ஒஸ்தி - விமர்சனம்

இந்த மாத்ரி ஒரு படத்துக்கு நம்ம விமர்சனம் எழுதலைன்னா..அது வரலாற்று பிழையாடும்ல..அதுனால மனச கல்லாக்கிகிட்டு..இந்த காரியத்த செய்றென்..

எல்லா ப்லாக்லயும்..எழுதி கிழிச்ச விமர்சனத்த நானும் சொல்றது ..செத்த பாம்பை அடிக்கற கதையா இருந்தாலும், அதுல மட்டும் தான் நாம எக்ஸ்பர்ட் உலகம் நம்பறதால தொடர்ந்து அடிப்பொம்..

ஒஸ்தி..(இந்த டைட்டில சொன்னவன் வாய்ல கெரசின ஊத்தி கொளுத்த..!) படம் ஆரம்பிச்ச , அஞ்சு நிமிஷத்துலயெ தெரிஞ்சு போய்டுது, செலவு பன்னிட்டுவந்து செருப்படி வாங்க வந்துருக்கொம்னு..

எஸ்டிஆர் (பயபுள்ள..அப்டிதான் கூப்டுக்க்குது இப்பல்லாம்..) பறந்து சுட்டுகிட்டெ வராரு..நம்ம போலிஸ் எல்லாம் திட்டம் போட்டு பன்ற என்கவுண்டர்லயெ..ரோட்ல பால் வித்துகிட்டு வர அப்பாவிய சுட்டுடுராங்க..ஆனா நம்ம ஒஸ்தி வேலன்….ஏர்லெயெ..பறந்து குறி தவறாம சுட்டுர்ர்ராரு..சரி..அதான் கரெக்டா சுடுறாரெ…எஸ் ஆவொம்னு இல்லாம…ஒரு ஜீப்ல அவரையெ..சுத்தி சுத்தி வருதுங்க..நம்ம அல்ல கைகள் எல்லாம்..கால கொடுமைடா..!

சரி…கதை என்னா..ஹிந்தில டாபாங் வந்த அதெ கர்மாந்திர கதை தான் இதுலயும்.. ஒரெ அம்மா, ரெண்டு அப்பா, முதல் அப்பா செத்து போய்ட்ராரு..அவரொட மகன் ஒஸ்தி வேலன்..வேலந்தான் அவரு வச்ச பேரு..ஒஸ்தி இதுவா சேத்துகிட்டு..ரெண்டாவது அப்பனையும், அவருக்கு பொறந்த ஜித்தன் ரமெஷ் (மவனெ..இன்னுமா நீ நடிக்க கத்துக்கலை..!) ரெண்டு பேரையும் வெறுக்குது..அம்மாவ மட்டும், மாப்பிள்ளை ரஜினி கணக்கா சுமக்குது.

வில்லன் யாரு என்னானு பாக்கறதில்லை..யாரா இருந்தாலும் ஒஸ்தி..ஒஸ்தின்னு அவங்க காதுல கத்தி, அவங்களுக்கு டென்ஷன் வந்த அப்புறம், பஞ்ச் டயலாக் பேசி , கடைசியா..அவங்க வந்த காருக்கு தீ வைக்கறது தான் நம்ம ஹீரொ…ஒஸ்தி வேலனுக்கு வேலை..

ஹீரொயின..வழக்கமா ஹீரொ மார்கெட்லதான் சந்திப்பாரு..ஒஸ்தி படத்துல வித்தியாசமா, ஜாக்கெட் ஹீக் மாட்டும் போது சந்திக்கிராரு நம்ம ஹீரொ..சரி..இவருதான் பாக்குராரெ..டக்னு..திரும்பலாம் இல்ல..அதான் இல்ல..அதுவரைக்கு ஹீக் மாட்டிட்டு இருந்த பொன்னு, இப்பொ ஸ்லொ மோஷன்ல மாட்டுது..பேரு என்னமொ.. ரிச்சா கங்கோபாத்தியாயா வாவாம்..நாலு தடவை இந்த பேரை சொன்னா நம்ம ஊரு கிழம் கட்டையெல்லாம், டிக்கட் வாங்கிட்டு..மலையேறிடும் போல..நாலெ வசனம் தான் ஹீரொயினுக்கு..(ஆனா உடல் மொழி பட்டைய கிளப்புதுங்கொ..!) ஹீரொ..ஹீரொயின கட்டி காப்பென்னு சொல்ல, அது நாலு சீன், மூனு பாட்டு..

சரி என்னதான் சொல்ல வராங்கன்னு பாத்தா, நம்ம விஜய்காந்த் பாகிஸ்தான் பார்டர்ல வச்சு, முக்கி எடுப்பாரெ..அந்த சோனு சூத் தான் வில்லன், அவரு தேர்தல்க்கு மக்கள் குடுக்க வச்சிருந்த பணம் 75 லட்ச ரூபா பணத்த நம்ம ஹீரொ. ஒஸ்தி வேலன் சுட்டுடுராரு….சரி..இவரு ஏழைகளுக்கு குடுப்பாருன்னு பாத்தா..சொந்த செலவுக்குன்னு வீட்ல வச்சுக்குராரு.. பாவம் என்ன கஷ்டமொ..வீட்ல..! இவரால சுடப்பட்ட(!?) இவரு சக போலிஸ்க்கும் குடுக்குறாரு (சுடனும்னு வந்த பிறகு..எதிரி, நண்பனு பாத்திகிட்டு இருக்க முடியுமா ..சொல்லுங்க).

நைட்ல ஷீட்டிங்க் நடக்கும் போது, லைட் வெளிச்சத்துல கண் பாதிக்க படாம இருக்க ஹீரொ..கூலிங்க்ளாஸ் போட்ருக்காரு..அது புரியாம, நம்ம ரசிகபயமக்கள் நைட்ல ஏன் கூலிங்க்ளாஸ் போட்ருக்காருன்னு மண்டை காஞ்சி போறாங்க..! (அடுத்தமுறை..ஸ்க்ரொல் டெக்ஸ்ட் போட்ருங்கப்பா..வெளிச்சம் ஜாஸ்தியா இருக்குன்னு..!)

நம்ம சந்தானம் தம்பி மட்டும் தான் எல்லாரையும் போல நிக்கென்..பாக்கென்னு வட்டார மொழி பேசி கொல்லாம, அவர் ஸ்டைல்ல மொக்க டயலாக்லயெ கொல்றாரு..!

ஐட்டம் டான்ஸ் இருக்குன்னு வந்த கூட்டம் மட்டும் தான் கொஞ்சம் விசிலடிக்குது, கலாசலா பாட்டுக்கு அல்போன்சா மாத்ரி பல்கியா ஆட விடறத விட்டுபுட்டு, டிபியில அடிபட்ட டாபர் மாத்ரி மல்லிகா, சரி பாட்டு எப்டின்னா..ஈஸ்வரி பாட்டிய பாடவிட்டு, நம்ம வயசுல பத்து ஏத்தி விட்டுடுறாங்க..! டி.ஆர் பாட ஆரம்பிச்ச அப்புறம் (அப்டிதான் சொல்லிக்கிராரு அவரு.!) சின்ன புள்ளங்க எல்லாம் வீல் வீல்னு கத்துது.. ஒஸ்தி மாம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மெ , அவரு கத்து போது, நமக்கெ அடிவயிறு கலங்கி போவுது..புள்ளை மேல பாசம்னா, வீட்லெயெ..ட்விங்கிள், ட்விங்கிள் பாடவேண்டியதான.. நம்ம உசிர இப்டி எடுக்கனுமா..!!?

ஹீரொ பேசிகிட்டெ இருக்குறாரு..ஹீரொயின் பேச நினைக்கும் போதெல்லாம் இவரு பேசி, கேப்பெ இல்லாம பேசிகிட்டெ இருக்காரு..!

சரி..படத்துல திருப்பமெ இல்லியா…இருக்கு..க்ளைமாஸ்ல வண்டியில வில்லன சேஸ் பன்னும் போது ஒரு யுடர்ன் போட்டு வண்டிய திருப்புவாரு பாருங்க..ஹீரொ .அது தான் செம திருப்பம்..படத்துலெயெ..!

குருவி படம் தன்னொட கடைசி மொக்க படம் இல்லைங்கறதை..ஒஸ்தி மூலமா டைரக்டர் தரணி நிறுபிச்சு, அதுல வெற்றியும் கண்டிருக்கார். வாழ்த்துக்கள்.

மொத்ததுல.. திருட்டு விசிடில ஃபார்வெர்ட் பண்ணி பார்க்க வேண்டிய படம்.

இதுக்கு மேலயும், தியெட்டர்லதான் போய் பாக்கனும்னா, என் பொணத்த தாண்டிட்டு அப்புறம் போங்க..(முடியலை ராசா..!)

குறிப்பு: உங்கள் கல்லடிகள் தான் என் போன்ற விமர்சகர்களுக்கு உற்சாக டானிக். உங்கள் வசவுகளை அனுப்பவேண்டிய முகவரி manivanna.siva@gmail.com

Comments

  1. Hi Review romba hilarious aa irukku

    ReplyDelete
  2. Hi This is Sudha - sirichchu mudikka ve oru vaaram aagum pola irukku - adhukku appuram comment podaren : ))

    ReplyDelete
  3. sema செம கலக்கலான காமெடி விமர்சனம்

    ReplyDelete
  4. மாம்ஸ் ... எப்போதும் உன் விமர்சனதுக்கு போடுற கமெண்ட்ஸ் சூப்பரா இருக்கும்... இப்போ விமர்சனமே நல்லா இருக்கு... படம் பர்த்து நொந்த மனச விமர்சனம் போட்டு ஆத்திடிங்க... மிக்க நன்றிகள்...இதுல ஹிந்தி டபாங் வேற பார்த்துட்டு இந்த படத்த பார்த்தேன்...

    ReplyDelete
  5. நன்றி..நன்றி..நன்றி..அடுத்து டர்ட்டி பிட்சர்ஸ்க்கு விமர்சனம் எழுத சொல்லி சதி நடக்குது. நான் எழுதி எனக்கு இருக்குற ஆயிரக்கணக்கான பெண் ரசிகை (சரி..சரி..ரெண்டு ..மூனு தான்!)கூட்டத்தை கலைக்கனும்..அதானெ வேனும்..! ஹிம்..!

    ReplyDelete
  6. செம காமடி போங்க

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நண்பனுக்கு கடிதம் - 1

வ குவாட்டர் கட்டிங் - விமர்சனம்

நண்பன் பொட்டி சிவாவுக்கு ஒரு கண்ணீர் கடிதம்..!