ராஜமொக்கை - விமர்சனம்


ஒரு டைரக்டருக்கு இவ்வளவு கொலவெறி இருக்குமான்னு கொலை நடுங்கி போய், இந்த விமர்சனத்த எழுதுறேன். பல்ல கடிச்சிக்கிட்டு இந்த படத்த பல தவணையில பாத்துட்டு இந்த பாவத்த செய்றேன். ஒரு ஒலக விகர்சகனா (சரி..சரி..உள்ளூர் தான்..!) இந்த படத்த பாக்க ஆரம்பிக்கும் போதே..உள்ளுக்குள்ள மணி அடிக்கக் ஆரம்பிச்சுடுது. இது கோடம்பாக்கம் பிரிஜ் பக்கத்துல கல்வெட்டில செதுக்கி பக்கத்துலேயே உட்காந்து பாதுகாக்க வேண்டிய படம்னு.

இதுக்கு துணை போன கொலை கார பாவிங்களோட லிஸ்ட் இதுதான், விக்ரம்(சொம்புவே பரவாயில்லை..ஹிம்), டைரக்டர் சுசீந்திரன்(என்னாது..இவரு ரெண்டு ஹிட்டு படம் குத்தாரா..சொல்லவேயில்ல...!), மியுசிக் – யுவன் (ஒன்ன பெத்ததுக்கு ஒரு தென்னை மரத்த பெத்துருந்தா கள்ளாவது குடிக்கலாம்..ஹிம்..).

படம் புதுமையிலும் புதுமையா ரவுடிகள் அராஜகத்துல ஆரம்பிக்குது. ஒரு வில்லி ஒரு நாப்பது ஜினியர் ஆர்டிஸ்ட் புடை சூழ நடந்து வராங்க (சொர்ணாக்கா சித்தி போண்ணா இருக்குமோ?). அவங்க வரும் பொது பாம்பு மியுசிக் போகும் பொது, சீட்டுக்கு அடியில பாம்பு போற எபெக்ட் உருவாக்குறது, திரை உலகில் ஒரு தனி பாணியே உருவாக்க போகுதுனு சொல்லலாம்.

ஹீரோ கார கொழம்ப தலைல கொட்டிக்கிட்டு (ஹிம் கலரிங் கர்மம்தான்), பாதி செரைச்ச தலையோட, ரவுடிகளை ரவுண்டு கட்டி அடிக்குராறு. அப்போ ஹீரோயின் கூடத்துக்கு நடுவுலே மறைஞ்சு நின்னு வேடிக்கை பாக்குறாங்க (பயமா இருக்காம் பாப்பாவுக்கு!?). அப்போ ஹிரோயுனுக்கு ஹீரோ மேல காதல் வருதுன்னு , ரொம்ப புதுமையா காட்சிய செதுக்கி இருக்காங்க. ஹீரோ , சினிமால பெரிய வில்லனாவுமனு, அடியாளா நடிக்கிராறு. எதோ ஜிம் பாய் கேரக்டராம். அவர சுத்தி பத்து வருஷமா ஷேவ் பண்ணாத ரவுடி நடிகர்களும் சுத்தி வராங்க.

கதை படி (டைட்டில்ல அப்டிதான் போடறாங்க) ஒரு தாத்தாவோட சொத்தான அனாதைகள் ஆசிரமத்த எழுதி வாங்க அவரு மகன் என்ன என்னவோ டைவ் எல்லாம் அடிக்குராறு. தாத்தா மறுக்க அவர் கொலை பன்ன திட்டம் போடறாரு( தாத்தாவோட மொக்கை தாங்காம, மகன் வில்லன் நினைக்குறது நடந்துடாந்துடா தானு ரசிகர்கள் ஏமாந்து ஏமாற்றம் அடைய வைக்கிறது திரை கதையில புது பாணிதான் சொல்லணும்).

தற்செயலா ஹிரோ தாத்தாவ காப்பத்துராறு. (ஹீரோ எப்பவுமே நல்லது பன்னுவார்னு எதிர்பாக்க முடியுமா). முன்னுறு கோடி சொத்து உள்ளவரு (எப்பவுமே தெரு கொடியில தான் சுத்தி கிட்டு இருக்காரு) ஹீரோ காப்பாத்தி தன்னோட ரூம்ல தங்க வச்சிருக்காரு. காப்பத்துனதுக்கு பிரதி பலனா விக்ரோமோட காதலுக்கு (காதலுக்கு வயசு ஒரு பொருட்டு இல்லன்னு வள்ளுவரே சொல்லி இருக்காராம்.) தாத்தா உதவி பண்றாரு. (அவரு சொல்ற ஐடியாவெல்லாம் இப்ப பாலோ பன்னா பொண்ணுங்க மொக்க தாங்காம செருப்பாலே அடிப்பாங்க). ஹீரோயுனும் லவ் பண்றாங்க.

வில்லன் , வில்லி யோட சேந்துகிட்டு தாத்தாவ ஏமாத்தி ஆசிரமத்த எழுதி வாங்க ரிஜிஸ்தர் ஆபிஸ்க்கு கூட்டி போறாங்க. அப்போ ஹீரோ உள்ள புகுந்து ரிஜிஸ்ட்றாருக்கு லஞ்சம் குடுத்து ஆட்டத்த கலைச்சு திட்டத்த தவுடு போடி ஆக்கிடுராறு. அப்போதான் யாருமே எதிர் பாக்கதா வகையில, ஹீரோயின கடத்தி கிட்டு போய்டுராங்க. அந்த திடுக்கிடும் சம்பவம் நடந்தொன, வெளிய சிகரெட் அடிச்சுகிட்டு இருந்த எல்லாம் உள்ள ஓடிவந்து பாத்துட்டு, மருபடி வெளிய போய் இன்னொரு சிகெரட் பத்தவக்கிராங்க. வெளிய குளிர் அதிகமா இருக்குன்னு, சினிமா தியேட்டர் வந்து தூங்கி கிட்டு இருந்தவங்க எல்லாம், திடுக்கிட்டு எழுமபி மருபடி தூங்கி போறாங்க.

ஹீரோயின் கடத்தி வச்சிருக்குற கும்பல், பொழுது போகாம சீட்டு விளையாடாரங்க.(கேரம் விளையாண்டா வெளிய சத்தம் கேக்குமில்ல்ல!) ஹீரோயினனுக்கு போர் அடிக்குது சொல்ல, மொபைல் போன்ல கேம்ஸ் இருக்கு விளையாடுமான்னு எடுத்து விளையாடுமான்னு சொல்றாங்க. ஹீரோயின் புத்திசாலி தனமா அந்த செல் போன் முலமா ஹீரோவுக்கு கால் பண்ணறாங்க. அப்போ ஹீரோ ஏதாவது அடையாளம் சொல்லு என்கிருக்கன்னு கேட்க, வெளிய ஒரு ஸ்ட்ரீட் லைட் தெரியுதுன்னு ஹீரோவுக்கு துப்பு குடுக்குராங்க.
உடனே. ஹீரோ, மின் வாரியத்துக்கு போன் பண்ணி இப்போ எங்க சிட்டியில கரண்ட் இருக்குன்னு கேட்க்குராறு. மின் வாரியமோ..சிட்டியில அதுக்கு வாய்ப்பே இல்ல , வேணும்னா நெய்வேலி போய் தேடி பாருங்கன்னு சொல்றாங்க.

ஹீரோவும் ஒரு ஸ்ட்ரீட் லைட் தேடி பைக்ல பொய் இன்வேர்ட்டர் யூஸ் பண்ணி எரியரத வச்சு கண்டு புடுச்சி எதிரிகளை பந்தாடுராறு. சண்டை முடிஞ்சு யாருமே எதிர் பாரா விதமா ஒரு டுயட் போட்டு தியேட்டர்ல சிகரெட் வியாபாரத்த பெருக்கிக்கிராங்க..!

ஹீரோ செய்யும் காமெடி காட்சிகளில் ரசிகர்கள் சிரிச்சு சத்தம் போடாமல் அமைதியா உட்காந்து ரசிக்கிறது, ரசிகரோகளோட சகிப்பு தன்மை வளர்ததுக்கு ஊக்கமா இருக்கு. திடிர்னு ஒரு ரசிகர் சத்தம் போட்டு சிரிக்க எல்லாரும் அவர திரும்பி பாக்குறாங்க. அவரோ செல்போன்ல வந்த மொக்க எஸ் எம் எஸ பாத்து சிரிச்சுகிட்டு இருக்காரு. மற்ற ரசிகர் எல்லாம் அவர பொறாமையோட உத்து பாக்குறாங்க..!

வில்லி ரோல் சொதப்புரத டைரக்டர் ஷீட்டிங் முடியறதுக்குள கண்டுபுடிச்சு, இன்னொரு வில்லன அறிமுக செய்றாரு. அவரு ஒரு கைல பத்து பேரையும் , ரெண்டு கைல அஞ்சு பேரையும் அடிக்கிற அளவுக்கு ஸ்ட்ராங்கா இருக்காரு. வில்லி இவரு மூலமாதான் நில அபகரிப்பு செய்றாங்கன்னு ஆடியன்ஸ்க்கு தெரியும் பொது, தியேட்டர் அப்டியே உறைஞ்சு பொய் கிடக்கு. அவர கடத்தி வந்துட்டு ஹிரோ பல வேடங்கல்ல வந்து டார்ச்சர் பண்ணி உண்மைய வெளிய கொண்டுவராறு. (அப்போ அவருக்கு வேஷம் போட்ட மேக்கப் மேனாலேயே மேக்கப் முடிஞ்சு அவர கண்டுபுடிக்க முடியலையாம், அப்டின்னு, யூனிட் காரங்க எல்லாம் பேசி..பேசி புல்லரிச்சு போறாங்க..!)

வில்லி , வில்லன கொன்ன அப்புறம் (ஹீரோதான் கொல்லனும்னு சங்கத்துல ஒன்னும் ரூல்ஸ் இல்லியே..!) வில்லி கோர்ட் வாசல்ல அவரால பாத்திக்க பட்ட ஒருத்தறாலே , ஒரே குத்துல குத்தில கொள்ள படுராறு. (நம்ம ஆளுங்க மட்டன் கடையில ஆட்டு தலையையே ரெண்டு முறை வேட்டுவாங்க..ஹிம்..)

வில்லி சாகும் பொது ஹீரோ முகத்த பாத்துகிட்டே சாகுராங்க..அப்டி சாகும் பொது மைண்டு வாய்சு கேக்குது, ‘ நடு ரோட்லே நீ சாகபோறேன்னு..!) (ஹிம்...நம்ம மைன்ட் வாய்ச எல்லாம் எவன் மைன்ட் பண்றான்...!!)

எதுக்கு எடுதொம்னே தெரியாத ஒரு டுயட்டு சாங்கு திடிர்னு படம் முடிஞ்சு ஓடும போது , எங்க மறுபடியும் படத்த முதல்லேருந்து போட்டுட்டுடங்கோளோன்னு , கூட்டம் தெறிச்சு வெளிய ஓடுது.
இதுக்கு மேலயும் இதை தியேட்டர்ல போய் பாக்கணும்னா...இதுக்கு விமர்சனம் எழுதுன என்னை உசிரோட கொளுத்திட்டு அப்புறம் போங்க..!ச்சே..!

Comments

  1. பாஸ் என்னதான் சொல்லுங்க அந்த அக்கா கரெக்டர் சூப்பர் பிகர்... பார்வையிலேயே பாலிடிக்ஸ் பண்ணுறாப்பில விடலை பசங்களை.. இவ்வளவு நாளும் எங்கே போச்சு இந்த மயில்..

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நண்பனுக்கு கடிதம் - 1

வ குவாட்டர் கட்டிங் - விமர்சனம்

நண்பன் பொட்டி சிவாவுக்கு ஒரு கண்ணீர் கடிதம்..!