Weekend & Cocktails Party Sponsored By Deepak, 

நிகழ்ச்சி நிரல்:

8:00PM நண்பர்கள் வரவேற்பு,  ’’ஊரோரம் புளியமரம்…” பாடலுக்கு..தில்லையும், செந்திலும் சிறப்பு நடனம். நல்லா இடுப்ப வளச்சு நெளிச்சு ஆடுபவர்களுக்கு முதலில் சோத்து மூட்டையை திறக்கும் வாய்ப்பு!

8:10PM பிறவிகடலில் நீந்தி மூழ்கி இத்துணை வருடம் சிக்கி சின்னாபின்னமான தீபக்கின் கதறல் சொற்பொழிவு. கட்டிபிடித்து அழ, தனியறை ஏற்பாடு. 

8:20PM ’’பாழும் வயிற்றுக்காக தான் படும் பாடு.’’ .என்ற தலைப்பில் தில்லைராஜன் பேசவருகிறார். நாலு தோசைக்காக, சின்ன பிள்ளைகளிடமும் படும் துயரத்தை கண்ணீருடன் எடுத்துரைக்கிரார்.

8:30PM ’’கல்யாணம் ஆகியும் பிரம்மச்சாரி’’..என்ற தலைப்பில் குஷியுடன் பேச வருகிறார்..கேப்டன் ராஜ்குமார்…இடை இடையே..தன் மனைவியை நினைத்து கண் கலங்குகிறார்.! 

8:40PM தன்னுடைய புதுகாரின் சிறப்பை பற்றி பேச வருகிறார்..கனல் கண்ணபிரான். லைசென்ஸ் இல்லாதோருக்கு சிறப்புரை ஆற்றி வயிற்றெறிச்சலையும் கொட்டிகொள்வார். பலமுறை கேட்டவர்களுக்காக,  யுட்யுபில் கஜமுஜா படம் ஏற்பாடு.

8:50PM நடுராத்திரி ஆனாலும் பார்ட்டியில் சோறு கிடைக்கா சோகத்தை கொட்ட வருகிறார்..நட்டாம்பட்டி நடுவர்..கோபி அவர்கள்.!  ஒரு நடுவராக இருந்தும்..பேச வாய்ப்பு கிடைக்கா அவல நிலை பற்றி அங்காலாய்க்கிறார்!

9:00PM ’பல்வேறு பட்டங்கள்…’’ என்ற தலைப்பில் பேச வருகிறார். டாக்டர். மனோகரன் கார்த்திகேயன்….படிப்பின் சிறப்பினை பற்றி டிப்ளமோ ஹோல்டர்களிடன் ஒரு தனிகலந்துரையாடலும் உண்டு.

9:10PM ’’பலத்தரப்பட்ட ஃபிகர்களுடன் பாலாவின் பங்கு’’…என்ற தலைப்பில் பாலாவுடன் ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சி!  சிறப்பு விருந்தினராக ஜோதி பங்கெடுப்பார்!  இருவரையும் ஒருங்கினைக்கும் வெட்கமானமில்லா விருந்தினராக தில்லை பங்கெடுப்பார்.

9:10PM 'முட்டியின் சிறப்பு’’ பற்றின சிறப்பு விவாதம் தலைமை ஏற்று சுவற்றை பிடித்து கொண்டே தாங்கி நிற்பவர், அதிரடி அண்ணாமலை அவர்கள்...தான் ஒரு காலத்தில் ஒற்றைகாலில் நொண்டி விளையாடி எல்லாரையும் பிடித்ததை கண் கலங்க விவரிக்கிறார். 

9:15PM சிறப்பு இன்னிசைக்குழு, தென்னரசு, பாண்டி, நடுவர் கோபி யின் நிகழ்ச்சி.. குப்பை கொட்டும் தொட்டியில் சிம்பொனி இசையை கொண்டு வரும் புதிய கின்னஸ் முயற்சி.

12:00AM இறுதி நிகழ்ச்சியாக, காக்டெயில் பார்ட்டி ஏற்பாடு செய்த தீபக்கை வாயார வாழ்த்தி, ஒவ்வொரு வருடமும் இரண்டு முறை பிறந்தநாள் கொண்டாட..தீர்மானம் நிறைவேற்றபடும்!

12:10AM குடும்பஸ்தர்கள், செவுரு ஏறி குதித்து வீட்டுக்கும், பேச்சிலர்கள் காரில் பறந்து பாருக்கும்..செல்வார்கள்.!

அலைகடல் என வருக..! அன்பளிப்பை மட்டும் தவிற்க்க!

நன்றி வணக்கம்!
இப்படிக்கு,
தீப்பொறி தீபக்கிற்க்காக, கட்டதொர (எ) பாண்டியன்!



Comments

Post a Comment

Popular posts from this blog

நண்பனுக்கு கடிதம் - 1

வ குவாட்டர் கட்டிங் - விமர்சனம்

நண்பன் பொட்டி சிவாவுக்கு ஒரு கண்ணீர் கடிதம்..!