ரஸகுல்லாவும் சில அல்ல கைகளும்..!


ரஸகுல்லா ( பாதுகாப்பு கருதி பெயர் மாற்ற பட்டுள்ளது (ஹி..ஹி..என் பாதுகாப்புதான்))..!
இவன் எதுக்கு படிக்கவந்தான்னு யாருக்குமெ புரியலை.

உயரம் மூனெமுக்கால் அடிதான் இருப்பான். இந்த உயரத்துல எப்டி இவன் ஹீரொஹோண்டாலெ ஏறி வரான்னு எல்லாருக்கும் ஆச்சர்யம். அப்புறம் தான் தெரிஞ்சது இதுக்குன்னெ..ஒரு ஸ்டூல் ரெடி பன்னி வச்சிருக்கான். ஆளு கட்டையா இருந்ந்தாலும் பொன்னுங்களுக்கு கட்டம் கட்ற வேலை எல்லாம் நல்லா செய்வான். இவன் வாங்கி குடுக்க்ற பீருக்காகவெ ரெண்டு அல்லகைகள பக்கத்துல இருப்பானுங்க.. (ஹி..ஹி..நானும் கொஞ்ச நாள் ஒர்க் பன்னிருக்கனுங்கோ..!)

காலைலெ 7 மணிக்கெல்லாம் வந்து முத்து கடைல வந்து எல்லாரையும் பாத்து கெக்கெ பிக்கென்னு சிரிப்பான். குறிப்பா என்னை தேடி வந்து நாலு கெட்ட வார்த்தை திட்டாம போகவெ மாட்டான். சரி ஒரு பாசத்துல திட்டிட்டு போரானு விட்டுட்டென்..அப்புறம் சும்மாவா ஹீரொ ஹோண்டாலாம் வச்சிருக்கான்ல..!

இந்த ஈமொவும் , டீச்சர் புருஷனும் இவனொட இரு கண்கள் மாத்ரி..இரு கண்கள்னு சொல்ரொதொட இரு கரங்கள்னு சொல்லனும். அந்த கரங்கள வச்சி இவன் பின்னாடி குழி தோண்டிக்கிட்டெ போவானுங்க. ஆனா அவனொ ஒரு பனங்காட்டு நரி. எதுக்கும் அசர மாட்டான். ஒரு மணி வரைக்கும் பேசாம இருப்பான். ஒன்றை மணிக்கு எவனாயாவது ஒருத்தனை செலக்ட் பன்னி வண்டில ஏத்திகிட்டு படத்துக்கு போய்ட்டெ இருப்பான். அப்புறம் என்னா, போற வழியில ஒரு பீர் கண்டிப்பா கிடைக்கும். அப்புறம் யாரு அவன பகைச்சிக்க போரான் சொல்லுங்க. ஸொ, ஒரு பன்னிரண்டு மணி மேல அவன் கண்னுல படற
மாத்ரி நல்லா ட்ரஸ் போட்டு வெயிட் பன்னிருப்பானுங்க.

அவன் க்ளாஸ்ல இல்லாதப்ப அவனுக்கு அட்டண்டஸ் போடவும் ஆள் உண்டு. இதான் அவன் இவ்வளவு உயரத்துலயும் கடைசி பெஞ்சுல உட்கார்ற ரகசியம்.

பொன்னுங்க எல்லாரையும் முன்னாடி அனுப்பிட்டு பின்னாடியெ மொக்கஜோக் அடிச்சுட்டு
சிரிச்சுகிட்டெ வருவான். அந்த மொக்க ஜோக்க எல்லாம் கேட்டு சிரிக்க ஒரு அல்லகை லக்கெஜ் மாத்ரி பின்னாடி வரும். சமயத்துல ரெண்டு மூனு பேரல்லாம்
ஏத்திகிட்டு ரோட்ல எட்டு போடுவான். நானெ சமயத்துல நம்ம எஸ்டிஎஸ் அம்மா கார்ல துண்டு போட்டு தொத்திகிட்டு வருவாரெ, அது மாத்ரி அட்வெஞ்சர்
எல்லாம் பன்னிருக்கென்.

பாகெட்ல பென் இருக்கொ இல்லியொ, கண்டிப்பா பான் பராக் இருக்கும். சிகரெட் ஊதி தள்ளுறதுல மன்னன். சமயத்துல ஒரெ நேரத்துல ரெண்டு சிகரெட் பத்த வச்சு அடிப்பான். கேட்டா கிளாஸ்க்கு டைம் ஆச்சுல மாப்ள, அதானுவான். வண்டில இவன் தம் அடிச்சுட்டு போரத பாத்தா ,மண்னென்னைய் போட்டு ஒட்ர மீன்பாடி வண்டி மாத்ரியெ இருக்கும். அவ்வளொ புகை. பைக்ல ஏறி உட்காந்தொன்ன சைட் ஸ்டெண்ட் எடுக்குறானொ இல்லியொ, சர்ட் பாக்டெலெருந்ந்து சிகரெட்டும் , பான் பராக்கும் எடுத்துடுவான்.

படிப்பு சுட்டு போட்டாலும் வராது. ஆனா அதுக்காக கொஞ்சம் கூட வெட்கமெ படமாட்டான். சொந்த காரங்க எல்லாம் சிங்கபூர்ல, அதுனால டீசர்ட் க்கு எல்லாம் பஞ்சமெ இல்ல. என்னை கூட ஒரு டீசர்ட் தரெண்டான்னுட்டு ஒரு வருஷம் அடிமையா வச்சிருந்தான். அவன் கிட்டெ அத நான் வாங்க பட்ட பாடு இருக்கெ..அட அடா..இப்பொ நினைச்சா கூட கண்ன கட்டுது.

இப்படி ஒன்னுக்கு மன்னா, தாயா புள்ளயா இருந்து பழகின பயபுள்ள எனக்கு திடீர்னு எதிரியா மாறிட்டான். ஒரு ஃபிகர் மேட்டர்ல. அந்த திடுக்கிடும் சம்பவத்த
அடுத்த பதிவுல பாப்பொம்.

(மரியாதையா கமெண்ட் பதிவு பன்ன்லைன்னா, ரஸகுல்லாவுக்கு அல்லகையா இருந்த பயல்களை எல்லாம் போட்டொவொட வெளியிடுவென் ..ஜாக்கிரதை..)

Comments

  1. அய்யோ.. கண்முன் அந்த காட்சிகளை எல்லாம் கொண்டுவந்ததற்கு நன்றி....ரஸகுல்லாவின் எல்லா லீலைகலையும் எழுதினால் இன்னும் நல்லா இருக்கும்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நண்பனுக்கு கடிதம் - 1

வ குவாட்டர் கட்டிங் - விமர்சனம்

நண்பன் பொட்டி சிவாவுக்கு ஒரு கண்ணீர் கடிதம்..!