இதுக்கு பேசாம நாலு அறை வாங்கி இருக்கலாம்..! ஹிம்..!
சரி..சும்மா இப்டி படிக்கற மாத்ரி சீன் போடறதெல்லாம் வேலைக்காகாதுன்னு புரிஞ்சு போச்சு. காரணம் என்னன்னா எல்லாரொட அரியரையும் நோட்டிஸ் போர்டுல போட்டு மானபங்க படுத்துறது நம்ம கல்லூரியின் குல வழக்கம். (என்னா கொடுமை சார் இது..?)
போர்டுல போட்டொ போடாத குறைதான். நானெ நேர்ல பாத்துருக்கென்.பொன்னுங்க நோட்டிஸ் போர்டுல எங்க சாதனைஎல்லாம் பாக்க்றதும், குபீர் குபீர்னு சிரிக்கிறதெல்லாம்.
ரஸகுல்லா வேர என்ன ஃபாலொ பன்றதுக்கு ஒரு உளவாளிய போட்ருக்கான். ஒரு காலத்துல நானும் டினொசர் கிட்ட உளவாளியா இருந்த்தால இவன் உளவு பாக்க்றது கண்டுபிடிக்கறது கஷ்டமா என்ன?
ஆனா பாருங்க டினொசர் குடுத்த ஆப்ரெஷன் எல்லாம் அடுத்தவன் கிட்ட எவ்வளவு பணம் இருக்கு, அதை எப்டி ஆட்டைய போடுறது,அவன் வீக்னெஸ் என்னன்னு கண்டு புடிக்கிரது தான். ஆப்ரெஷனுக்கு பேரு வச்சி, ஆளை தூக்கிட்டு, ஒயின் ஷாப்புக்கொ இல்ல சினிமா தியெட்டருக்கொ கடத்திட்டு போறவரைக்கும் , எல்லாமெ சீக்ரெட் கோடுதான். சிக்னல் மட்டும் தான். இப்டி புரெஃபஷனாலான டீம் நாங்கன்ரதால, எங்களை கண்டாலெ பயமக்கள் தெறிச்சு தெற்கு பக்கம் ஓட ஆரம்பிச்சானுங்க..!
லோக்கல் கிட்ட பத்தெ பத்து ரூபா இருந்தாலும் , அவனையும் ஒரு க்ளையண்டா மதிச்சு..மண்டையன (பின்னாடி பாப்பொம், இவன் சாதனை எல்லாம், எப்டியொ விட்டு போய்ட்டான்..நம்ம என்கவுண்டர்ல..!) இவனுக்கு காட்டி குடுத்துருக்கொம். ஆக்சுவலா மண்டையனுக்கெல்லாம் உளவாளியெ தேவையில்ல. பாக்கெட்ல இருக்குற 100ரூபாய எடு, அப்டினா, இல்ல மாப்ள 50ரூபாதான் இருக்குன்னு டக்னு எங்க கிட்ட மாட்டிக்கிற புத்திசாலி இவன். அதொட ஒரு மனிதன் எங்க எங்க பணம் ஒளிச்சு வச்சுருப்பானு , எனக்கு டினொசர் ஒரு ஸ்பெஷல் ட்ரெயினிங்கெ குடுத்துருக்கான்னா, பாத்துக்குங்களென்..
ஆனா பாருங்க...நான் என்னதான் செருப்படி பட்டு உளவு பாத்தாலும் டினொசர் தான் உளவுதுறை டிஐஜி. அவனா பாத்து போட்டு கொடுக்குறது தான் நமக்கு. சமயத்துல அரைபாக்கெட் கோல்ட் ஃபில்டர்தான்
கிடைக்கும். சரி..தொழில்ல வருமானம் முன்ன, பின்னதான் இருக்கும்னு நானும், ஒரு சிறந்த உளவாளியா உருவாயிட்டென்.
அந்த சந்தர்ப்பத்துல நான் ஆப்ரெஷன் கோகிலாவ ஆரம்பிக்கும் போது, டினொசருக்கு தெரியாம மூவ் பன்னனும், ஆனா உளவாளிக்கெல்லாம், தலைமை உளவாளியான அவன் எப்டியொ மோப்பம் புடிச்சுட்டான்.
சரி..பேசாம ..நம்ம கடைசி ஆயுதமான லெட்டர் எழுதிட வேண்டியாதான், அப்டினு செயல
இறங்கிட்டென்..நம்ம கை எழுத்து வேற கேவலமா இருந்ததால நல்லா எழுதியும் லெட்டர் குப்பை மாத்ரி தான் இருந்துச்சு..என்னா பன்னி தொலைக்கிறது..ஒரு வழியா எழுதி லேப்ல புக்ஸ் வைக்ற எடத்துல கோகிலா வோட ரெக்கார்ட் நோட்ல வச்சாச்சு..அப்டி வைச்சதையும் ஒரு தோழிகிட்ட சொல்லியாச்சு.அவ்வளவு தான்...ரிசல்ட் என்னான்னு காலைலெல தான் தெரியும். நைட் ஃபுல்லா, அந்த பொன்னொட மாமா அருவாளொட புல்லட்ல என்னை தொறத்துற மாத்ரியெ ஒரு கனவு..ஒரு ரெண்டு நாள் எந்த சத்தமும்
இல்ல..சரி..நல்லா யோசிச்சி முடிவு எடுப்பாங்க போலருக்குன்னு..நானும் சைலண்டாவெ இருந்தென்.
மூணாவது நாள் திரும்ப எனக்கு ஒரு லெட்டர் வந்தது..அடடா..ரீப்ளை லெட்டர்ல இருந்தா..மேட்டர் சக்ஸஸ் தான்னு..அப்டின்னு, தொடர்பு எல்லைக்கு அப்பாலெ போய் லெட்ட்ர படிச்சா..உங்க ஊரு , எங்க ஊரு அட்வைஸ் இல்ல.. திருவள்ளுவரொட திருகுறள எல்லாத்தையும் மொத்தமா போட்டு மிக்ஸில அடிச்ச மாத்ரி ஒரு அட்வைஸ் லெட்டர்.
என்னடா இது..360 டிகிரில எந்த கோணத்துல திரும்பினாலும் , நம்மள அட்வைஸ் போட்டு கொல்றாங்களென்னு.. நொந்து நூடுல்ஸ் ஆயிட்டென். ’படிச்சு உறுப்புடற வழிய பாரு’ அவ்வளவு தான சப்ஜெட்க்.அதுக்கு இவ்வளவு அட்வைஸா..? நம்ம மணிரத்னம் மாத்ரி ஒன்லைன்ல சொல்ற மேட்டர , ரெண்டு பக்கத்துக்கு எழுதி ....கடவுளெ..உனக்கு கண் இருக்கா ஒமை காட் ஹீம்..என்னா பன்றது..ஒன்னும் வழியில்ல..
கடைசி அம்பும் திரும்பி வந்தாச்சு..அடுத்து என்னா பன்னலாம் யோசிக்கும் போது, இந்த லெட்டர் மேட்டர், அவன் உளவாளி மூலமா தெரிஞ்சுடுச்சு..பைக்ல என்ன தேடுரானுங்க்ன்னு எனக்கு தெரிஞ்சு போய்ட்டு. ஆஹா..இந்த அட்வைஸ் மேட்டர் மட்டும் தெரிஞ்சா..நம்மள நடுரோட்ல மானபங்க படுத்தாம விடமாட்டானெ..ஆனா ரஸகுல்லாவொ லெட்டர் திரும்ப வந்துருக்குன்னா, மேட்டர் ஒர்க் அவுட் ஆயிடுச்சுன்னு
நினைச்சுட்டான். சம்யத்துல எதிராளி எடுக்குற முடிவு எல்லாம், நமக்கு சாதகமாத்தான் இருக்கு..!
..அப்பொதான் ரஸகுல்லா அந்த டீல சொன்னான்..
ஆயிரம் ரூபா தரென்..இந்த மேட்டர இப்டியெ விட்ரு..ஏன்னா இது அது நம்மாளுனுட்டான்.
ஆஹா..எவ்வளவொ உளவு வேலை டினொட்சருக்கு பாத்தொம்..ஆனா நம்மக்கு கிடைச்சது..டீயும் , சிகரெட்டும் தான், இவன் நம்ம சொல்றதையும் நம்பி ஆயிரம் ரூபா தரென்னு சொல்றானெ அப்டின்னு.இவன் மூவ் பன்னாலும் , இவனுக்கும் ஒரு அட்வைஸ் லெட்டர் தான் கிடைக்க போவுது..ஒழ்ஞ்சான் விரோதி.
நாமளும் வொய் ப்ளட்..சேம் ப்ளட்னுட்டு போய்ட்டெ இருக்கலாமெ..திங்க் பன்னென்.
ஆன மைண்ட்குள்ள இன்னொரு திங்கிங்...அட்வைஸாவெ இருந்தாலும் நம்மளயும் மதிச்சி ஒரு பொன்னு லெட்டர் குடுத்துறுக்கு..வெறும் (?!) ஆயிரம் ரூபாய்க்கு நம்ம ஒதுங்க்கிக்கிறதான்னு..
ஆனா அந்த் டீல் எனக்கு புடிச்சுருந்துச்சு..நான் யோசிச்சு சொல்ரெனு, மொட்டை மாடில படுத்துட்டு யோசிக்க ஆரம்பிச்சென்..அப்புறம் நடந்த திடுக்கிடும் சம்பவத்த அடுத்த பதிவுல பாக்கலாம்.
”” அப்பொதான் ரஸகுல்லா அந்த டீல சொன்னான்..
ReplyDeleteஆயிரம் ரூபா தரென்..இந்த மேட்டர இப்டியெ விட்ரு..ஏன்னா இது அது நம்மாளுனுட்டான்.
ஆஹா..எவ்வளவொ உளவு வேலை டினொட்சருக்கு பாத்தொம்..ஆனா நம்மக்கு கிடைச்சது..டீயும் , சிகரெட்டும் தான், இவன் நம்ம சொல்றதையும் நம்பி ஆயிரம் ரூபா தரென்னு சொல்றானெ அப்டின்னு “
ப்பூ, இது வடிவேல் சொந்த அக்காவையே அல்ப பேக்கரிக்காக டீல் போட்ட மாதிரில்ல இருக்கு..
உங்களுடைய திருவிளையாடலுக்கு ஒரு அளவே இல்லையா...
மாம்ஸ்... இப்பத்தான் இந்த உன்மை தெரியுது ... பிரியா கிருஸ்டோபர் மேட்டரும் ...இதுதான ...இல்லை அதுவும் .......
ReplyDeleteமாம்ஸ்... இப்பத்தான் இந்த உன்மை தெரியுது ... பிரியா கிருஸ்டோபர் மேட்டரும் ...இதுதான ...இல்லை அதுவும் .......
ReplyDeleteஅடப்பாவிகளா...நானெ பேர எல்லாம் மறந்தாலும், நீங்க மறக்க மாட்டிங்களாடா..? அந்த பொன்னு ஒரு எக்ஸ்டரனல் ஸபான்சர்.அவ்வொளதான் சொல்ல முடியும்..அதுக்கு மேல சொன்னா..வீட்ல குடிக்க தண்ணி கூட கிடைக்காது..! சத்தியத்துக்கு ..எவ்வ்வ்வ்வளவு சோதனை டா..சாகுல்..! ஹிம்..!
ReplyDelete