நண்பன் பொட்டி சிவாவுக்கு ஒரு கண்ணீர் கடிதம்..!
நண்பா..பொட்டி சிவா..உன்னை பார்க்கும் போது என் கண்கள் பனிக்கின்றன..
உதடுகள் தவிக்கின்றன..
உன் ஸ்பான்சர்ஷிப்பில் நான் உடல் வளர்த்தது என் நினைவில் நிழலாடுகின்றன..
கல்லூரியில் ஒரு வருடம் பின்னெ சேர்ந்தாய்..விதி வலியது..சமயத்தில் அது ஒரு வருடம் ஓட விட்டு துரத்தும்..
புள்ளிராஜாவை இருந்த நீ..உன்னை டெல்லி ராஜாவாய் காட்டி கொண்டாய்..
சுருட்டை முடி கொண்டு..சொட்டையை மறைத்தாய்..
கண்ணாடி போட்டு கொண்டு, கண் குழிகளை மறைத்தாய்
படிப்பில் எனக்கு இருந்த ஆர்வம் உன்னை கவர்ந்தது..
ஆனால் நீ வாங்கி கொடுக்கும் சரக்கு என்னை கவர்ந்தது..
நாம் நண்பர்களானொம்..நட்பின் இலக்கணம் ஆனொம்..
உன்னுடன் சேர்ந்து படித்து பரிட்சை எழுதவே..நான் எல்லா பேப்பரையும் அரியர் வைத்தென்..
உலகம் என்னை முட்டாள் என்றது..உருப்படாதவன் என்றது..
ஹிம்..எத்தனை பேப்பர் அரியர் என்று எண்ணும் முன்னரெ..
நீ எல்லா பேப்பரையும் முடித்து எஸ்கெப் ஆனாய்..
இன்றும் நினைவு இருக்கிறது..”இது தான் கடைசி ஒல்ட் மங்க்..என் மூஞ்சுல முழிக்காதய்யா..”
என நெஞ்சில் ஈட்டியை பாய்ச்சினாய்..
மப்பு இறங்க விட்டு தெளிந்த பின் திரும்ப திட்டிவிட்டு திரும்பி போனாய்...!
ஐயகொ....ஐந்து வருடங்கள்..உன் நினைவால் நான் வாடியபின், விதி நம்மை ஒன்று சேர்த்தது..
முகப்பெரில் உன் முகம் கண்டென்..என் உடல் சிலிர்த்தது..உள்ளம் உவர்த்தது..
சிவா..என் நன்பென்ன்ன்ன்ண்டா என்றென்..
உன் ரூமில் இருந்த ரேனிகுண்டா கும்பலிடம் அறிமுகம் செய்தாய்..
அதெ நேரம்...இவன் கடன் கேட்டா குடுக்காதீங்கன்னு சொல்லி..என்னை ஸ்பாட்டிலெயெ..
பெருமை படுத்தினாய்..
உன் ரூமுக்கு வரும்போதெல்லாம்..வந்தது வந்துட்ட..ஒசியில சாப்டு போ..என சொல்லி என்னை புல்லரிக்க வைத்தாய்.
சரக்கு பார்ட்டியில், கடைசியில் அடி வாஙக வசதியா..ரெண்டு பெக் கூட ஊற்றி தந்தாய்..
டீகடையில் வாய்க்கு வந்த படி திட்டி விட்டு..அதெ வாய்க்கு டீ வாங்கி தந்தாய்..!
ஒரு ஒசி சிகரெட் வாங்கி தர என் தலைமுறையையெ..அவமான படுத்தி, என் சகிப்பு தன்மையை வளர்த்தாய்..
மெஸ் சமையல் காரனிடம்...’இவன் சும்மாதான் இருக்கான்’ ரூம்ல,
வெங்காயம் இருந்தா குடுங்க..உரிச்சு குடுப்பான் என சொல்லி, காலத்தின் அருமையை உணர்த்தினாய்.
நான் ஒரு மைக்ரொசாஃப்ட் ஸ்பெஷலிஸ்ட்னு எவனொ சொன்னத நம்பி, செலவு பன்னி கூட்டி போய்,
கும்பொகோணத்தில் இண்டர்நெட் கனெக்ட் பன்ன சொன்னாய்.
பியர்..டூப்ளிகெட் என கண்டுபிடிக்க தெரிந்த எனக்கு, ப்ராக்சி அட்ரஸ் கொடுக்க தெரியவில்லை..
விடிய விடிய..முயற்சி செய்து..விடிவதற்குள் எஸ் ஆனென்..!
சென்னை திரும்பி வாங்கி குடுத்த பியர் எல்லாம் திரும்ப கேட்டாய்..நான் இண்டர்னெட் பற்றி விளக்க ஆரம்பிக்க..இன்னொரு பீர் வாங்கி குடுத்து தெறித்து ஓடினாய்..!
டீகடை சாந்தியை எங்கெ நான் உஷார் பன்னிடுவெனொ என எண்ணி..
எல்லார் முன்னரும் வாங்கின கடனை கேட்டு அவமான படுத்தி, அந்த பெண்ணின் வாழ்க்கையை காப்பாற்றினாய்.
என்னை கேட்காமலெயெ..பூத் விஜியை எனக்கு தங்கையாக்கினாய்..மறக்காமல்..என்னை உனக்கு மச்சான் ஆக்கினாய்..!
காலங்கள் உருண்டன..காட்சிகள் மாறின..உன் கார்டூன் முகம் மறைந்த போய்..
வருடம் பத்து ஆனது..
ஆனால் விதி வலியது.....இணையம்..நம்மை ஒன்று சேர்த்தது..
இன்று குடிக்க பக்கார்டி இருந்தாலும், உன்னிடம் பாட்டு வாங்கி குடித்தது போல் ஆகுமா நன்பா..!
ஒன்றா, இரண்டா..நீ எனக்கு செய்த உதவிகள்..
உன்ன பாத்தொன்ன வாய்க்கு வந்த படி திட்லாம்னு நினைச்சாலும்...உங்கிட்ட வாங்கி குடிச்ச விசுவாசம் என்னை தடுக்குது..! ஃபேஸ்புக் உன்னை வரவேற்க்குது!
பாண்டி - அப்பறம் இந்த பதிப்ப பார்த்தா நீ காசு வாங்கிட்டு எழுதின மாதிரி இருக்குனு சொல்லுறாங்க ... நடுநிலைமையோட இல்லன்ரங்க ... இதுலயும் ஸ்பான்ஸார் வேலை செய்யுதா (டாலர் எதாவது பேசுச்சா ...!!!!)
ReplyDeleteIdhu Ellam Unmai! Unmayai thavara veru ondrum illai!!..
ReplyDeleteI have to write one email to Pansdi...i am doing the prep work now..keep watching guys...
Pandi nee epavumay mabbulai irrupiya mamoooo...
ReplyDeletenee oru aduttha vairamuthu mamooo...
டேய்..ஜெய்சங்கர் ரகசியமா வந்து கமெண்ட் போட்ட்டு போயிருக்கான்..அடுத்த முறை அவன வலைவச்சு புடிக்கனும்..ஒகெ..அலர்ட் மாம்ஸ்..!
Deleteஎன்ன சிவா ஒரு பெர்பக்ட் ஜென்டில்மேனை இவ்வளவு அசிங்கப்படுத்தியிருக்கிராய். இருந்தாலும் இதுவரை சொரணையே வராத என் மாப்ள எப்படி உண்மையை ஒத்திருக்கிறான் பாருங்க. சிவா நீங்க எங்கிருந்தாலும் என் மாப்பிள்ளைக்கு ஒரு மாதத்திற்குன்டான சரக்கு செலவை உடனே அனுப்பி வைக்கவும்.
ReplyDelete"" மெஸ் சமையல் காரனிடம்...’இவன் சும்மாதான் இருக்கான்’ ரூம்ல,
வெங்காயம் இருந்தா குடுங்க..உரிச்சு குடுப்பான் என சொல்லி, காலத்தின் அருமையை உணர்த்தினாய்.
நான் ஒரு மைக்ரொசாஃப்ட் ஸ்பெஷலிஸ்ட்னு எவனொ சொன்னத நம்பி, செலவு பன்னி கூட்டி போய்,
கும்பொகோணத்தில் இண்டர்நெட் கனெக்ட் பன்ன சொன்னாய்.
பியர்..டூப்ளிகெட் என கண்டுபிடிக்க தெரிந்த எனக்கு, ப்ராக்சி அட்ரஸ் கொடுக்க தெரியவில்லை..
விடிய விடிய..முயற்சி செய்து..விடிவதற்குள் எஸ் ஆனென்..!
அருமை அருமை குலுங்கி குலுங்கி சிரிக்கிறேன் நண்பா..
வழக்கம்போலவே அட்டகாசம் :)) ஒரு சொட்டுக் கண்ணீர் வரனும்னு சொன்னீங்க. ஆனா நிறைய வருது, சிரிச்சதால :))))))
ReplyDeleteகமெண்ட் மாடுரேசனை எடுத்துவிடவும் :))
ReplyDelete