திசை மாறிய ராக்கெட்டும் தறிகெட்ட வாழ்க்கையும்..!


நம்ம கிளாஸ்லெயெ நல்லா படிக்ற பொன்னு ஒன்னு மேல ரஸகுல்லாவுக்கு ஒரு கண்ணு. (இதை மட்டும் எப்டி ஒன்வேல யோசிக்கிரானுங்க ..பாருங்க..?)

அந்த பொன்னு பேரு கோகிலானு வச்சுக்குவொம். அந்த பொன்னு இந்த லோக்கல் பாயும் கருப்பு சாமியும் சேந்து பன்ன அலப்பறைல பஸ்ல வராம சைக்கிள்ல வர ஆரம்பிச்சுடுச்சு. கருப்பு சாமிதான் ஒரு சைக்கொவாச்செ..யாரவது பொன்னுங்கிட்டெ பேசுனானு தெரிஞ்சா இவனுக்கு மூக்கல வேர்த்து மன்மதன் சிம்பு மாத்ரி வந்து நின்னு கலாய்ச்சாதான் அவனுக்கு அன்னைக்கு தூக்கம் வரும். அதுனால பொன்னுங்க கூட்டமா போனா பக்கதுல போய் அவங்கள உத்து பாத்து கலவராபடுத்துற்தெ இவனுக்கு பொழப்பு. அதொட பஸ்ல கூட்டத்துல சடைய புடுச்சு இழுத்துகிட்டெ இருந்ந்தா அது பாவம் என்னாதான் பன்னும்.

கோகிலா சைக்கிள்ல வர நேரமா பாத்து நம்ம ரஸகுல்லா முத்து கடையிலெருந்து பைக் எடுப்பாரு. ஒவர் டேக் பன்றது, எட்டு போடறது, சமயத்துல எம்பதெட்டு போட்ரது எல்லா வேலையும் செய்வாரு. க்ளாஸ்ல சின்ன சின்னதா பேப்பர்ல ராக்கெட் எல்லாம் செஞ்சு குறி பாத்து பொன்னுங்க மேல அடிக்கிறது ரஸகுல்லாவுக்கு புடிச்ச பொழுது போக்கு. ஒரு முறை இவன் கோகிலா மேல ராக்கெட் அடிக்க, அந்த நேரம் பாத்து நான் அவள் பக்கம் திரும்ப , என் நேரம் கெமிஸ்ட்ரி லைட்டா எனக்கு ஒர்க் அவுட் ஆகுற மாத்ரி பட்டது. இதை ரஸகுல்லாவும் கவனிச்சிட்டான்.

அப்பொ ரஸகுல்லாவுக்கொ 12 அரியர், ஆனா 11 மட்டும் தான். எனக்கோ (ஹி..ஹி அப்பொ அது வரைக்கும் மொத்த தியரி சப்ஜெக்டெ 14 தான்) ஸொ..படிப்புல நான் தான் அவனொட பெட்டர்னு முடுவு பன்னென். அதுனால ரஸகுல்லாவோட கோகிலாவுக்கு நான் தான் சரியான ஜோடின்னு நானெ முடிவு பன்னென். அப்புறம் எவன்கிட்டெஇதை கேட்டு கன்பர்ம் பன்னிக்கு முடியும் சொல்லுங்க. பழைய செருப்பாலெயெ அடிப்பானுங்க இதை சொன்னா.

ஆனா பெரிய ப்ராப்ளம் என்ன்னானா..இவன் கிட்டெ பைக் இருக்கு, நான் பொறந்தெதுலெருந்தெ நடராஜா சர்வீஸ்தான். இப்பொதான் நான் பழைய ப்லாக்ல எழுதுன பல்ப் மேட்ட்ர உங்களுக்கு நினைவு படுத்த விரும்பரென். குவார்டருக்கு ஆசை பட்டு அவன் காதல குழிதோண்டி புதைச்சவன்னு ஒரு கெட்டபேரு வேர எனக்கு. அதொட என்கிட்டெ எவனும் காதல் கடிதம் கேட்டு வரதில்ல. நான் குமுதம் ஆனந்த விகடன்லெருந்ந்து கவிதைஎல்லாம் சுட்டு லெட்டர் எழுதுரென்னு ஒரு பயலும் எங்கிட்ட லெட்டர் கேட்டு வரதில்ல. அதானால ஒரு சுய பரிசோதனை பன்னி பாத்துடுவொம்னு கோகிலாவுக்கு கோடு போட்டென்.

ஆனா கனவுல இந்த ரஸகுல்லா வேர வந்து பைக்ல தொறத்துரான். என்னா பன்றது. ஸோ..எனக்கு ரெண்டெ வழிதான். ஒன்னு ரஸகுல்லா அப்பப்பொ வாங்கி குடுக்குற பீர குடுச்சுட்டு , கடைசிவரை அவனுக்கு அடிமையா வாழனும், இல்ல அவனுக்கு எதிரா கிளம்பி கோகிலாவுக்கு கோடு போடனும். முடிவு பன்னிட்டென்..ஒரு கை பாத்துடலாம்னு.

ரஸகுல்லா எப்பவும் காப்பி தான் அடிப்பான் இல்ல பிட் அடிச்சு பாஸாகுவான். டீ, காபி மற்றும் டிபன் வாங்கி குடுத்து அவனுக்கு முன்னாடி பின்னாடி எக்ஸாம்ல உட்கார பயல்கள கரெக்ட் பன்னி வச்சிருந்தான். ஆனா என் தலை எழுத்து எனக்கு முன்னாடி பின்னாடி உட்கார தறுதலைகளுக்கு நான் பேப்பர் காட்னாதான் உண்டு. நானொ..ரெஜிஸ்டர் நம்பரெயெ அடிச்சு திருத்தி எழுதுரவன், தவிற பிட் அடிச்சா என் முழிகாட்டி குடுத்த்றாதால
அதுக்கும் வழி இல்ல..!என்னையும் நம்பி என்ன நம்பி ரெண்டு ஜீவன்.
(லோக்கல் இந்த உலகம் இன்னுமாடா நம்மள நம்புது..?)

அப்டி இருந்தும் நான் ஒரு அரியர் ரஸ்குல்லாவோட கம்மியா இருந்ந்தாலெ..நான் அவனொட புத்திசாலின்னு முடிவு பன்னென். என்னா ஒரு கன்க்லுஷன் பாருங்க. அதானாலெ கோகிலாவ எப்டியும் கரெக்ட் பன்னலாம்னு ஒரு தன்னம்பிக்கை.

அதுக்கு அப்புறம் நடந்த யூ டர்ன் திருப்பங்கள அடுத்து அடுத்து பாப்பொம்..

(மாப்ளைகளா…போட்டொல இருக்குறதுதான் நம்ம பழைய கிளாஸ் ரூம். ஆனா பசங்க் மட்டும் புதுசு. நடு ரோவுல கடைசி பெஞ்சுல ஒன்னுமெ தெரியாத அப்பாவி மாத்ரி நடுவுல உட்காந்து இருக்கானெ அதான் ரஸகுல்லாவொட சீட். அப்புறம் தர்ட் ரோவுல செகண்ட் பெஞ்சுல ரெண்டாவது இடம்தான் கோகிலாவொட சீட். பாருங்க எங்க இருந்ந்து எங்க ராக்கெட் விட்டு அட்டாக் பன்னிருக்கானு..! பசங்களுக்கு ஒரு பெட். நம்ம பசங்க இடம் எல்லாத்தையும் கரெக்ட்டா கண்டிபுடுச்சி சொல்றவஙகளுக்கு..500 ரூ ப்ரைஸ்.. 50% சொன்னாக்காகூட போதும்...அடங்கொக்கா மக்கா உண்மைலெயெ தரன்பா..நம்புங்க..ஆனா ஒரெ ஒரு ட்ரைதான்..ஒகெ..?)

Comments

Post a Comment

Popular posts from this blog

நண்பனுக்கு கடிதம் - 1

வ குவாட்டர் கட்டிங் - விமர்சனம்

நண்பன் பொட்டி சிவாவுக்கு ஒரு கண்ணீர் கடிதம்..!