ஓட்ஸ் கஞ்சி குடித்தவனின் ஓலம்..!
இந்த எழவெடுத்த சமூக ஊடகம் விசித்திரம் நிறைந்த பல பதிவுகளை சந்தித்து இருக்கிறது. பல வில்லங்கமான கமெண்ட்களையும் சந்தித்து இருக்கிறது. ஆனால் இந்த பதிவு ஒன்றும் விசித்திரமானது அல்ல. நானும் ஒன்றும் புதுமையான ப்லாக்கருமல்ல.. வாழ்க்கை மேடுபள்ளத்தில் சர்வ சாதாரணமாக விழுந்து வாறும் சக ஜீவன் தான் நான். பதினெட்டு இட்லியை முழிங்கினேன். சாப்பாடை ரவுண்ட் கட்டினேன், இப்படி எல்லாம் நான் குற்றம் சாட்டபட்டிருக்கிறேன். நீங்கள் எதிர்ப்பார்ப்பீகள், இதை எல்லாம் நான் மறுக்க போகிறேன் என்று.. இதை எல்லாம் நான் ங்கொப்புரான இல்லை என்று மறுக்கப்போவது இல்லை பதினெட்டு இட்லியை சாத்தினேன், மூன்று வகை சட்னிக்காக அல்ல, இட்லி மாவு புளித்திருக்கிறதா என கண்டுபிடிக்க.. தோசையை ரவுண்ட் கட்டினேன், தோசை மொறு மொறுப்பாக இருந்ததற்க்காக அல்ல, மாவு மீந்து போய் ஃப்ரிஜில் வைக்க இடம் இல்லை என்பதற்காக.. உனக்கேன் இவ்வளவு அக்கறை, வீட்டில் உள்ள மற்ற ஜீவன்களூக்கு இல்லாத அக்கறை? நானே பாதிக்கப்பட்டேன். நேரடியாக பாதிக்கப்பட்டேன். சுயநலமென்பீர்கள், என்