3 - ஒரு மானங்கெட்ட விமர்சனம்





மூணு – இந்த பட்த்த தியேட்டர்ல போய் பாக்காதன்னு எவ்ளவோ கதறல்லு மத்தியிலும், என் கடமைஉணர்ச்சி என்னை கட்டி இழுக்க தியேட்டர்க்கு போய்ட்டேன் (ஓசி டிக்கட்டும் ஒரு காரணம்.!)
டிக்கட் கவுண்ட்ட்ர்ல டிக்கட் கொடுத்தவ்ன் நமுட்டு சிரிப்பு சிரிச்சான், வந்து சிக்கிட்டியான்னு..எங்களுக்கு ஏற்கனவே 2ஆம் என் புயல் எச்சரிக்கை ரேஞ்சுக்கு வார்னிங் கிடைச்சதால, இரும்பு உள்ளத்தோட உள்ள நுழைஞ்சோம்.!

குடும்பத்தோட பாக்க்வேண்டிய படம்னு சொன்னாங்க..ஆனா அவனவன் சொந்த குடும்பமா தெரியலை (எங்கதான் கரெக்ட் பன்னுவானுங்களோ :( (. கில்மா டைப் போஸ்டர பாத்துட்டு, நாலைஞ்சு ஹிந்தி காரணும் வந்து இருக்குறத பாக்க, புல்லரிச்சு போச்சு..தமிழ் சினிமா ஆஸ்கர் வாங்க்ற நாள் ரொம்ப தூரம் இல்லைன்னு.

சரி.. படம் என்னா கதை. +2 ஸ்கூல் புள்ளைங்க லவ் - எப்டில்லாம் லவ் பண்ணலாம்னு , பல செல்வராகவன் படத்த பாத்து டைரக்டர் ஐஸு (அப்டிதான் டைட்டில் சொல்லுது!!) மண்டைய கசக்கி சீன் வச்சிருக்காரு. தனுஷ் +2 படிக்கிறார்னு நம்ப நமக்கு ஒன்னும் கஷ்டமில்லைதான், அதுக்காக மீசைய செறைச்சு அதுல கருப்பு கீரிம் தடவினத்தான் ஜீரணிக்க முடியலை. சிவாகார்த்திகேயன் கூட சேந்துகிட்டு பைக்ல சுத்துராரு ஹீரோ தனுஷ். ஹீரொயின் ஸ்ருதி கைல நோட்டு புக்க நெஞ்சுல வச்சு அணைச்சு எடுத்துட்டு போவும் போது நம்ம ‘தேடல்’ ஆரம்ப்மாயிடுது. அந்த தேடல இண்டர்வெல் வரைக்கும் சுவாரசியமா கொண்டுபோனது ஒரு இயக்குனர் முத்திரைன்னுதான் சொல்லனும். ஹீரொ லவ்வி, ஹீரொயின் லவ்வி, பன்ற காதல் காட்சிகள் நம்மள சீட்டு நுனியில கொண்டாந்துடுது. பின்னாடி சீட் காரனுங்க மறைக்குது குணிஞ்சு உட்காருங்கன்னு சொல்லி, நம்ம ஆர்வத்துக்கு தடை போட்டுர்ராங்க. பட்த்துல மெல்லிய நகைச்சுவை எக்கசக்கமா இருக்கு, உதாரணத்துக்கு, ஸ்ருதி போன் பண்ணி, வீட்டுக்கு வான்னு சொல்லும் போது, தனுஷ் ஷேவ்(!?) பண்ணிகிட்டு இருப்பாரு.

இதுல இண்டர்வெல் ப்ளாக் போட்டுற்றாங்க. வழக்கமா ரெண்டாவது பாதியில் தூங்குற பழக்கம் உள்ள என் ஃப்ரெண்டு, முதல் பாதியிலெயெ தூங்கி, படம் முடிஞ்சுட்டு போலாம் வான்னு வெளிய் கிளம்புனான். இல்ல மச்சி..படம் ஒரு பாதிதான் முடிஞ்சுருக்குன்னு சொன்னா, தூக்க கலக்கத்துல நம்ப மாட்டேன்னுட்டான். அதான் கல்யாணம் முடிஞ்சுட்டே , அப்புறம் என்னான்னு? படுபாவி பயல், ஆரம்ப சீன்ல காட்டின செத்து போன ஆளு யாருன்னே கேட்கலை. அவ்ளோ அட்டகாசமான ஸ்க்ரின் ப்ளே..! ஹிம். கொடுத்து வச்சவன்.! அப்புறம் வாட்ச காட்டி அவனை நம்ம வைக்குறதுக்குள்ள...ஷப்பா.!


தாலிகட்டவேற எடமே கிடைக்காம பாவம் , பப்புக்குள்ள போய் அந்த இடநெருக்கடியில தாலி கட்ராரு ஹீரோ. ஐய்ய்ய்யொ..முதல் இரவும் இங்கியேவான்னு, ஆடியன்ஸ்லாம் பதட்ட்தோட உச்சிக்கே வந்துர்ர்ராங்க. நல்ல வேளை இல்லை.!
வீட்டுக்கு போய், ஹீரொயின் சும்மா முத்த்த அள்ளி தெளிக்குது. டைரக்டர் கட் சொல்லியும் விடாம, உடும்புபிடியா பின்னிருக்க, எழுந்து ஓடி போய் பிரிச்சு வுட்டாங்களாம் (இதான் சொந்த காசுல சூன்யம் போல..ஐஸும்மா..புருஷன பாத்துக்க!)

சரி வந்த்துக்கு நாலு பிட்டு பாத்துட்டு கிளம்புவோம்னு அவனை மனசு தேத்தவச்சு உட்கார வச்சா..திடீர்னு ஒரு மனநோய் இருக்குன்னு ஒரு மேட்டர். ஹாலுஷனேஷன்ல திடீர் திடீர்னு காட்சிகள் வந்துட்டு போவுது தனுஷ்க்கு..பீதிய கிள்ப்பிடானுங்க. சைக்கோ கேரக்டர் தான் நம்மாளுக்கு அல்வா சாப்டற மாதிரி ஆச்சே. சும்மா பின்னி எடுக்குறாரு சாரு. அடுத்து அரை மணி நேரம் நமக்கும் ஏதோ மனநோய் இருக்குமோன்னு ஒவ்வொருத்தரையும் யோச்சிக்க வச்சுடுறாரு டைரக்டர். இருட்ல தம் அடிக்க போறவன்லாம், ரியாலா, இல்ல ஹாலுஷனேஷனானு ஒரே பீதின்னா பாத்துக்குங்ளேன். என் நண்பன்..கொடுத்து வச்சவன்..பாப்கார்ன் தின்னு முடிச்சுட்டு கையோட தூங்கிட்டான். ஹீரோ செத்துட்டாருன்னு டைட்டில் போகும் போதே சொன்ன டைரக்டர், எப்டி செத்தாருன்னு இண்டர்வல் முடிஞ்சு படம் ஆரம்பிக்கும் போதே தெரிஞ்சு போய்டுது. அதுக்கு அப்புறம் இருக்கு பாருங்க நடிப்பு..அட அடா..ஃபீல்டுல இனி சைக்கோ படமே , இப்டி எவனும் எடுக்க கூடாதுன்ற மாதிரி..அப்டி ஒரு டைரக்‌ஷன்.

வழக்கமா..காதலர்கள் சுத்தி நிக்கிறவங்கள பாத்து வெட்கபட்டு லவ்வுவாங்க..மறைவா கிஸ் அடிச்சுக்குவாங்க. இதில கதையே வேற..சுத்தி நிக்கிற பயமக்கள் வெட்கத்துல கட்டை விரலால கோலம் போடுறாங்க. சில காட்சிகள்ல தனுஷ் நண்பன் இருக்கும் போதே..தனுஷ் மடியில ஸ்ருதி போய் மியுசிகல் சேர்ல ஜெயிச்ச மாதிரி உட்காந்துக்குறாங்க. (ஹாட் சீட் போல !!)

தனுஷ், சபரி மலைக்கு மாலை போட்டுட்டு வரும் போது ஒரு கும்பல் இதுகுக்கு மேல உட்காந்து ஸ்க்ரின வெறிக்கிறது வேஸ்ட்னு கிளம்புது. சில பேர், போஸ்டர்ல இருக்குற கில்மா சீன் வரலை, எப்படியும், ட்ரிம் சீக்வன்ஸ்ல போடுவாங்கன்னு நம்பிக்கையோட உட்காந்துருக்காங்க. ஆனா அவங்க வாய்ல எல்லாம் மண்ண அள்ளி போடுற மாதிரி ஸ்ருதிய திரும்பி கூட பாக்க மாட்டேங்குராரு ஹீரோ. பாட்டையெல்லாம் சரியா படமாக்கலைன்னு ஒரு பக்கம் பயமக்கள் சலம்புனாங்க. (மத்த்தெல்லாம் நல்லா இருக்காம்!)

யு ட்யுபை ஆக்ரமித்த கொலவெறி பாடல், பெசண்ட் நகர் பீச்சில் 30,000 ஜீனியர் ஆர்டிஸ்ட்களுடன் 300 கோடி பொருட் செலவில் எடுக்க பட்டுள்ளது (ங்கொய்யால..!! இதுக்கு தான் இவ்ளோ ஆர்ப்பாட்டமா..!!?)

பட பெயர்லாம் அர்த்தம் இல்லாம வச்சி, கொழப்பி அதுல மீன்புடிக்கனும் நினைச்ச டைரக்டர் வெற்றி பெற்றுருக்கார்னே சொல்லனும். இல்ல 3 விருத எதிர்பாத்து பேரு வச்சிருக்கலாம். ம்ம்..3 நாள்ல வெறும் 30 பேரு பாத்த பட்த்த, எப்டி 3 வாரம் ஓட்டி கலெக்‌ஷன் எடுப்பாங்க்ன்னு தெரியலை.!
முதல் பட்த்திலெயே தன்னை இனம் காட்டிய இளம் டைரக்டர் ஐஸீக்கு குடும்ப பொறுப்புகள் கூடி, இனி படம் எடுக்கவே கூடாதுன்னு எல்லாம் வல்ல இறைவனை வேண்டி, ...போய் புள்ளை குட்டிய படிக்க வைப்போம் – கட்டம் சரியில்லா கட்டதொர.! ச்ச்சே..!

Comments

  1. நேத்தி பீர போட்டுட்டு படத்துக்கு போனேன்!படம் முடிஞ்சதுக்கு அப்புரம் ஏன்டா போனோம்னு இன்னோரு பீர போட்டேன்! #மொத்ததுல சொ.கா.சூ

    ReplyDelete
  2. ஏய் கட்டை மாப்பி பள்ளிக்கூட பொண்ணுன்னா நெஞ்சில புத்தகத்தை அணைச்சிட்டு வாற சீனை எப்ப மாத்தப்போறாங்க ,சின்ன வயசிலேயெ பாக் எல்லாம் பிறீயா கொடுக்கிறாங்களெ.. ஆம நீ என்னாத்தை மச்சி தேடினே ? டிஸ்கோத்தையில தாலி கட்டுறதை பார்த்திட்டு இனி எம்புட்டு பயலுக டிஸ்கோத்தைக்கு பிகரும் தாலியுமா அலையப் போகுதுகளோ..

    ஏன் மாப்பி உன்னோட வயசுக்கு ஒரு கடலோரகவிதைகள்,வேதம் புதிது பார்க்கிறதை விட்டிட்டு இப்படி எங்களைப்போல சின்ன பொடியங்கள் பார்க்கிற கில்மா படங்களை பார்த்தால் எரிச்சலாத்தான் இருக்கும், போய் புள்ளகுட்டியை படிக்கவைப்பா..

    ReplyDelete
  3. நல்ல படம் பார்த்த உங்கள் மனதைரியத்தை பாராட்டி...உங்களுக்கு "விமர்சன திலகம்" பட்டம் வழங்கி பட்டயம் வழங்கிபாராட்ட அரசுக்கு உத்தரவிட எல்லாம் வல்ல அம்மாவின் பொற்ப்பாதங்கள் தொட்டு...உலக கீச்சர்கள் சங்கம் வலியுறுத்தும்...

    ReplyDelete
  4. அப்பாடா நான் தப்பிச்சேன் மாமு :-)) அடுத்தவன் காசுல சூன்யம் வைக்கைப்போனியே.. இதுக்குத்தான் போறதுக்கு முன்னாடியே எங்க கிட்ட கேட்டுட்டு போகனுங்கிறது :-))

    ReplyDelete
  5. hii.. Nice Post

    Thanks for sharing

    For latest stills videos visit ..

    www.ChiCha.in

    www.ChiCha.in

    ReplyDelete
  6. 3 பார்த்தது இல்லாம அதுக்கு விமர்சனம் பண்ற உங்களுக்கு ரொம்ப தைரியம் பாஸ்!!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நண்பனுக்கு கடிதம் - 1

வ குவாட்டர் கட்டிங் - விமர்சனம்

நண்பன் பொட்டி சிவாவுக்கு ஒரு கண்ணீர் கடிதம்..!