காலி சூட்கெஸிம்..கஸ்டமர் ப்ளெஸும்...!


அது ஒரு ப்ரிண்டர் ப்ராப்ளம். ஏற்கனவெ ரெண்டு மூனு பேர் போய்ட்டு வந்து மேக்ஸிம்ம் டேமெஜ் பன்னி வச்சிருக்கானுங்க. இந்த நேரத்துலெ என்னை
ஆட குளிப்பாட்டி மாலை போட்டு அனுப்புற மாத்ரி ரெடி பன்னிட்டாங்க.

அவசரமா தேடுனதில, ஒரெ ஒரு டப்பா சூட்கெஸ் மட்டும் சிக்கிடுச்சு. ஆனா ஒரு ஸ்குரு டிரைவர் கூட கிடைக்கல. இவளத்துக்கும் அந்த சூட்கெஸ் ரொம்ப ராசியாம். ஒரு கால்ஸ் கூட க்ம்ப்ளிட் ஆகாத எவனொ தலைய சுத்தி வீசி எறிஞ்சு இருக்கான். ஆக ஒருமாத்ரி வெறும் சூட்கெஸ் மட்டும் எடுத்து கிட்டு நானும் பாடிகாட் முனிஸ்வரன் எல்லாம் வேண்டிகிட்டு கிளம்பிட்டென். மேனஜர் கிட்டெ இது நியாயமா..? அப்டின்னு கேட்டென். அவரோ, ஊருலெருந்து வரும் போது என்ன எடுத்துட்டு வந்தென்னு கேட்டார். நான் வாய மட்டும் தான் எடுத்துட்டு வந்தென், அப்டின்னென். அப்பொ அதையெ இப்பவும் எடுத்துட்டு போன்னு, மனசாட்சி இல்லாமெ சொல்லிட்டார்.

ஒரு மாத்ரி கஸ்டமர் ப்ளெஸ் போய் சேந்துட்டென். அவர் கஸ்டமர் இல்லை..கஷ்டமர்...! என்னை புதுசா பாத்த உடனெ, பேனசோனிக் கம்பெனிலெருந்து ப்ரிண்டர் ஸ்பெஷலிட் வந்து இருக்கிறதா நினைச்சுட்டார். என் கம்பெனி ஒரு உறுப்படாத கம்பெனி அப்படி இப்படின்னு ஒரு அஞ்சு நிமிஷம் திட்டிட்டு ஒரு காபி ஆர்டர் பன்னி கொடுத்தார். சரி, எப்படியும் அப்புறம் கிடைக்காதுன்னு, நானும் கரெக்ட் பன்னிட்டென். சரி ஸர்வீஸ் ஆரம்பிங்க தம்பி அப்டின்னு சொல்லிட்டு எதிர்ல உட்காந்துட்டார்.

எப்டி ஆரம்பிக்கிறது. ஒரு ஃபார்மாலிட்டிகு ப்ரிண்டர் ஒப்பன் பன்ன்னும்னா கூட எங்கிட்டெ ஒரு ஸ்கூரு டிரைவர் கூட கிடையாதெ..! எங்கிட்டெ இருக்கிறது காலி சூட்கெஸ்னு அவருக்கு எப்டி தெரியும். நானும் மெட்ராஸ்ல ஒரெ வெயில் சார்னு ஆரம்பிச்சு எவ்வளவு நேரம் தான் பேசி கிட்டெ இருக்க முடியும். நல்ல வெலையா ஒரு போன் வந்துடுச்சு. கஸ்டமர் எழுந்து அடுத்த ரூம் பொய்ட்டார்.

சரின்னு, ஏதாவது நாமளும் டிரை பன்னுவெம்னு, ப்ரிண்டரெ எடுத்து ஒரு குலுக்கு, குலுகினென். அப்புறம், மேளம் வாசிக்கிறவங்க, அதை டைட் பன்னு வாங்களெ அது மாத்ரி நாலா புறமும், அமுக்கி உள்ள இருக்கிற பேப்பர் பீஸ் எல்லாம் வெளிய எடுத்தென். பக்கத்துல இருந்த தெங்கா என்னைய எடுத்து ப்ரிண்டர் மேல எல்லாம் போட்டு (ஆயில் போட்டு சர்விஸ் பன்ன மாத்ரி இருக்கனும் இல்ல) ஆன் பன்னினா, என்னா பாடிகாட் முனிஸ்வரன் என்ன கை விடல. டக்குனு ப்ரிண்டர் சட சடன்னு அடிக்க ஆரம்பிச்சுடுச்சு.

என்ன ஆச்சரியம். கஸ்டமர் வந்து பாத்துட்டு, வெரிகுட் தம்பி, அப்டின்னு பாராட்டி இன்னொறு காபி ஆர்டர் பன்னிட்டார். இப்படி குலுக்கியெ ஒரு ப்ரிண்டர் ஒடுதுன்னா சர்வீஸ் பன்றது எவ்வளவு ஈஸின்னு நினைச்சுட்டு என் மேனஜர் கிட்டெ வந்து ரிப்பொட் பன்னென். ஓஹொ, இவனை இப்படியும் யூஸ் பன்னலாம்னு, எனக்கு அடுத்த மாசத்த்லெருந்து சம்பளம் கொடுக்க ஆரம்பிச்சுட்டார். ஆனா எல்லா கஸ்டமர் ப்ளெஸ்லயும் இந்த டெக்னிக் வெலை செய்யலை..சமயத்துலெ கஸ்டமர் என் சட்டைய புடிச்சு குலுக்கின சம்பவம் எல்லாம் உண்டு.. அது மாதிரி ஒரு குலுக்கல் சம்பவத்த அடுத்த போஸ்ட்ல பாப்பொம்..!

(பட்த்துல இருக்கிற எக்ஸிகியுட்டிவ் யாருன்னு குழம்பிடாந்திங்க...நானெதான்..!)

Comments

  1. உன்னுடைய விளையாட்டுத்தனமான அனுபவங்கள் மூலம் நாங்கள் பாடம் கற்றுக்கொள்கிறோம்.

    உன்னுடைய சமயோசித புத்திக்காக உனக்கு ஸ்பாட் ஸ்பெசலிஸ்ட் என்று பட்டம் வழங்குகிறோம்....

    சாகுல்-ரியாத்

    ReplyDelete
  2. Mappala it's really good i want write some things about like this ..! i'll send it you by e-mail later you can post here - by Sha Kuwait

    ReplyDelete
  3. Mappala, you are writing really good story... it was happened in your life ..? it's really good maams, you have good GK you know how to talk to customers keep on write like this story. i like to read ur word ...! from Sha Kuwait

    ReplyDelete
  4. ''நான் வாய மட்டும் தான் எடுத்துட்டு வந்தென், அப்டின்னென். அப்பொ அதையெ இப்பவும் எடுத்துட்டு போன்னு, மனசாட்சி இல்லாமெ சொல்லிட்டார்''
    கலக்கிட்டிங்க போங்க ....(நான் அந்த ப்ரின்டரை சொன்னேன் ).. வாழ்த்துகள்..........
    ஞானவேல்

    ReplyDelete
  5. Pandiyan...

    Still you remember...we both went to kumbakonam to install. whole night we tried but unable to install.... idhu madhiri evalavo mokka velaya seyyama namma thirumbi irukom....adhaym eludhunga

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நண்பனுக்கு கடிதம் - 1

லோக்கல் பாய்! நீயெல்லாம் ஒரு நண்பனா?

ஓட்ஸ் கஞ்சி குடித்தவனின் ஓலம்..!