ராஜமொக்கை - விமர்சனம்
ஒரு டைரக்டருக்கு இவ்வளவு கொலவெறி இருக்குமான்னு கொலை நடுங்கி போய், இந்த விமர்சனத்த எழுதுறேன். பல்ல கடிச்சிக்கிட்டு இந்த படத்த பல தவணையில பாத்துட்டு இந்த பாவத்த செய்றேன். ஒரு ஒலக விகர்சகனா (சரி..சரி..உள்ளூர் தான்..!) இந்த படத்த பாக்க ஆரம்பிக்கும் போதே..உள்ளுக்குள்ள மணி அடிக்கக் ஆரம்பிச்சுடுது. இது கோடம்பாக்கம் பிரிஜ் பக்கத்துல கல்வெட்டில செதுக்கி பக்கத்துலேயே உட்காந்து பாதுகாக்க வேண்டிய படம்னு. இதுக்கு துணை போன கொலை கார பாவிங்களோட லிஸ்ட் இதுதான், விக்ரம்(சொம்புவே பரவாயில்லை..ஹிம்), டைரக்டர் சுசீந்திரன்(என்னாது..இவரு ரெண்டு ஹிட்டு படம் குத்தாரா..சொல்லவேயில்ல...!), மியுசிக் – யுவன் (ஒன்ன பெத்ததுக்கு ஒரு தென்னை மரத்த பெத்துருந்தா கள்ளாவது குடிக்கலாம்..ஹிம்..). படம் புதுமையிலும் புதுமையா ரவுடிகள் அராஜகத்துல ஆரம்பிக்குது. ஒரு வில்லி ஒரு நாப்பது ஜினியர் ஆர்டிஸ்ட் புடை சூழ நடந்து வராங்க (சொர்ணாக்கா சித்தி போண்ணா இருக்குமோ?). அவங்க வரும் பொது பாம்பு மியுசிக் போகும் பொது, சீட்டுக்கு அடியில பாம்பு போற எபெக்ட் உருவாக்குறது, திரை உலகில் ஒரு தனி பாணியே உருவாக்க போகுதுனு சொல்லலாம். ஹீரோ கா