தாடி மாமா – எங்கள் தங்க மாமா..!
ரஸகுல்லாவுக்கும் எனக்கும் நடந்த பாச போராட்டத பாக்கறதுக்கு முன்னாடி, இந்த வார புது வரவான (பழைய சரக்குதான்) தாடி மாமா பத்தி பாத்துடுவொம். நட்புக்கு இலக்கணமான தாடி மாமா, ஆளு அவசரத்துல கிளம்பி வந்த அவுரங்கசீப் மாதிரி இருப்பான். உள்ளூர் வெளியூர் அரசியல்லாம் அத்து படி என்னக்குன்னு கதை விடுவான். சீரியஸா பேப்பர் படிப்பான், அப்டி என்னா தான் படிக்கறான்னு பாத்தா "வட்ட செயலாளர் வெட்டி கொலை" அப்டின்னு ஒரு சப்ப மேட்டர படிச்சு கிட்டு கதை அளந்துட்டு இருப்பான். கொஞ்சம் விட்டா சதாம் உசென் , எங்க சித்தப்பானு சொல்லுவான். தெரு முனை கம்யுனிஸ்ட் பொது கூட்டத்துக்கெ ல்லாம் போய் அவங்க பேசரத கவனிச்சுட்டு, முத்து கடைக்கு வந்து உனக்கு , காரல் மாக்ஸ் தெரியுமா முசொலினிய தெரியுமான்னு..அள்ளி விடுவான். யுகொஸ்லாவியால கலவரம்னு இங்க உட்காந்துகிட்டு கவலை படுவான். ஏண்டா உன் பொது அறிவுக்கு ஒரு அளவெ இல்லையாடா மாப்ள கேட்டா நான் ஒரு மக்கள் தொண்டண்டான்னு மண்டை காய வைப்பான். போடொல குழந்தை புள்ள மாத்ரி இருக்கானென்னு நினைச்சுடாதீங்க. ஆளு அஞ்சி நிமிஷத்துக்குள்ள ஆறு சிகரெட்டு புடிப்பான். இவன் படிக்கிறப்பொ ஜீனியரா இ