லேப் நோட்டும், லவ் லெட்டரும்...!


கும்புடுரெங்கன்னா..! இப்பொ பழைய கதைய சொல்லி முடிச்சுடுவோம்.

சென்னை சர்வீஸ் ஸ்டோரிஸ் தொடர்ந்து எழுதானனால ஒரு நண்பன் என்கிட்ட கோபிச்சுகிட்டு
மெயில் கூட அனுப்ப மாட்டென்ரான். அவனுக்கென்னா..கௌரவ வேடமா வந்து என்னை அப்ப்பபொ கஸ்டமர் ப்ளெஸ்லெருந்து காப்பாத்துற ரோல்..நம்ம நிலைமை அப்டியா..அங்க இங்க வாங்கின அடியெல்லாம் வரிசையா ஞாபக படுத்தி எழுதனும் இல்ல..!

சரி..இப்பொ ரஸ்குல்லா டீலுக்கு வருவொம்.

டீலுக்கெ நான் ஒத்துக்கலை..ஏன்னா..ஒரு லெட்ட்டருக்கெ..1000 ரூ தரென்ரான். இப்படி கோகிலா கிட்ட பாட்டு வாங்கினாலும் பரவாயில்லை...இன்னும் ரெண்டு மூனு லெட்டர் வாங்கிட்டா..அதை வச்சு..இன்னும் பேரத்தை ஏத்துலாம்னு ஐடியா பன்னி..உன்னால முடிஞ்சத பாத்துக்கடா..டுபுக்குன்னுட்டென்..!

அடுத்து 20 வருஷத்து பழைய குமுதம் , விகடன் எல்லாம் படிச்சு..அதுலெருந்து கவிதை காப்பி அடிச்சு..(அப்புற்ம்..எப்டி எழுதானுலும் காப்பின்னு கண்டு புடிச்சிராங்களெ..அதான்..) இன்னொரு லெட்டர் எழுதி..அதெ மாத்ரி ரெக்கார்டு நோட்ல வச்சாச்சு..இந்த முறை என் நேரத்த பாருங்க...லேப் ராக்ல எந்த நோட்டும் இல்ல..சரி..ஆபத்துக்கு பாவம் இல்லன்னு..என் ரெகக்கார்ட் நோட்லெயெ வச்சுட்டென். (இதுக்கு கூட யூஸ் ஆகாலைனா..அப்புறம் எதுக்கு இருக்கு இது..!?). அந்த அடிப்பொடி தோழிகிட்டெ சொல்லி..ரெக்கார்ட் நோட் இருக்கு..எடுத்து கோகிலா கைல குடுன்னு சொல்லிட்டென். அவங்களும் எடுத்துட்டு போய்ட்டாங்க...!

கெரகம், அவங்க வீட்டுக்கு அதை எடுத்து போன அப்புறம் தான் தெரிஞ்சது மறு நாள் காலைலெல லேப் எக்ஸாம். நாசமா போச்சு. ஒரு பயல் சொல்லலை..

இதுல கொடுமை என்னனன்ன..HOD கையெழுத்து வேர இன்னும் வாங்கலை..அடப்பாவிகளா..நாம பாஸ் பன்ற்தெ..லேப்லதான்..அதுலெயும் மண்ணா..அப்டின்னு நொந்து போய் முத்து கடையில டீ சாப்டு யோசிச்சுட்டு இருந்தென். காதலுக்கு கண்ணுதான் இல்ல..அறிவுமா இல்ல..அப்டின்னு என்னையெ நொந்துட்டு இருக்கும் போது..கருப்புசாமி எல்லாருக்கும் HOD கையெழுத்து போட்டுகுடுக்குறான்..சீக்கிரம் போனா..ரொம்ப செலவு வைக்க மாட்டான். இல்லன்னா..உன் பேண்ட் வரைக்கும் கிழட்டிட்டுதான் விடுவான்னு பசங்க சொன்னானுங்க. அட HOD விட இவ்வளவு செல்வாக்கா இருக்கான்யா..மாப்ள..அப்டின்னு வியந்து கிட்டு இருந்தென்.

சரி..என்னா பன்ரானுங்கன்னு ரூமுக்கு போய் பாத்த்தா..HOD கையெழுத்த அவரெ இப்டி தெளிவா போட முடியாது போங்க..அப்டி ஒரு கிரிஸ்டல் கிளியரா போட்டுட்டு இருக்கான். என்னை பாத்து..என்னா மெண்டல்..’கையெழுத்து வெணும்னா வாங்க்க்கிக..சாருக்கு நிறைய வேலை இருக்குன்ரான்.!” நான் என்னன்னு சொல்லுவென்..நாளைக்கு எக்ஸாமுக்கு எடுத்துட்டு போற ரெக்கார்ட் நோட்ல லவ் லெட்டர் வச்சு குடுத்துட்டென்னா..என்ன பழைய செருப்பாலெ
பத்து தடவை அடிப்பானெ..நான் மென்னு முழுங்கிட்டு இருந்தென்..!

அதுக்குள்ள சரமாரியா நாலு கையெழுத்து போட்டு, நாலு குவார்ட்டர சம்பாதிச்சுட்டான்..எப்டிரா மாப்ள..இப்டி போட்டு கலக்குரன்னு கேட்டா..இதையெல்லாம் பாத்து பெருமை பட..என் தாத்தா உயிரோட இல்லியெ..ன்னு..கண் கலங்குறான்..அட அடா..இதெல்லவொ குடும்பம்...புல்லரிச்சு போய் நிக்க்றப்பொ தலைல இடி விழுற மாத்ரி ஒரு செய்தி. டீச்ச்ர் புருஷன் என் கிட்ட வந்து..மாப்ள..எங்கடா உன் ரெக்கார்டு நோட்டுன்னு..நமட்டு சிரிப்பு சிரிக்க்ரான்.

ஆஹா..எப்டியொ மேட்டர் லீக் ஆயிடுச்சான்னு நினைச்சுட்டு இருக்கும் போது..உன் ரெக்கார்ட் நோட்டு ரஸ்குல்லா மாப்ள கைல இருக்கு..நீ என்ன பன்ற..மணிக்கு 100 கி.மீட்டர் ஒடி..எல்லாருக்கும் சிகரெட் வாங்க்ட்டு வா..பாப்பொம்..” அப்டின்னு செக் வச்சுட்டான். வந்துட்டான்யா..வந்துட்டான்யா..எவனுக்கு ஆப்பு வச்சு..பேரம் பண்ணி சம்பாதிக்கலாம் நினைச்சனொ..அவன் கைல ரெக்கார்ட் நோட்டு..அப்பொ என் நிலைமை ..!

அந்த கண்ணீர் கதைய அடுத்த பதிவுல பாப்பொம்..!

(இந்த ப்லாக் போட்டொ கருப்பு சாமிய கௌரவ படுத்துறதுக்காக போட்ருக்கென்..
இதை அவங்க தாத்தாவுக்கெ டெடிகெட் பன்றொம்..!)

Comments

  1. super, nalla interestinga pogum pothu yenya niruthitta.. seekkiram adutha pathiva podu.
    Karuppu Samy Vaalga..
    Avan kitta naanum HOD kaiyeluthu vaanginen.

    ReplyDelete
  2. பார்ரா..கருப்பு..உனக்கு எல்லாருமெ..க்ளையெண்டா இருந்துருக்கானுங்க..!! ஹர்ஷத் மேட்டா ரேஞ்சுக்கு வளரவேண்டிய நீ..குடத்துல இட்ட விளக்கா இருந்திட்டியெ..மாப்ள..!

    ReplyDelete
  3. அது சரி..கருப்பு மாப்ள..உன் தாத்தா..மத்தவங்க கைநாட்டெயெ..கரெக்டா வப்பாராம்ல..அது எப்டிரா..!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நண்பனுக்கு கடிதம் - 1

வ குவாட்டர் கட்டிங் - விமர்சனம்

நண்பன் பொட்டி சிவாவுக்கு ஒரு கண்ணீர் கடிதம்..!