இல்லாத பொறந்தநாளும், போறாத காலமும்..!


ஆஹா..நம்ம நல்ல நேரம் ஒர்க் அவுட் ஆயிட்டு போலன்னு..டீச்சர் புருஷன தனியா தள்ளிட்டுபோய் பான்பராக் வாங்கிகுடுத்து , எப்டிடா என் நோட்டு ரஸ்குல்லா கைல சிக்குன்ன்னு கேட்டென்.

ஆக்சுவலா டிச்சர் புருஷனும் , ரஸ்குல்லாவும் பைக்ல எதிர்ல வரும் போது சைக்கிள்ல வந்த கோகிலா கைய நீட்டி வண்டிய நிறுத்திருக்கு. நம்ம ஆளு ரஸகுல்லா, ஆஹா நமக்குதான் பொன்னு சிக்னல் குடுக்குதுனு நினைச்சு, குஜாலா வண்டிய நிறுத்தி..(அவன் ஹைட்டுக்கு வண்டிலெருந்து குத்திச்சுருப்பான்..கடங்காரன்..)..என்ன கோகிலான்னு பவ்யமா கேட்ருக்கான். பதிலுக்கு அது இந்த நோட்ட மெண்டல் கிட்ட குடுத்துடுங்கன்னு சொல்லி குடுத்துருக்கு. பய காண்டாய்ட்டான்.

ஒரு வேளை ஏதாவது லெட்டர் இருக்குமொன்னு..ரெண்டு பயலும் நோட்ட தரொவா செக் பன்னிருக்கானுங்க. உள்ள ஒன்னும் இல்ல. ரெக்கார்ட் நோட்டுக்குள்ள வைக்கற அளவுக்கு பெரிசா
லெட்டர் எக்ஸ்செஞ் பன்றாங்கன்னா, கண்டிப்பா இது லவ் மேட்டருதான் அவனா ஒரு முடிவுக்கு வந்துட்டான். (ஹிம்..சண்டாளன் அவனுக்கு தெரியுமா வண்டி வண்டியா நான் அட்வைஸ் வாங்கி கட்டிகிறத..! யார்தான் சொல்லிகுடுத்தாங்களொ..இந்த அட்வைஸ் எல்லாம்..அப்டி வளர்த்துருக்காங்கய்யா..மின்னல் மாத்ரி..!!)

சரி..இதை வச்செ இவனை வழிக்கு கொண்டுவருவொம்னு..வந்துட்டானுங்க..இதான் நடந்த்துன்னு , கேவலம் ஒரு ஒன்னாருபா பான் பராக்க்க்கு மொத்தமா சொல்லிட்டான் நம்ம டீச்சர் புருஷன்.

சரி என்னா செய்றதுனு ..போய் அவன் கிட்ட நின்னா..நின்ன உடனெ..டீ சொல்லுங்க சார் அப்டின்ரான். ஆஹா..ஏற்கனவெ ரெண்டு மாச கடன் பாக்கி குடுக்குலைன்னு முத்து கடை அண்ணன், வென்னீர மேல ஊத்தாத குறை..இதுல இவன் வேறயா..? சரி..சைலண்டா டீய வாங்கி குடுத்து மேட்டர ஆஃப் பன்னுவொம்னு பாத்தா, பாழப்பொன ரஸகுல்லா டீயை குடிச்சிபுட்டு, கடையில இருக்குற எல்லாரையும் கூப்டு, இன்னைக்கு மெண்டலுக்கு பொறந்த நாளு, யாருக்கு என்னவேனுமொ சாப்டுங்கன்னு சொல்லிட்டான்.

ஐய்யய்யொ...(நாங்க ஏற்கனெவெ இது மாத்ரி சில கொடுமைய செஞ்சுருக்கொம்..!)அடப்பாவிகளா..என் பொறந்த நாளுக்கு நானெ ஒரு பன்னு வாங்கி தின்னது இல்லெயெடா..அவன் சொன்னத நம்பி, ஒரு கூட்டம் இருக்குற ஸ்நாக்ஸ் எல்லாம் 5 நிமிஷத்துல தின்னுட்டானுங்க.. எக்ஸ்பயரி ஆன ரொட்டிய கூட விடலை..அது ஆச்சு.20 டீ..பிஸ்கட், வறிக்கி,புழுதி, புண்ணாக்குன்னு...பழைய நியுஸ் பேப்பர தவிற எல்லாத்தையும் தின்னுட்டான்னுங்க..! பஞ்சத்துல அடி பட்ட மாத்ரி திங்கிரானுங்கய்யா..!

கடனொட கடனா 200ரூ ஏறி போச்சு..ஒரு வழியா நோட்ட குடுத்த ரஸகுல்லா, நாம இன்னைலெருந்து ஃப்ரெண்ட்ஸ்..நீ என் அடிமை இல்ல..உன் ரூட்டுல நான் கிராஸ் பண்ண மாட்டென். என்னால உனக்கு எந்த தொந்தரவும் இல்ல (இன்னுமா....!!?) நீ கோகிலாவோட நிம்மதியா இருன்னுட்டு போய்ட்டான்..அடப்பாவி..லவ் மேட்டர் டெவலப் பன்னி இவன் கிட்டருந்து 2000ரூ கரெக்ட் பன்னலாம்னு நினைச்சா, எனக்கு 200ரூ செலவு வச்சிட்டு இல்லாத ஒரு லவ்வர ஆசிர்வாதம் பன்னிட்டு போறானெனு..ஒரெ குமுறல்...

அதுக்குள்ள மேட்டர் பரவி, மெண்டல் பர்த்டெ பார்ட்டி குடுக்குறான், முத்து டீ கடையில்லன்னு, ஒரு கூட்டம் வந்துகிட்டு இருக்குறதா ரூம்லெருந்து ஒரு தகவல். மறுபடியும் ஆரம்பத்திலெருந்தா.. தப்பிச்சு எங்க ஓட்றது. ஒரு வழியா எஸ் ஆகி, கிரவுண்ட்ல இருக்குற புள்ளையார் கோவில்ல பதுங்கி இருந்தென். எட்டு மணிக்கு மேல, ரூமுக்கு வந்தா பர்த்டெ பார்ட்டி குடுன்னு எல்லா பயமக்களும் சுத்தி சுத்தி அடிக்கிறானுங்க. டேய் நம்புங்கடா..இன்னைக்கு இல்லடா என் பொறந்த நாளுன்னா , எவனும் கேட்கற நிலைமை யில்ல. டேய் காசு இல்லடா..என்ன விட்ருங்கடா, அப்டினு கதறி கதறி பாத்துட்டென். காசுஇல்லன்னா என்னா நான் கடன் தரென்னு..ஒருத்தன்..ஆஹா..இன்னைக்கு ஒரு குருப்பா முடிவொட அலையாரானுங்கப்பான்னு..ஆச்சு..எல்லாம் ஆச்சு..!

ஒரு லவ் லெட்டர் குடுத்த்து ஒரு குத்தமா..ஹிம்..ஒன்னு மட்டும் சொல்ரென் இந்த உலகத்துக்கு:

கடையில அக்கவுண்ட் இருக்குறவன் லவ் பண்ண கூடாது, லவ் பண்றவன் அக்கவுண்ட் வைக்க கூடாது..!

நல்லா கிளப்புறாங்கய்யா...பீதிய..!

முடிவு: ஒரு வழியாய் அட்வைஸ், அட்வைஸ் சாய் எழுதி என்னை சாவ அடிப்பதற்க்கும், எங்கள் படிப்பு(!?) முடிந்த்தற்க்கும் சரியா போய்ட்டு..இந்த கதை இதொட ஊத்தி மூடிட்டு..சென்னை பக்கம் கடைய கட்டுவொம்...ஜீட்...!)

பயமக்களெ..நம்ம சொர்க்க வாசல் எப்டி மாறி போச்சு பாருங்க..! மாப்ளைகளா...சாச்சுபுட்டானுங்கடா..நம்ம பழைய ஆர்ச்ச..!

Comments

  1. அதற்குள் சென்னைக்கா.. அந்த லைவ் அட்வைஸை போட்டால் கொஞ்சம் நல்லா இருக்கும்...

    அடப்பாவி..மேட்டர் டெவலப் பன்னி இவன் கிட்டருந்து 2000ரு கரெக்ட் பன்னலாம்னு நினைச்சா, எனக்கு 200ரூ செலவு பன்னிட்டு இல்லாத லவ்வர ஆசிர்வாதம் பன்னிட்டு போறானெனு..ஒரெ குமுறல்.

    ReplyDelete
  2. "கடையில அக்கவுண்ட் இருக்குறவன் லவ் பண்ண கூடாது, லவ் பண்றவன் அக்கவுண்ட் வைக்க கூடாது..! "

    இது சூப்பருங்க

    ReplyDelete
  3. நண்பர்களெ..மேலெ உள்ள கமெண்ட்டில் உள்ள சி.பி.செந்தில்குமார் ஒரு நகைச்சுவை செல்வர்..நீங்க புக்கில் படித்த பல ஜோக்குக்கு சொந்தகாரார். அவரெ..இப்டி சிரிக்கிறார்னா, நம்ம வாழ்க்கை சிரிப்பா சிரிச்சது உண்மைதான் போலருக்கு..! நன்றி தலைவா..!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நண்பனுக்கு கடிதம் - 1

வ குவாட்டர் கட்டிங் - விமர்சனம்

நண்பன் பொட்டி சிவாவுக்கு ஒரு கண்ணீர் கடிதம்..!