ரஸ்குல்லாவின் - டீலா நோ டீலா..?


சரி..இப்பொ திரும்ப ரஸகுல்லா கதைக்கு வருவொம்.
ரஸகுல்லா எம்மெல திடீர்னு பாசமாயிட்டான். பைக்க தொட்டாலெ திட்ற பயல், கீ கொடுத்து நீ எங்க வேணா சுத்து மாப்ளன்னு சொல்றான்..ஒன்னுமெ புரியலை..
டீசர்ட் எல்லாம் கொண்டு வந்து குடுக்குறான். சரி..நம்மள கடைசி வரைக்கும் அடிமையாவெ வச்சிக்குறதுக்கு பையன் திட்டம் போடறான் எனக்கு புரிஞ்சு போச்சு.
சரி..இவனுக்கு தெரியாம திட்டம் போட்டனும்னு..ஆப்ரெஷன் கோகிலாவ ஆரம்பிச்சென். ஒரு விஷியம் என்க்கு புரியவெ இல்ல.

க்ளாஸ் ரூம்க்குள்ள வரும் போது..கோகிலா என்னதான் பாக்ற மாதிரிதான்..இருக்கு..ஆனா கன்ஃபர்ம் பன்னிக்க முடியலை. பொன்னுங்க ஒரு போட்டொ மாத்ரி. ஒரு ரூமுக்குள்ள ஒரு போட்டொ வச்சி பாத்தா எந்த ஆங்கிள்ல பாத்தாலும் நம்மள பாக்ற மாத்ரிதான இருக்கும். இந்த வில்லங்கம் மட்டும் எனக்கு அப்பொ புரியலை.

ரஸ்குல்லா ராக்கெட் அடிக்கறத மட்டும் நிறுத்தவெ இல்ல. சரி..இவன் கூடவெ இருந்ந்தா சப்ப ஃபிகர் சொப்பன சுந்தரி கூட திரும்பி பாக்காதுன்னு புரிஞ்சு போச்சு. அதுனால இந்த பசங்ககூடலாம் சேரக்கூடாதுனு..க்ளாஸ்ல பாடம் கவனிக்கற மாத்ரி நடிக்க ஆரம்பிச்சென்..அப்பொ தான் என் வாழ்கையினில் அப்டி ஒரு நெருக்கடிய ஃபேஸ் பன்னென். அதான்..படிக்கற மாத்ரி நடிக்கிற கஷ்டத்துக்கு பேசாம படிச்சுட்டு போயிடலாம். என்னா கொடுமை சார் அது..!

அந்த சமயத்துலதான் ஒரு சப்ஜெக்ட்ல ஸ்டூடன்ஸ் செமினார் எடுக்கனும் ஒரு வாத்தியார் கேட்டுகிட்டார். சரி..நம்ம ஸ்டெஜ் ஏறி ஏதாவது பேசுனா, ஒரு வேளை இவன் படிக்கிற பயல் போல இருக்குன்னு பொன்னுங்க நம்ப வாய்ப்பு இருக்குன்னு..நான் பேரு கொடுத்துட்டென். அப்பொ இந்த டைனொசர்,லோக்கல் எல்லாம் , குழம்பி போய்ட்டானுங்க..என்னாடா..இவனனுக்கும் சப்ஜெட்டுக்கும் என்னா சம்பந்தம்னு..ஆனா நானொ..பிஸியா நோட்ஸ் எடுக்குற சாக்குல இவன் கிட்டெருந்ந்து எஸ்கேப் ஆகி லைப்ரரி குள்ள புகுந்துட்டென். உள்ள நம்ம படிப்பாளிகள் எல்லாம் உட்காந்து நோட்ஸ் எடுக்குறானுங்க. என்ன பாத்தொன்ன, லைப்ரரில புக்க சுட்டுட்டு போய் வெளிய செகன்ட் ஹேண்டல விக்க தான் வந்துருக்கானொன்னு நினைச்சுட்டானுங்க (இது மாத்ரி ஏற்கனெவெ
செஞ்சிருகொம்..அதான்..ஹி..ஹி)..நான் நிஜமாவெ நோட்ஸ் எடுக்க வந்துருக்கென்..
ஃப்ரெண்ட்ஸ்னு சொல்ல..எல்லா பயலும் ஜெர்க்கா ஆயிட்டானுங்க.

வெளிய இந்த டைனொசர்..ஜன்ன்லுக்கு வெளிய கல்ல காட்டி மெரட்ட்ரான்..மரியாதையா வெளிய வான்னு.. ஒருத்தன் படிச்சு பெரிய ஆளாவுனும்னா சமுகத்துல எவ்வளவு போராட்ட்ம் பாருங்க..? ஒரு மாத்ரி ‘என்விரான்மெண்டல்” (பாருங்க அதுலயும் நம்மபேருதான் வருது..விதி விட மாடெங்குதெ..!)சம்மந்தமா ஒரு 5 நிமிஷம் பேச தயாரானென்.

அப்பொ ரஸகுல்லா உள்ள புகுந்து ஏன் உனக்கு இந்த வேண்டாத வேலைன்னு ஆட்டத்த கலைக்க பாத்தான். ஆனா நம்ம திறமைய(!?) உலகத்து காட்டனும்னு முடிவொட இருந்ந்தென். சரின்னு, ரஸகுல்லா திடீர்னு அவன் ஸ்ட்ராடிஜிய மாத்திட்டான்.
உனக்கு இந்த வாரம் ஃபுல்லா நான் ஃப்ரியா பீர் வாங்கி தரென். நீ கோகிலாவ மட்டும் எழுப்பி ஒரு கேள்வி கேளுன்னுட்டான்.

அவன் திட்டம் புரிஞ்சு போச்சு எனக்கு..எல்லாருக்கும் முன்னாடி, என்ன காமெடி பீஸ் ஆக்கி, வெளிச்சத்து கொண்டு வர ட்ரை பன்றான்னு..திருப்பி அந்த பொன்னு ஏடாகூடமா கேள்வி கேட்டா..நான் எங்க போறது பதிலுக்கு..! நான் ஒத்துக்கலை.

ஒரு மாத்ரி ஸ்டெஜ்ல ஏறி..ஒரு அஞ்சு நிமிஷம் ஒப்பெத்திட்டென். ஒரெ ஒரு பாயிண்ட்ல தான் கொஞ்சம் ஸ்லிப் ஆயிட்டென். கடல்ல இருக்குற உயிரனங்களை கொல்ல கூடாது சொன்னென். ஏன் கொல்ல கூடாது எவனொ குறுக்கு கேள்வி கேட்க (ரஸகுல்லா செட் பன்னவன் தான்..) நான் கொல்ல கூடாதுனா..கொல்ல கூடாது அவ்வள்வுதான் ..சொல்ல முடியும்னு சொல்ல..க்ளாசெ சிரிப்பா சிரிப்பா சிரிச்சு போச்சு.. ஒருத்தன ஸ்டெஜ் ஏத்தி சுத்தி விட்டு பாக்றதுன்னா நம்ம பயமக்களுக்கு என்னா ஒரு கும்மாளம் பாருங்க..ஒரு வழியா கோகிலாவ பாக்கற மாத்ரி ஒரு சீன் போட்டாச்சு..அடுத்து என்னா பன்னலாம்னு யோசிச்சிட்டு இருந்தென்.

ஆனா அடுத்த முறை ஒரு டீலிங் சொன்னான் பாருங்க ..ரஸகுல்லா..நான் நிஜமாவெ தடுமாறி தறி கெட்டு போய்ட்டென்..அந்த டீல அடுத்த பதிவுல
பாக்கலாம்..!

Comments

  1. மனக்கண்ணில் பழைய நினைவுகள்(கூத்துக்கள்), இதை இப்படி தான் சொல்லனும்.

    இவன் ஸ்டேஜில் ஏறி நம் மானத்தை வாங்கப்போகிறான் என்று பயந்திருந்த எங்களை, எங்கள் பக்கமே திரும்பாமல் செமினாரை நிறைவு செய்தீர்கள். அன்றொரு நாள் மட்டும் உங்களால் எங்களுக்குப்பெருமை தேடி தந்தீர்கள்.

    உன் இமேஜைக் கெடுக்க மறுநாள் டைனோசர் செய்த சதிவலையில் விழுந்து கள்ளுக்குடித்து (இதற்கெல்லாம் டைனோசர் செலவு செய்வான்) கிளாஸ் ரூமில் பண்ணிய அட்டகாசத்தில் எல்லோரும் எவ்வளவு அசிங்கமாக நம்மை பார்த்தார்கள் என்பதும் நினைவுக்கு வருகிறது

    அவைகள் எல்லாம் வாழ்க்கையின் சந்தோசமான நாட்கள்...

    ஹ்ம் அடுத்த டீலை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

    ReplyDelete
  2. அடுத்த டீலை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்

    ReplyDelete
  3. அடுத்த டீலை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்

    ReplyDelete
  4. மெனக்கெட்டு..யோசிச்சு ப்லாக் எழுதுனா... பசங்க..கமெண்ட்ட கூட காப்பி பேஸ்ட் பன்னி போடரானுங்கப்பா..இது நியாயாமா..?

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நண்பனுக்கு கடிதம் - 1

வ குவாட்டர் கட்டிங் - விமர்சனம்

நண்பன் பொட்டி சிவாவுக்கு ஒரு கண்ணீர் கடிதம்..!