தாடி மாமா – எங்கள் தங்க மாமா..!


ரஸகுல்லாவுக்கும் எனக்கும் நடந்த பாச போராட்டத பாக்கறதுக்கு முன்னாடி, இந்த வார புது வரவான (பழைய சரக்குதான்) தாடி மாமா பத்தி பாத்துடுவொம்.
நட்புக்கு இலக்கணமான தாடி மாமா, ஆளு அவசரத்துல கிளம்பி வந்த அவுரங்கசீப் மாதிரி இருப்பான். உள்ளூர் வெளியூர் அரசியல்லாம் அத்து படி என்னக்குன்னு கதை விடுவான். சீரியஸா பேப்பர் படிப்பான், அப்டி என்னா தான் படிக்கறான்னு பாத்தா "வட்ட செயலாளர் வெட்டி கொலை" அப்டின்னு ஒரு சப்ப மேட்டர படிச்சு கிட்டு கதை அளந்துட்டு இருப்பான். கொஞ்சம் விட்டா சதாம் உசென் , எங்க சித்தப்பானு சொல்லுவான்.

தெரு முனை கம்யுனிஸ்ட் பொது கூட்டத்துக்கெ ல்லாம் போய் அவங்க பேசரத கவனிச்சுட்டு, முத்து கடைக்கு வந்து உனக்கு , காரல் மாக்ஸ் தெரியுமா முசொலினிய தெரியுமான்னு..அள்ளி விடுவான். யுகொஸ்லாவியால கலவரம்னு இங்க உட்காந்துகிட்டு கவலை படுவான். ஏண்டா உன் பொது அறிவுக்கு ஒரு அளவெ இல்லையாடா மாப்ள கேட்டா நான் ஒரு மக்கள் தொண்டண்டான்னு மண்டை காய வைப்பான்.

போடொல குழந்தை புள்ள மாத்ரி இருக்கானென்னு நினைச்சுடாதீங்க. ஆளு அஞ்சி நிமிஷத்துக்குள்ள ஆறு சிகரெட்டு புடிப்பான்.

இவன் படிக்கிறப்பொ ஜீனியரா இருந்தாலும் , பழக்க வழக்கத்துல (கண்டிப்பா நல்ல பழக்கம் கிடையாது) சீனியரா இருந்ந்தான்.

எப்படியாவது படிச்சு முன்னெரனும்னு வந்தவனுக்கு செட்டு சேந்தது எல்லாம் வெளங்காம போனவனுங்கதான். எங்க செட்டாவது பரவாயில்ல (ஆமா..பெரிய ஷேவிங் செட்டு..!). முதல்ல எங்க பேச்சு எல்லாம் பாத்துட்டு , நல்லா படிக்கற பய மக்க போல இருக்குனு நினைச்சுகிட்டு எங்க செட்டுக்கு வந்து சேந்தான். அது மாத்ரி அந்நியன் ரெமொ, அம்பி மாத்ரி ரெண்டு மூனு செட்டுக்கூட இருப்பான். எனக்கு தெரிஞ்சு இவன் ஒரு நல்ல அப்சர்வர் நல்ல லிசனரும் கூட , அப்டின்னு தான் சொல்லுவென். ஒரு விஷயத்த நல்லா தெரிஞ்சுகிட்டெ புதுசா கேட்கிரவன் மாத்ரி கேட்பான். அடுத்தவன் வியு தெரிஞ்சுகிறாரம்.
சமயத்துல எப்டி டீசண்டா ஓசி சிகரட் கேட்கறது மாமு ..கொஞ்சம் சொல்லென் ..அப்டின்னு கேட்டு கடுப்பெத்துவான். சிகரெட் குடிக்கறதுல மன்னன், புகை இழுத்து இழுத்தெ..புள்ளி ராஜா மாத்ரி ஆனவன் இவன்.

படிக்கற பயல்களொட சேந்து சுத்தும் போது நான் பல முறை இவனை எச்சரிச்சுருக்கென். முடிவு பன்னு மாப்ள, ராமனா ராவனனா, பாட்ஷாவா இல்ல ஆண்டனியானு..ரஜினி மாத்ரி மெரட்டி பாத்துட்டென். ஆனா ஆளு அசரவெ மாட்டான். "நீ என் சூர்யாடா..என் தளபதிடான்னு" பதில்லுக்கு மொக்க வசனத்த அடிச்சுட்டு போய்ட்டெ இருப்பான்.

ஆனா பயலுக்கு எப்டியாவது அரியர் இல்லாம பாஸ் பண்ணனும் ஐடியா பன்னி அப்பொ அசைன்மெண்ட் எழுதுற ஹாஸ்டல் பயல்க்ள் கூட சேந்துப்பான். நைட் ஸ்டடிக்கு வந்து நைசா படிச்சுட்டு, சிகரெட்லாம் தீர்ந்து போனொன அப்புறம் வந்து எங்க மொக்க மாநாடுல சேந்துக்குவான். சத்தியமா ஒன்னுமெ படிக்கல மாமு..அப்டின்னுவான்.

எக்ஸாம்க்கு போறதுக்கு முன்னாடி அவனுக்கு தெரிஞ்சது எல்லாம் எவன் கிட்டயாவது சொல்லி பாக்றது இவன் பழக்கம். முத்து டீ கடையில உட்காந்து கிட்டு ஏ ..மச்சான் நீ கேளென்..மச்சான் நீ கேளென்னு..கருணாஸ் கணக்கா உயிர எடுத்துடுவான். மைக்ரொப்ராசர் பாடத்தை கூட, ஒரு ஊருல ஒரு மைனா இருந்ந்துச்சுன்னு கதை மாத்ரி சொல்லுவான். ஆனா போட்டு அடிச்சு பேப்பர் பாஸாயிடுவான். அப்பவெ தாடிய டிரிம் பன்னிட்டு வருவான்..ஆனா அதுக்கு யாரும் பின்னால ஒரு லவ் ஸ்டோரி உண்டுன்னு சொல்லி கேள்வி பட்ருக்கென். கட்ட பஞ்சாயத்து ஃபங்கொட சதி திட்டதையும் மீறி அரியர் எல்லாம் பாஸ் பண்ணி ஒரு வழியா சென்னை வந்து சேந்தான். வந்து சுத்தாத இடமெயில்ல வேலைக்கு, ஹிம்..ஒன்னும் வொர்க் அவுட் ஆகலை. அதெ சமயம்
வேலைக்கு சேந்தா ஐபிஎம்ல தான் சேரனும் ஒன்னும் லட்சியம் இல்ல. மீட்டருக்கு மேல போட்டு கொடுக்குற எந்த வேலைக்கும் தயாரா இருந்ந்தான். மூனு வருஷம்...இவனொட கஷ்டகாலம் தான் சொல்லனும். அப்புறம் ஒரு அஞ்சு வருஷத்து அப்புறம் சென்னை போற வழியில பாத்தென். ஆளு ஒரு ஐடி கம்பெனில யூனிக்ஸ் அட்மினா ஆயிட்டான்..

இப்பொ ஃபேஸ்புக்ல ஒன் லைன் மெசஜ் டைப் பன்றான். ரொம்ப டீசண்டா ஆயிட்டான். ஆமா ..நாம மட்டும் ஏண்டா..லோக்கல் இன்னும் தரை டிக்கடாவெ இருக்கொம். யோசிச்சு சொல்லு..!

தாடி மாமா ஒழுங்கா நம்ம பசங்களுக்கு ரீப்ளை பன்னு,

இல்ல >rmdir அப்டின்னு கமெண்ட போட்டு எல்லா பயல்களொட நட்பையும் அழிச்சுடு. (என்னா பாக்குற..எல்லாம் உன் யுனிக்ஸ் கமெண்ட்தான். ஆனா இந்த டப்பா கமெண்ட்ட கூகுள்ல கண்டு பிடிக்க அஞ்சு நிமிஷம் ஆயிட்டு…எனக்கு..ஹ்ஹிம்)

Comments

  1. Kalakal mams ... Super... THADI MAMA padichiyan avalavuthan ,,, Avana ivalavu close monitor panirruka appainu yosipan ..

    ReplyDelete
  2. Machan Pandi...Blog padichen...Kalakkitta daa..Unakulla ipadi oru Gyabaga sakthiyaa...Amazing!!! Oru professional ezhuthalar madhiriye ezhudura machi..!!...Apdiye..pazhallam kelari...oru 15 varusam..pinnadi konndu poyita...Rommba Thanks..keep it up...Sweet memories;;:-)

    ReplyDelete
  3. சம்மந்த பட்ட தாடி மாமவெ..கமெண்ட் எழுதுறானா..இந்த ப்லாகொட நம்பக தன்மைக்கு..ஒரு ISO அப்ளை பன்னலாம். என்னா லோக்கல் மாப்ள..என்னா சொல்ற..நீ..?

    (இதை எல்லாம் எழுத தூண்டி, சப்பொர்ட் பன்னிய..வெற்றி..லோக்கல்..மாப்ளைகளுக்கு நன்றி..நன்றி..நன்றி..!)

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நண்பனுக்கு கடிதம் - 1

வ குவாட்டர் கட்டிங் - விமர்சனம்

நண்பன் பொட்டி சிவாவுக்கு ஒரு கண்ணீர் கடிதம்..!