சர்வீஸ் ஸ்டோரிஸ் – 1
நான் வேலைக்கு சேந்த நாலெ நாளுல நமக்கு பத்து அரியர் இருக்கிற மேட்டர் லீக் ஆயிட்டு. அதுனாலெ ஒருத்தன் பக்கத்துல சேத்துக்க மாட்டென்னுட்டானுங்க..! அப்டியெ யாராவது கூப்டு போனாலும், பாதியிலெயெ கிழட்டி விடரதிலெயெ குறியா இருப்பானுங்க..!
சரி, இப்படி கைல பொட்டியொட , தெருத்தெருவா அலையரதுக்கு , பேசாம, ஆஃபிஸ்க்குள்ளெயெ இருந்து மானிட்டர் சர்வீஸ் ஆவது கத்துக்குவொம்னு ஐடியா பன்னென். அப்பொ மானிட்டர் சர்வீஸ் பன்ற ஒரு பான் பராக் பார்ட்டி இருந்தாரு..! டபுள் மீனிங் டயலாக்னா அல்வா இந்த ஆளுக்கு..! ஒரு சோடா புட்டி கண்ணாடி வேற..ஆனா மானிட்டர் சர்விஸ் பண்றதுல..ஆளு கில்லாடி..! இவரு சர்வீஸ் பன்னிட்டு இருக்கும் போது, இவருக்கு டூல்ஸ் எடுத்து குடுக்கனும், அப்புறம் மானிட்ட்ர் எல்லாம் கிளின் பன்னி வைக்கனும்னு ஏகபட்ட கெடுபிடி.
அப்பொல்லாம் மானிட்ட்ர் சர்வீஸ் பன்னா கஸ்டமர் கிட்டெ நிறைய சார்ஜ் பண்ணிடுவாங்க. அதுனாலெ கம்பெனில நல்ல வாய்ஸ். அதுனாலெ, அந்த ஆள் அடிக்கிற மொக்க ஜோக்க எல்லாம் சகிச்சு கிட்டு, அவரு பண்ற சர்வீஸ் உத்து பாத்துட்டு இருப்பென். முக்கியமான சர்வீஸ் கட்ட்த்துல, வெற ஏதாவது வேலை கொடுத்து வெளிய அனுப்பிட்டு, சைலண்ட்டா சால்டர் பண்ணி வேலைய முடிச்சுடுவார். நானும் எப்படியாவது வெலை கத்துகனும்னு, ஏறக்குற்றைய அந்த ஆளுக்கு எடுபிடியாவெ ஆய்ட்டென். கொஞ்ச நாலுக்கப்புறம் தான் இந்த ஆளுக்கிட்டெ டபுள் மீனிங் தவிற ஒன்னும் கத்துக்க முடியாதுன்னு புரிஞ்சுகிட்டென்.
அதுக்குள்ள ரெண்டு மாசம் ஆயிட்டு. அப்பொ ஒரு நாள் எதிர்பாரம ஒரு கஸ்டமர் பிளெஸ்க்கு போகும் படி ஆயிட்டு. ஆனா எனக்குன்னு டூல்ஸ் கிட் இல்லை.. ஏன் ஒரு டூல்ஸ் கிட் வேஸ்ட் பண்ணனும்னு எனக்கு என் மேனஜர் கடன்காரன் எனக்குன்னு, வாங்கவெ இல்லை..! ஆனா என் கிட்டெ டூல்ஸ் கிட் இல்லைனு என் பாஸ்க்கு தெரியாது..!
அந்த திடுக்கிடும் சம்பவத்த அடுத்து பாப்பொம்..!
(படத்துல இருக்கிற 6 பேக்ஸ் பாடி நான் தானுங்கன்னா..!)
Nice Picture....
ReplyDeleteBlogspotஐ அப்டேட் செய்து கூவிகூவி சொல்றவன் நீ ஒருத்தன் தான்யா....
கத்துக்கிட்ட டபுள் மீனிங் ஒண்ணு ரெண்டு போடலாமுல்ல...
இதில் கடைசியில் சஸ்பென்ஸ் வேறு,, சரி சரி மீதியையும் complete பண்ணு..
லோக்கல் பாய்