்னையும் படிக்கிற பசங்களொட சேத்த்துக்கு நான் என்ன பண்ன முடியும். புக்குக்கு நடுவில சில கசமுசா புக் இருந்த்து உண்மைதான். ஆனா என் பேர ரிப்பெர் பன்னி, என்னை ஒரு ”அந்த மாதிரி’ புக் டீலர் ரெஞ்சுக்கு மாத்தின ஹாஸ்டல் கயவாளிகள் தான் காரணம்.

நைட் ஸ்ட்டி போது, எங்களுக்கு மட்டும் தூக்கம் வந்து, நீங்க எல்லாம் படிச்சா நல்லா இருக்குமா..? சொல்லு, அதான் நைட் ரெண்டு மணிக்கு இந்த கொஸ்டின் வரும் , அந்த கொஸ்டின் வரும்னு கொளுத்தி போட்டு, நாங்க தூங்க பொய்டுவொம். ஸொ, நாங்க தூங்க...நீங்க சம்பந்த படாத கொஸ்டின் படிக்க, சரியா போச்சு இல்ல..! தவறி போய் சில கொஸ்டின் வரும் போது, சில பேருக்கு டீ, சிகரெட் வாங்கி குடுத்து, நாலு பேருக்கு முன்னாடி, “எப்படி மாப்ள, கரெக்ட்டா இந்த கொஸ்டின் வரும்னு சொன்ன்னு” கிளப்பி விடுவொம்..!

சில, பல பேப்பர் அரியரானது உண்மைதான். ரிவேல்யுஷ்ன் போட்டு இருந்தா கண்டிப்பா ஒரு 70% வந்து இருக்கும். அதுக்காக என்ன பன்றது..?

எழுத்து சுதந்தரத்த காப்பாத்துறுத்துக்காக நீ அனுப்புன அவதூற (நீ சொன்ன மாத்ரி ஆர்ட்டிகிள்..இல்ல மாப்பு..!) நான் பெருந்தன்மையொட பதிவு செய்ரென்..!

படத்தில் உள்ளது எங்களின் அறிவு திருக்கோவில்..!

Comments

  1. அருமை, அருமை....

    அப்படி படி, இப்படி படி என்று சொன்ன நானே பெயில் என்றால் அதற்கு என்ன காரணம்?
    வாத்தியார் செய்த Initial mistake தான்.....

    ReplyDelete
  2. கல்லுரி வாழ்கையில் சுவராசியமான நண்பர்களின் அஜய் ஒருவர் அவரை போன்ற நடிகர் எங்கள் கல்லூரில் இருந்தால் எங்கள் வகுப்பு எப்பொழுது கலை கட்டும், நல்ல நடிகர் அவர் தமிழ் சினிமா துறை இல்லாமல் போனது தமிழ் சினிமா துறைக்கு தான் பெரும் இழப்பு ..! அஜய் தேவகன் குறும்பு தொடர வாழ்த்துக்கள் , -

    ReplyDelete
  3. கல்லுரி வாழ்கையில் சுவராசியமான நண்பர்களின் அஜய் ஒருவர் அவரை போன்ற நடிகர் எங்கள் கல்லூரில் இருந்ததால் எங்கள் வகுப்பு எப்பொழுதும் கலை கட்டும், நல்ல நடிகர் அவர் தமிழ் சினிமா துறையில் இல்லாமல் போனது தமிழ் சினிமா துறைக்கு தான் பெரும் இழப்பு ..! அஜய் தேவகன் குறும்பு தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நண்பனுக்கு கடிதம் - 1

லோக்கல் பாய்! நீயெல்லாம் ஒரு நண்பனா?

ஓட்ஸ் கஞ்சி குடித்தவனின் ஓலம்..!