
கடலை சாகுபடி தொழில் நுட்பங்கள் ட்விட்டர்: ட்விட்டர் மாவட்டத்தில் கோடை காலத்துக்கு ஏற்ற கடலை சாகுபடி தொழில் நுட்பங்கள் குறித்து வேளாண் துறை அறிவுரை வழங்கியுள்ளது. ட்விட்டர் பயிற்சி நிலைய துணை இயக்குனர் கட்டதொர வெளியிட்ட அறிக்கை: ஃபிகர்க்கடலை என அழைக்கப்படும் கடலை சாகுபடி செய்ய இது ஏற்ற தருணமாகும். ட்விட்டர் மாவட்டத்தில் சராசரியாக 5,000 ஃபாலொயர்களிடம் இப்பயிர் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.குறிப்பாக கரிசல் மண் பகுதியான சென்னை, கோவை மற்றும் மிடில் ஈஸ்ட் நாடுகளில் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. நல்ல வகை கடலைகள் சாகுபடி மூலம் நல்ல ஃபிகர்களை பெற முடியும்.ட்விட்டர்கள் கடலை சாகுபடி தொழில் நுட்பங்களை கடைப்பிடித்து கூடுதல் ஃபிகர்களை பெறலாம். கடலை பயிர் சாகுபடி செய்ய குளிர் காலங்களான அக்டோபயர், நவம்பர் ஏற்றதாகும். எக்ஸாம் டைம் போன்ற நேரங்களில் ஃபிகர் மகசூல் குறைய நிறைய வாய்ப்பு உள்ளது. இப்பயிர் சாகுபடிக்கு குறைந்த பட்ச ஆங்கில அறிவும், நிறைய மொக்கையும் தேவை படுகிறது. இப்பயிருக்கு நிறைய ஃபிகர் கூட்டம் இருந்தால் மிகவும் உகந்தது. புது ஃபிகர்களிடம் போட நிலக்கடலையும், ...